பதவி உயர்வு பெறுவதில் பெண் பொலிஸ் அதிகாரிகள், அநீதிக்கு ஆளாகியுள்ளதாக நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை ஆட்சேர்ப்பு, பயிற்சி, பணியமர்த்தல் மற்றும் ஓய்வு பெறுதல் போன்ற அனைத்து அம்சங்களும் ஆண் பொலிஸ் அதிகாரிகளுக்கு சமமாக பெண் பொலிஸ் அதிகாரிகள் பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கான பரிந்துரைகளை ஆராய்ந்து அறிக்கையிடும் நாடாளுமன்ற தெரிவுக்குழு அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேயின் தலைமையில் கூடியது.
இதன்போது 92 பெண் தலைமை ஆய்வாளர்கள் 26 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளனர். இதனை தவிர தலைமை பொலிஸ் ஆய்வாளர் பதவியில் பெண் ஒருவர் நான்கு ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளார்.
எனினும் அவர்களின் பதவி உயர்வுகளில் கவனம் செலுத்தப்படவில்லை என்று நாடாளுமன்ற குழு குறிப்பிட்டுள்ளது.
ஆண் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் போது வெற்றிடங்கள் தொடர்பான பிரச்சினை இல்லை.
எனினும் பெண் உத்தியோகத்தர்களே வெற்றிடங்கள் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்வதாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் அதிகாரிகள் முறையிட்டுள்ளனர்.
இந்தநிலையில் அநீதி நிலைமையை தவிர்க்க, இலங்கை பொலிஸ் துறையில் 15 வீதத்துக்கும் அதிகமான பெண் அதிகாரிகள் இருப்பதால், அனைத்து பதவிகளிலும் 15 வீதப் பெண் பிரதிநிதித்துவத்திற்கான வெற்றிடங்களை உருவாக்க நாடாளுமன்றக்குழு முன்மொழிந்துள்ளது.
இலங்கையில் பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி வெளியான தகவல் பதவி உயர்வு பெறுவதில் பெண் பொலிஸ் அதிகாரிகள், அநீதிக்கு ஆளாகியுள்ளதாக நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.இதேவேளை ஆட்சேர்ப்பு, பயிற்சி, பணியமர்த்தல் மற்றும் ஓய்வு பெறுதல் போன்ற அனைத்து அம்சங்களும் ஆண் பொலிஸ் அதிகாரிகளுக்கு சமமாக பெண் பொலிஸ் அதிகாரிகள் பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கான பரிந்துரைகளை ஆராய்ந்து அறிக்கையிடும் நாடாளுமன்ற தெரிவுக்குழு அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேயின் தலைமையில் கூடியது.இதன்போது 92 பெண் தலைமை ஆய்வாளர்கள் 26 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளனர். இதனை தவிர தலைமை பொலிஸ் ஆய்வாளர் பதவியில் பெண் ஒருவர் நான்கு ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளார்.எனினும் அவர்களின் பதவி உயர்வுகளில் கவனம் செலுத்தப்படவில்லை என்று நாடாளுமன்ற குழு குறிப்பிட்டுள்ளது.ஆண் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் போது வெற்றிடங்கள் தொடர்பான பிரச்சினை இல்லை.எனினும் பெண் உத்தியோகத்தர்களே வெற்றிடங்கள் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்வதாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் அதிகாரிகள் முறையிட்டுள்ளனர்.இந்தநிலையில் அநீதி நிலைமையை தவிர்க்க, இலங்கை பொலிஸ் துறையில் 15 வீதத்துக்கும் அதிகமான பெண் அதிகாரிகள் இருப்பதால், அனைத்து பதவிகளிலும் 15 வீதப் பெண் பிரதிநிதித்துவத்திற்கான வெற்றிடங்களை உருவாக்க நாடாளுமன்றக்குழு முன்மொழிந்துள்ளது.