• Nov 25 2024

தீவிரமடையும் பொலிஸாரின் 'யுக்திய' வேட்டை...! மேலும் 897 பேர் கைது...!samugammedia

Sharmi / Jan 13th 2024, 11:44 am
image

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களை ஒடுக்கும் 'யுக்திய' பொலிஸ் விஷேட  சுற்றிவளைப்பு நடவடிக்கையில்  கடந்த 24 மணித்தியாலங்களில் 897 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு  அறிவித்துள்ளது.

அவர்களில் 24 பேர் தடுப்புக் பொலிஸ் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், கைதானவர்களில் போதைப்பொருட்களுக்கு அடிமையான 22 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, கடந்த இரு வாரங்களுக்கு மேலாக நாடளாவிய ரீதியில் 607 பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கிய வீதித் தடைகளில் பொலிஸ் நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

குறித்த நடவடிக்கையின் போது ஏராளமான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கான சந்தேக நபர்கள்  இது வரை கைதுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தீவிரமடையும் பொலிஸாரின் 'யுக்திய' வேட்டை. மேலும் 897 பேர் கைது.samugammedia நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களை ஒடுக்கும் 'யுக்திய' பொலிஸ் விஷேட  சுற்றிவளைப்பு நடவடிக்கையில்  கடந்த 24 மணித்தியாலங்களில் 897 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு  அறிவித்துள்ளது.அவர்களில் 24 பேர் தடுப்புக் பொலிஸ் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.அத்துடன், கைதானவர்களில் போதைப்பொருட்களுக்கு அடிமையான 22 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை, கடந்த இரு வாரங்களுக்கு மேலாக நாடளாவிய ரீதியில் 607 பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கிய வீதித் தடைகளில் பொலிஸ் நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.குறித்த நடவடிக்கையின் போது ஏராளமான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கான சந்தேக நபர்கள்  இது வரை கைதுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement