உலகிலேயே மிகக் கொடிய மற்றும் ஆபத்தான தற்காப்புக் கலையான க்ராவ் மகா (Krav Maga) கலையானது இந்திய இராணுவ வீரர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றது.
சீன இராணுவத்தினரின் அத்துமீறலையும், அவர்களின் தாக்குதலையும் முறியடிப்பதற்காக இந்த தற்காப்புக் கலை இந்திய இராணுவ வீரர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தானை போன்றே இந்தியாவுக்கு சீனா எப்போதும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது. பாகிஸ்தான், தீவிரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பி பிரச்சினை செய்கின்றது என்றால், சீனாவோ தனது நாட்டு இராணுவ வீரர்களை அவ்வப்போது அனுப்பி எல்லைகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்திய மாநிலங்களான லடாக், அருணாச்சலப் பிரதேசம் ஆகியவற்றை வெகுநாட்களாக சீனா சொந்தம் கொண்டாடி வருகின்றது.இந்தப் பகுதிகளை ஆக்கிரமிக்க பல ஆண்டுகளாக சீனா முயற்சித்து வருகின்றது.
பொதுவாக, இந்தியா - சீனா இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி எல்லைப் பகுதிகளில் துப்பாக்கியை பயன்படுத்தக் கூடாது என்ற விதி உள்ளது. அதனால்தான், கிரிக்கெட் மட்டை, இரும்பு ராடு ஆகியவற்றுடன் சீனப் படையினர் நுழைகின்றனர்.
இவ்வாறு ஆயுதங்களுடன் வருபவர்களை 5 முதல் 10 நொடிகளில் க்ராவ் மகா தற்காப்புக் கலை தெரிந்தவரால் வீழ்த்த முடியும்.
அந்தவகையில், அதீத உடல் வலிமையையும், மன வலிமையையும் தரக்கூடிய இந்த க்ராவ் மகா தற்காப்பு கலையானது இந்திய இராணுவ வீரர்களிற்கு கற்று கொடுக்கப்பட்டு வருகின்றது.
உலகிலேயே மிகக் கொடிய தற்காப்புக் கலையை கற்கும் இந்தியர்கள். samugammedia உலகிலேயே மிகக் கொடிய மற்றும் ஆபத்தான தற்காப்புக் கலையான க்ராவ் மகா (Krav Maga) கலையானது இந்திய இராணுவ வீரர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றது. சீன இராணுவத்தினரின் அத்துமீறலையும், அவர்களின் தாக்குதலையும் முறியடிப்பதற்காக இந்த தற்காப்புக் கலை இந்திய இராணுவ வீரர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகின்றது.பாகிஸ்தானை போன்றே இந்தியாவுக்கு சீனா எப்போதும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது. பாகிஸ்தான், தீவிரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பி பிரச்சினை செய்கின்றது என்றால், சீனாவோ தனது நாட்டு இராணுவ வீரர்களை அவ்வப்போது அனுப்பி எல்லைகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய மாநிலங்களான லடாக், அருணாச்சலப் பிரதேசம் ஆகியவற்றை வெகுநாட்களாக சீனா சொந்தம் கொண்டாடி வருகின்றது.இந்தப் பகுதிகளை ஆக்கிரமிக்க பல ஆண்டுகளாக சீனா முயற்சித்து வருகின்றது. பொதுவாக, இந்தியா - சீனா இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி எல்லைப் பகுதிகளில் துப்பாக்கியை பயன்படுத்தக் கூடாது என்ற விதி உள்ளது. அதனால்தான், கிரிக்கெட் மட்டை, இரும்பு ராடு ஆகியவற்றுடன் சீனப் படையினர் நுழைகின்றனர். இவ்வாறு ஆயுதங்களுடன் வருபவர்களை 5 முதல் 10 நொடிகளில் க்ராவ் மகா தற்காப்புக் கலை தெரிந்தவரால் வீழ்த்த முடியும்.அந்தவகையில், அதீத உடல் வலிமையையும், மன வலிமையையும் தரக்கூடிய இந்த க்ராவ் மகா தற்காப்பு கலையானது இந்திய இராணுவ வீரர்களிற்கு கற்று கொடுக்கப்பட்டு வருகின்றது.