• May 03 2024

மிக வேகமாக குறைவடைந்து வரும் பணவீக்கம்: மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு! samugammedia

raguthees / Jun 2nd 2023, 1:20 am
image

Advertisement

நாட்டின் பணவீக்கம் தற்போது மிகவும் வேகமாக குறைவடைந்து வருவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

நேற்று (01)  பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர், எதிர்வரும் ஜூலை மாத இறுதிக்குள் பணவீக்கம் ஒற்றை இலக்க மதிப்பை எட்டலாம் எனவும் நம்பிக்கை வெளியிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய வங்கியின் நாணய சபை நேற்று முன்தினம் கூடிய போது, கொள்கை வட்டி வீதத்தை 2.5 வீதத்தால் குறைக்க தீர்மானித்துள்ளது.

இதற்கிணங்க, மத்திய வங்கியின் நிலையான வைப்பு வட்டி வீதம் 15 வீதத்திலிருந்து 13 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

துணை நிலை கடன் வழங்கலுக்கான வட்டி வீதத்தை 14 வீதத்திற்கும் 250 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கும் மத்திய வங்கியின் நாணயசபை தீர்மானித்துள்ளது.

பண வீக்கம் மேலும் அதிகரிக்கும் அபாயம் காணப்பட்ட போதிலும்,  கடுமையான நிதிக்கொள்கை காரணமாக, செப்டம்பர் மாதம் 70 வீத பணவீக்க அதிகரிப்பை தடுக்க முடிந்ததாக மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். 

மிக வேகமாக குறைவடைந்து வரும் பணவீக்கம்: மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு samugammedia நாட்டின் பணவீக்கம் தற்போது மிகவும் வேகமாக குறைவடைந்து வருவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.நேற்று (01)  பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர், எதிர்வரும் ஜூலை மாத இறுதிக்குள் பணவீக்கம் ஒற்றை இலக்க மதிப்பை எட்டலாம் எனவும் நம்பிக்கை வெளியிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மத்திய வங்கியின் நாணய சபை நேற்று முன்தினம் கூடிய போது, கொள்கை வட்டி வீதத்தை 2.5 வீதத்தால் குறைக்க தீர்மானித்துள்ளது.இதற்கிணங்க, மத்திய வங்கியின் நிலையான வைப்பு வட்டி வீதம் 15 வீதத்திலிருந்து 13 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.துணை நிலை கடன் வழங்கலுக்கான வட்டி வீதத்தை 14 வீதத்திற்கும் 250 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கும் மத்திய வங்கியின் நாணயசபை தீர்மானித்துள்ளது.பண வீக்கம் மேலும் அதிகரிக்கும் அபாயம் காணப்பட்ட போதிலும்,  கடுமையான நிதிக்கொள்கை காரணமாக, செப்டம்பர் மாதம் 70 வீத பணவீக்க அதிகரிப்பை தடுக்க முடிந்ததாக மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement