• Mar 02 2025

தொடரும் இந்திய கடற்றொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம்

Chithra / Mar 1st 2025, 11:12 am
image

 

எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள கடற்தொழிலாளர்களையும், படகையும், உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று (28) காலை தொடங்கிய உண்ணாவிரத போராட்டத்தை மாலையுடன் முடித்துக் கொண்ட கடற்தொழிலாளர்கள், நேற்று இரவிலிருந்து காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

அரசு அதிகாரிகள் போராட்டத்தை கைவிடுமாறு கடற்தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் கடற்தொழிலாளர்கள் அதை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்டதாக தமிழக கடற்தொழிலாளர்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டும் மற்றும் நீதிமன்ற காவலிலும் இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைச் சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடத்தில் அனைத்து விசைப்படகு கடற்தொழிலாளர்கள், நாட்டுப்படகு கடற்தொழிலாளர்கள் சிறையுள்ள கடற்தொழிலாளர்களின் குடும்பத்தினர், முக்கிய கட்சி பிரமுகர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் காலை முதல் இரவு வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மாலை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட கடற்தொழிலாளர்கள் அதே உண்ணாவிரத பந்தலில் நேற்று (28) இரவில் இருந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அமைச்சர் அல்லது மத்திய அரசு அதிகாரிகள் கடற்றொழிலாளர் பிரச்சனையில் நிரந்தர தீர்வு பெற்றுத் தருவதாக உறுதி அளிக்கும் வரை இந்த காத்திருப்பு போராட்டம் இரவு பகலாக தொடரும் என தெரிவித்துள்ளனர்.


தொடரும் இந்திய கடற்றொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம்  எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள கடற்தொழிலாளர்களையும், படகையும், உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று (28) காலை தொடங்கிய உண்ணாவிரத போராட்டத்தை மாலையுடன் முடித்துக் கொண்ட கடற்தொழிலாளர்கள், நேற்று இரவிலிருந்து காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.அரசு அதிகாரிகள் போராட்டத்தை கைவிடுமாறு கடற்தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் கடற்தொழிலாளர்கள் அதை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்டதாக தமிழக கடற்தொழிலாளர்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டும் மற்றும் நீதிமன்ற காவலிலும் இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இலங்கைச் சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடத்தில் அனைத்து விசைப்படகு கடற்தொழிலாளர்கள், நாட்டுப்படகு கடற்தொழிலாளர்கள் சிறையுள்ள கடற்தொழிலாளர்களின் குடும்பத்தினர், முக்கிய கட்சி பிரமுகர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் காலை முதல் இரவு வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் மாலை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட கடற்தொழிலாளர்கள் அதே உண்ணாவிரத பந்தலில் நேற்று (28) இரவில் இருந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய அமைச்சர் அல்லது மத்திய அரசு அதிகாரிகள் கடற்றொழிலாளர் பிரச்சனையில் நிரந்தர தீர்வு பெற்றுத் தருவதாக உறுதி அளிக்கும் வரை இந்த காத்திருப்பு போராட்டம் இரவு பகலாக தொடரும் என தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement