• Sep 20 2024

பால் உற்பத்தியில் தன்னிறைவடைய இலங்கைக்கு உதவும் இந்தியா!

Tamil nila / Jan 6th 2023, 6:51 am
image

Advertisement

பால் உற்பத்தியை தன்னிறைவு அடையச் செய்யும் முயற்சியில், இலங்கை இந்தியாவின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB) மற்றும் சந்தைத் தலைவர் அமுல் ஆகியோரிடமிருந்து தொழில்நுட்ப உதவியை நாடியுள்ளது, இது 1990 களின் பிற்பகுதியில் தீவு முயற்சித்த ஒத்துழைப்பை மீட்டெடுக்கிறது, ஆனால் அந்த  முயற்சி அப்போது தோல்வியடைந்த நிலையில், மீண்டும் இந்தியாவில் இருந்து தொழில்நுட்ப உதவிகளைப் பெறும் முயற்சிகளை இலங்கை முன்னெடுத்துள்ளது.


இலங்கையின் விவசாய அமைச்சகம் மற்றும் தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் அதிகாரிகள், இந்தியாவில் இருந்து வந்த NDDB அதிகாரிகளுடன் "முதற்கட்ட கலந்துரையாடலை" நடத்தியதாக இலங்கை அதிபரின் ஊடகப் பிரிவு அண்மையில் தெரிவித்திருந்தது. இலங்கையின் அரச மற்றும் தனியார் துறைகளின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்றை நியமித்த அதிபர் ரணில் விக்கிரமசிங்க, NDDB உடன் இணைந்து செயற்படுவதற்கும், "இறக்குமதி பால் பவுடரை சார்ந்திருக்கும் நிலையை குறைப்பதற்கும், உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும்" முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


இந்த நிலையில், பால் மற்றும் பால் உற்பத்திகளில் இலங்கை தன்னிறைவு அடைவதற்கு இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் கொழும்பில் அதிபர் அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடலில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதன்படி, இலங்கையில் பால் உற்பத்திக்குத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை, இந்தியாவின் தேசிய பால் மேம்பாட்டு சபை (NDDB) மற்றும் (Amul) அமுல் பால் நிறுவனம் ஆகியன இணைந்து வழங்கவுள்ளன.


இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் தங்கியிருப்பதற்குப் பதிலாக உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்க குறுகிய, நடுத்தர, நீண்ட கால வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்காக இந்திய தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் பல்துறை குழுவுடன் இணைந்து பணியாற்றுவதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை அண்மையில் நியமித்தார். 


அந்தக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் இந்திய தேசிய பால் மேம்பாட்டு சபையின் (NDDB) பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கெடுத்தனர். இவ்வேலைத்திட்டம் தொடர்பான முன்னேற்றம் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.



இந்திய பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான முதல் செயலாளர் கலாநிதி ராகேஷ் பாண்டே, தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

பால் உற்பத்தியில் தன்னிறைவடைய இலங்கைக்கு உதவும் இந்தியா பால் உற்பத்தியை தன்னிறைவு அடையச் செய்யும் முயற்சியில், இலங்கை இந்தியாவின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB) மற்றும் சந்தைத் தலைவர் அமுல் ஆகியோரிடமிருந்து தொழில்நுட்ப உதவியை நாடியுள்ளது, இது 1990 களின் பிற்பகுதியில் தீவு முயற்சித்த ஒத்துழைப்பை மீட்டெடுக்கிறது, ஆனால் அந்த  முயற்சி அப்போது தோல்வியடைந்த நிலையில், மீண்டும் இந்தியாவில் இருந்து தொழில்நுட்ப உதவிகளைப் பெறும் முயற்சிகளை இலங்கை முன்னெடுத்துள்ளது.இலங்கையின் விவசாய அமைச்சகம் மற்றும் தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் அதிகாரிகள், இந்தியாவில் இருந்து வந்த NDDB அதிகாரிகளுடன் "முதற்கட்ட கலந்துரையாடலை" நடத்தியதாக இலங்கை அதிபரின் ஊடகப் பிரிவு அண்மையில் தெரிவித்திருந்தது. இலங்கையின் அரச மற்றும் தனியார் துறைகளின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்றை நியமித்த அதிபர் ரணில் விக்கிரமசிங்க, NDDB உடன் இணைந்து செயற்படுவதற்கும், "இறக்குமதி பால் பவுடரை சார்ந்திருக்கும் நிலையை குறைப்பதற்கும், உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும்" முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த நிலையில், பால் மற்றும் பால் உற்பத்திகளில் இலங்கை தன்னிறைவு அடைவதற்கு இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் கொழும்பில் அதிபர் அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடலில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, இலங்கையில் பால் உற்பத்திக்குத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை, இந்தியாவின் தேசிய பால் மேம்பாட்டு சபை (NDDB) மற்றும் (Amul) அமுல் பால் நிறுவனம் ஆகியன இணைந்து வழங்கவுள்ளன.இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் தங்கியிருப்பதற்குப் பதிலாக உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்க குறுகிய, நடுத்தர, நீண்ட கால வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்காக இந்திய தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் பல்துறை குழுவுடன் இணைந்து பணியாற்றுவதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை அண்மையில் நியமித்தார். அந்தக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் இந்திய தேசிய பால் மேம்பாட்டு சபையின் (NDDB) பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கெடுத்தனர். இவ்வேலைத்திட்டம் தொடர்பான முன்னேற்றம் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.இந்திய பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான முதல் செயலாளர் கலாநிதி ராகேஷ் பாண்டே, தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement