• May 02 2024

வடக்கு கிழக்கில் இந்தியா எதையும் செய்யக்கூடாது...! சீனா எதிர்ப்பு...! இராதாகிருஷ்ணன் எம்.பி...!samugammedia

Sharmi / Nov 9th 2023, 9:37 am
image

Advertisement

இந்தியாவுக்கு தலையையும் சீனாவுக்கு வாலையும் காட்டும் வகையில் வெளிவிவகாரக் கொள்கை இருக்கக்கூடாது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின்  பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர்  மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இந்தியா எதையும் செய்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் சீனா செயற்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. 

அதேவேளை, இலங்கையில் பொருளாதார நெருக்கடியின்போது இந்தியாதான் உதவியது என்பதை இலங்கை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும்  எனவும் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு தலையையும், சீனாவுக்கு வாலையும் காட்டும் வெளிவிவகாரக் கொள்கையை அரசு உடன் மாற்ற வேண்டும்.

இந்திய நிதி அமைச்சர் இலங்கை வந்த பின்னர் உடனடியாக சீனத்தூதுவர் வடக்குப் பகுதிக்குச் சென்று நிவாரணங்களை வழங்குகின்றார். வடக்கு - கிழக்குப் பகுதியில் இந்தியா எதையும் செய்யவிடக்கூடாது என்பதற்காக சீனா இவ்வாறு செய்கின்றதா? அல்லது இந்த நாட்டின் அபிவிருத்தியை முடக்குவதற்கு சீனா முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது இந்தியாதான் 4 பில்லியன் டொலரை வழங்கி உதவியது. 

இந்தியாவை பகைத்துக்கொள்ளும் வகையில் இந்தியாவுக்கு தலையையும்,  சீனாவுக்கு வாலையும் காட்டும் வகையில் வெளிவிவகாரக் கொள்கை இருக் கக்கூடாது.

ஒன்று இந்தியாவுடன் விசுவாசமாக இருக்கவேண்டும், இல்லையேல் சீனா வுடன் விசுவாசமாக இருக்க வேண்டும். அண்மை நாடு எது என்பதிலும் முன்னுரிமை வழங்கப்படவேண்டும். அதற்கேற்ற வகையில் வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றம்வரவேண்டும்  எனவும் தெரிவித்தார்.


வடக்கு கிழக்கில் இந்தியா எதையும் செய்யக்கூடாது. சீனா எதிர்ப்பு. இராதாகிருஷ்ணன் எம்.பி.samugammedia இந்தியாவுக்கு தலையையும் சீனாவுக்கு வாலையும் காட்டும் வகையில் வெளிவிவகாரக் கொள்கை இருக்கக்கூடாது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின்  பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர்  மேலும் தெரிவிக்கையில்,வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இந்தியா எதையும் செய்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் சீனா செயற்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. அதேவேளை, இலங்கையில் பொருளாதார நெருக்கடியின்போது இந்தியாதான் உதவியது என்பதை இலங்கை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும்  எனவும் தெரிவித்தார்.இந்தியாவுக்கு தலையையும், சீனாவுக்கு வாலையும் காட்டும் வெளிவிவகாரக் கொள்கையை அரசு உடன் மாற்ற வேண்டும். இந்திய நிதி அமைச்சர் இலங்கை வந்த பின்னர் உடனடியாக சீனத்தூதுவர் வடக்குப் பகுதிக்குச் சென்று நிவாரணங்களை வழங்குகின்றார். வடக்கு - கிழக்குப் பகுதியில் இந்தியா எதையும் செய்யவிடக்கூடாது என்பதற்காக சீனா இவ்வாறு செய்கின்றதா அல்லது இந்த நாட்டின் அபிவிருத்தியை முடக்குவதற்கு சீனா முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது இந்தியாதான் 4 பில்லியன் டொலரை வழங்கி உதவியது. இந்தியாவை பகைத்துக்கொள்ளும் வகையில் இந்தியாவுக்கு தலையையும்,  சீனாவுக்கு வாலையும் காட்டும் வகையில் வெளிவிவகாரக் கொள்கை இருக் கக்கூடாது.ஒன்று இந்தியாவுடன் விசுவாசமாக இருக்கவேண்டும், இல்லையேல் சீனா வுடன் விசுவாசமாக இருக்க வேண்டும். அண்மை நாடு எது என்பதிலும் முன்னுரிமை வழங்கப்படவேண்டும். அதற்கேற்ற வகையில் வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றம்வரவேண்டும்  எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement