• May 10 2024

சுதந்திர கட்சிக்குள் தீவிரமடையும் உட்கட்சி மோதல்....! மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்த தயாசிறி...!

Sharmi / Apr 1st 2024, 9:37 am
image

Advertisement

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் பதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மறுத்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திபால சிறிசேனவின் வீட்டிற்கு தயாசிறி ஜயசேகர அழைக்கப்பட்டிருந்தார்.

அவர் அப்பதவியை (பிரதித் தலைவர்) ஏற்றுக்கொண்டால் அவர் மீதான குற்றப்பத்திரிக்கை வாபஸ் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியைத் தவிர வேறு எந்தப் பதவியையும் ஏற்கத் தயாரில்லை தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஆனால் கட்சியின் பொதுச் செயலாளராக துஷ்மானந்த மித்ரஷபால செயற்படுவதால் அவருக்கு அந்த பதவியை வழங்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது. 

சுதந்திர கட்சிக்குள் தீவிரமடையும் உட்கட்சி மோதல். மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்த தயாசிறி. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் பதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மறுத்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திபால சிறிசேனவின் வீட்டிற்கு தயாசிறி ஜயசேகர அழைக்கப்பட்டிருந்தார்.அவர் அப்பதவியை (பிரதித் தலைவர்) ஏற்றுக்கொண்டால் அவர் மீதான குற்றப்பத்திரிக்கை வாபஸ் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியைத் தவிர வேறு எந்தப் பதவியையும் ஏற்கத் தயாரில்லை தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.ஆனால் கட்சியின் பொதுச் செயலாளராக துஷ்மானந்த மித்ரஷபால செயற்படுவதால் அவருக்கு அந்த பதவியை வழங்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement