• Feb 04 2025

யாழ் மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வு..!

Sharmi / Feb 4th 2025, 9:19 am
image

இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் இம்முறை தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் 'தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்' என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் தற்போது சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெற்று வருகின்றது.

யாழ் மாவட்டத்தினை பொறுத்த வரையில்  சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில், சோமசுந்தரம் அவனியு வீதியில் இருந்து மாணவர்களின் பாண்ட் வாத்தியம் மற்றும் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.

தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனால் இன்று காலை 08.04 மணிக்கு தேசிய கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

நிகழ்வில் இலங்கை இராணுவ அதிகாரிகள், பொலிஸார், மத குருமார், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



யாழ் மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வு. இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்று வருகின்றது.அந்தவகையில் இம்முறை தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் 'தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்' என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் தற்போது சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெற்று வருகின்றது.யாழ் மாவட்டத்தினை பொறுத்த வரையில்  சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.நிகழ்வின் ஆரம்பத்தில், சோமசுந்தரம் அவனியு வீதியில் இருந்து மாணவர்களின் பாண்ட் வாத்தியம் மற்றும் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனால் இன்று காலை 08.04 மணிக்கு தேசிய கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.நிகழ்வில் இலங்கை இராணுவ அதிகாரிகள், பொலிஸார், மத குருமார், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement