சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து பாகிஸ்தானை சேர்ந்த 19 பணயகைதிகளை இந்திய போர்க்கப்பல் ஐ.என்.எஸ்.மித்ரா மீட்டுள்ளது .
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த 24 மணி நேரங்களில் இந்திய போர்க்கப்பல் இரண்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடற்கொள்ளையர்களின் நடவடிக்கைகளை தடுக்க சோமாலியா மற்றும் ஏடன் வளைகுடாவில் ஐ.என்.எஸ்.மித்ரா நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
ஈரானை சேர்ந்த மீன்பிடி படகுகளை சோமாலிய கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்திருந்த தகவல் தெரிந்தவுடன் ஐ.என்.எஸ்.மித்ரா மீட்டுள்ளது. மீண்டும் மற்றொரு மீன்பிடி படகை பிடித்து வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. கொச்சியிலிருந்து 850 நாடிகல் மைல் தொலைவில் இருந்த படகை மீட்டது ஐ.என்.எஸ்.மித்ரா.
அத்துடன் மீன்பிடி படகுகளை பிடித்து பின்பு அதைகொண்டு சரக்கு கப்பல்களை கொள்ளையடிக்கும் திட்டம் இதனால் முறியடிக்கப்பட்டதாகவும் இந்திய கடற்படை மேலும் தெரிவித்துள்ளது
கடற்கொள்ளையரிடமிருந்து 19 பாகிஸ்தானியர்கள் மீட்ட இந்திய போர்க்கப்பல்.samugammedia சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து பாகிஸ்தானை சேர்ந்த 19 பணயகைதிகளை இந்திய போர்க்கப்பல் ஐ.என்.எஸ்.மித்ரா மீட்டுள்ளது .குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த 24 மணி நேரங்களில் இந்திய போர்க்கப்பல் இரண்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடற்கொள்ளையர்களின் நடவடிக்கைகளை தடுக்க சோமாலியா மற்றும் ஏடன் வளைகுடாவில் ஐ.என்.எஸ்.மித்ரா நிலைநிறுத்தப்பட்டுள்ளது.ஈரானை சேர்ந்த மீன்பிடி படகுகளை சோமாலிய கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்திருந்த தகவல் தெரிந்தவுடன் ஐ.என்.எஸ்.மித்ரா மீட்டுள்ளது. மீண்டும் மற்றொரு மீன்பிடி படகை பிடித்து வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. கொச்சியிலிருந்து 850 நாடிகல் மைல் தொலைவில் இருந்த படகை மீட்டது ஐ.என்.எஸ்.மித்ரா. அத்துடன் மீன்பிடி படகுகளை பிடித்து பின்பு அதைகொண்டு சரக்கு கப்பல்களை கொள்ளையடிக்கும் திட்டம் இதனால் முறியடிக்கப்பட்டதாகவும் இந்திய கடற்படை மேலும் தெரிவித்துள்ளது