• Nov 22 2024

ஆகஸ்ட் மாதம் பணவீக்கம் 0.5 சதவீதமாக வீழ்ச்சி!!

Tamil nila / Sep 1st 2024, 9:03 am
image

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த ஜூலை மாதம் 2.4 சதவீதமாக பதிவாகியிருந்த பணவீக்கம், ஆகஸ்ட் மாதம் 0.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 1.5 பதிவான உணவுப் பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 0.8 சதவீதமாகவும், ஜூலையில் 2.8 பதிவான உணவல்லாப் பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 0.4 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்தன.

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம் ஆகஸ்ட்டில் 1.85 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இதற்கு உணவுப்பொருட்களின் விலைகள் மற்றும் உணவல்லாப்பொருட்கள், சேவைகளின் விலைகள், கட்டணங்களில் முறையே அவதானிக்கப்பட்ட 0.64 சதவீத மற்றும் 1.21 சதவீத வீழ்ச்சி காரணமாக அமைந்துள்ளது.

பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தைப் பிரதிபலிக்கின்ற மையப்பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் பதிவான 4.4 சதவீதத்திலிருந்து ஆகஸ்ட் மாதத்தில் 3.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இது இவ்வாறிருக்க பொருத்தமான கொள்கை வழிமுறைகள் மற்றும் உறுதியான பணவீக்க எதிர்பார்க்கைகள் என்பவற்றின் மூலம் துணையளிக்கப்பட்டு, பணவீக்கமானது எதிர்வரும் காலத்தில் இலக்கிடப்பட்ட மட்டத்தை அடைந்து, நடுத்தர காலத்தில் அம்மட்டத்துக்கு மேல் பதிவாகும் என மத்திய வங்கி எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது. 

ஆகஸ்ட் மாதம் பணவீக்கம் 0.5 சதவீதமாக வீழ்ச்சி கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த ஜூலை மாதம் 2.4 சதவீதமாக பதிவாகியிருந்த பணவீக்கம், ஆகஸ்ட் மாதம் 0.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.கடந்த ஜூலை மாதம் 1.5 பதிவான உணவுப் பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 0.8 சதவீதமாகவும், ஜூலையில் 2.8 பதிவான உணவல்லாப் பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 0.4 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்தன.கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம் ஆகஸ்ட்டில் 1.85 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இதற்கு உணவுப்பொருட்களின் விலைகள் மற்றும் உணவல்லாப்பொருட்கள், சேவைகளின் விலைகள், கட்டணங்களில் முறையே அவதானிக்கப்பட்ட 0.64 சதவீத மற்றும் 1.21 சதவீத வீழ்ச்சி காரணமாக அமைந்துள்ளது.பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தைப் பிரதிபலிக்கின்ற மையப்பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் பதிவான 4.4 சதவீதத்திலிருந்து ஆகஸ்ட் மாதத்தில் 3.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.இது இவ்வாறிருக்க பொருத்தமான கொள்கை வழிமுறைகள் மற்றும் உறுதியான பணவீக்க எதிர்பார்க்கைகள் என்பவற்றின் மூலம் துணையளிக்கப்பட்டு, பணவீக்கமானது எதிர்வரும் காலத்தில் இலக்கிடப்பட்ட மட்டத்தை அடைந்து, நடுத்தர காலத்தில் அம்மட்டத்துக்கு மேல் பதிவாகும் என மத்திய வங்கி எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement