கட்டாரில் கொண்டாடப்படும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 32 அணிகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்தின.
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் லீக் சுற்றுகள் முடிந்து 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கி வரும் ஏழாம் திகதி வரை நடைபெற உள்ளது.
நெதர்லாந்து- அமெரிக்கா
அர்ஜென்டினா- ஆஸ்திரேலியா
ஜப்பான் - குரேஷியா
பிரேசில் - தென் கொரியா
பிரான்ஸ் - போலந்து
இங்கிலாந்து - செனெகல்
மொராக்கோ- ஸ்பெயின்
போர்சுகல் - சுவிட்சர்லாந்து
என எட்டு போட்டிகளில் 16 அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் இரவு 8.30 மற்றும் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற உள்ளன.
நடப்பு சாம்பியனாக அங்கம் வகிக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது 16 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறியுள்ளது.
இதே போல் 36 ஆண்டுகளுக்குப் பிறகு போலந்து அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
நான்கு முறை சாம்பியனான ஜெர்மனி, உலகின் இரண்டாம் நிலை அணியான பெல்ஜியம், முதல் சாம்பியன் உருகுவே உள்ளிட்ட அணிகள் லீக் சுற்றோடு வெளியேறி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக்கிண்ண கால்பந்து தொடரில் இனி நடக்கவிருக்கும் சுவாரசியங்கள் கட்டாரில் கொண்டாடப்படும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 32 அணிகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்தின. உலகக் கோப்பை கால்பந்து தொடரில் லீக் சுற்றுகள் முடிந்து 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கி வரும் ஏழாம் திகதி வரை நடைபெற உள்ளது.நெதர்லாந்து- அமெரிக்காஅர்ஜென்டினா - ஆஸ்திரேலியாஜப்பான் - குரேஷியாபிரேசில் - தென் கொரியாபிரான்ஸ் - போலந்துஇங்கிலாந்து - செனெகல்மொராக்கோ- ஸ்பெயின்போர்சுகல் - சுவிட்சர்லாந்துஎன எட்டு போட்டிகளில் 16 அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் இரவு 8.30 மற்றும் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற உள்ளன.நடப்பு சாம்பியனாக அங்கம் வகிக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது 16 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறியுள்ளது. இதே போல் 36 ஆண்டுகளுக்குப் பிறகு போலந்து அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நான்கு முறை சாம்பியனான ஜெர்மனி, உலகின் இரண்டாம் நிலை அணியான பெல்ஜியம், முதல் சாம்பியன் உருகுவே உள்ளிட்ட அணிகள் லீக் சுற்றோடு வெளியேறி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.