• Sep 21 2024

உடனடி கடன் வசதி - இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை samugammedia

Chithra / Apr 1st 2023, 9:52 am
image

Advertisement

இலங்கையில் அண்மைய நாட்களாக உடனடியாக கடன் வேண்டுமானால் இணையத்தில் பதிவிடுமாறு கோரி மோசடி செய்யும் நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம் 677 கணினி குற்ற முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடைய வெளிநாட்டவர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.


2022 ஆம் ஆண்டில், 3,400 இணைய குற்ற முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. மேலும் 25 வெளிநாட்டவர்கள் உட்பட 263 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 14 பேர் நைஜீரிய நாட்டவர்களாகும்.

இதற்கிடையில், உடனடி கடன் வழங்குகிறோம் என்ற போர்வையில் வங்கி கணக்கு தகவல் மற்றும் தேசிய அடையாள அட்டை தகவல்களை பயன்படுத்தி மோசடி செய்த சம்பவங்களும் பதிவாகியுள்ள நிலையில் அவை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

உடனடி கடன் வசதி - இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை samugammedia இலங்கையில் அண்மைய நாட்களாக உடனடியாக கடன் வேண்டுமானால் இணையத்தில் பதிவிடுமாறு கோரி மோசடி செய்யும் நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம் 677 கணினி குற்ற முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடைய வெளிநாட்டவர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.2022 ஆம் ஆண்டில், 3,400 இணைய குற்ற முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. மேலும் 25 வெளிநாட்டவர்கள் உட்பட 263 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 14 பேர் நைஜீரிய நாட்டவர்களாகும்.இதற்கிடையில், உடனடி கடன் வழங்குகிறோம் என்ற போர்வையில் வங்கி கணக்கு தகவல் மற்றும் தேசிய அடையாள அட்டை தகவல்களை பயன்படுத்தி மோசடி செய்த சம்பவங்களும் பதிவாகியுள்ள நிலையில் அவை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement