• May 22 2024

சர்வதேச முதல் பெண் ரோட்டரி தலைவர் இலங்கைக்கு விஜயம்

Chithra / Dec 12th 2022, 6:49 am
image

Advertisement

ரோட்டரி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் ஜெனிபர் ஜோன்ஸ் இலங்கைக்கு விஜயம் மெற்கொண்டுள்ளார்.

இவர் ரோட்டரியின் 115 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் தலைவராக திகழ்கிறார்.

நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக, இன்று (11) இலங்கை வந்துள்ளார். 


கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள ரோட்டரி கிளப் ஆஃப் வின்ட்சர்-ரோஸ்லேண்டின் உறுப்பினரான ஜோன்ஸ், வின்ட்சரில் விருது பெற்ற ஊடக நிறுவனமான Media Street Productions Inc. இன் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார்.

அவர் வின்ட்சர் பல்கலைக்கழகத்தின் ஆளுநர் குழுவின் தலைவராகவும், விண்ட்சர்-எசெக்ஸ் பிராந்திய வர்த்தக சபையின் தலைவராகவும் பதவி வகித்தார்.

ஜோன்ஸ், 1997 முதல் ரோட்டரி உறுப்பினராக இருந்து வருகிறார், மேலும் ரோட்டரியின் துணைத் தலைவர், இயக்குனர், பயிற்சித் தலைவர், குழுத் தலைவர், மதிப்பீட்டாளர் மற்றும் மாவட்ட ஆளுநராக பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சர்வதேச முதல் பெண் ரோட்டரி தலைவர் இலங்கைக்கு விஜயம் ரோட்டரி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் ஜெனிபர் ஜோன்ஸ் இலங்கைக்கு விஜயம் மெற்கொண்டுள்ளார்.இவர் ரோட்டரியின் 115 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் தலைவராக திகழ்கிறார்.நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக, இன்று (11) இலங்கை வந்துள்ளார். கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள ரோட்டரி கிளப் ஆஃப் வின்ட்சர்-ரோஸ்லேண்டின் உறுப்பினரான ஜோன்ஸ், வின்ட்சரில் விருது பெற்ற ஊடக நிறுவனமான Media Street Productions Inc. இன் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார்.அவர் வின்ட்சர் பல்கலைக்கழகத்தின் ஆளுநர் குழுவின் தலைவராகவும், விண்ட்சர்-எசெக்ஸ் பிராந்திய வர்த்தக சபையின் தலைவராகவும் பதவி வகித்தார்.ஜோன்ஸ், 1997 முதல் ரோட்டரி உறுப்பினராக இருந்து வருகிறார், மேலும் ரோட்டரியின் துணைத் தலைவர், இயக்குனர், பயிற்சித் தலைவர், குழுத் தலைவர், மதிப்பீட்டாளர் மற்றும் மாவட்ட ஆளுநராக பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement