தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலை, யுத்தக் குற்றங்கள் அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும் எனவும் அதனை மறுப்பவர்கள் குற்றவாளிகள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரால் இன்றையதினம் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முன்னாள் பிரதம மந்திரியும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவோடு ஆல்ஜசீரா ஊடகவியலாளர் நடாத்திய நேர்காணலைத் தொடர்ந்து தெற்கில் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மக்களின் கொந்தளிப்பு விழுந்துள்ளது.
படலந்த வதை முகாமை மையமாக வைத்து அதற்கு காரணமான பிரதான சூத்திரதாரியான ரணிலின் "சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை பறிக்க வேண்டும்" எனும் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கையில் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்களும் இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனக் கூறுவதில் எவ்வாறு நம்பிக்கை வைப்பது? ஒரு குற்றவாளி இன்னும் ஒரு குற்றவாளியை விசாரிக்க முடியுமா? அவ்வாறு விசாரித்தாலும் அது அரசியல் நோக்கம் கொண்டதாகவே இருக்கும்.
தெற்கில் ரணிலிற்கு எதிரான மனநிலை பட்டலந்தை வதைமுகாமை பற்றியதாகவே மட்டும் இருப்பதும் உருவாகி இனவாத தன்மையை வெளிப்படுத்துகின்றது.
யுத்த காலப்பகுதி தொடர்பிலும் யுத்த இறுதி கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தவை தொடர்பு கொள்ளும் அப்பேட்டியில் கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றிற்கும் பதில் அளிக்க ரணில் தடுமாறியதே நாம் அறிவோம். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கரிசனையோ அக்கறையோ இல்லாத மனநிலையையும் படலந்த குற்றங்களை முன்னிலைப்படுத்தி தண்டிக்கப்பட வேண்டும் எனக்கொருவது பக்க சார்பானதும் இனி வாத மனநிலையை கொண்டதுமாகும்.
அல்ஜசீரா ஊடகவியலாளர் தெற்கிலும் வடக்கிலும் நிகழ்த்தப்பட்ட வதைகள், கொடூர கொடூரங்கள் யுத்தக் காலப்பகுதி தொடர்பிலும் குற்றங்கள் கேள்விக்கணைகள் தொடுகின்ற போது தெற்கு சார்ந்து மட்டும் சிந்திப்பதும் தமிழர் தேசத்தில் நிகழ்த்தப்பட்ட யுத்த குற்றங்கள் தொடரில் கருத்துக்கள் வெளியிடாது இருப்பது இரண்டு நாடுகள் என்பதையே காட்டி நிற்கின்றது.
இரண்டு நாடுகள் என்றாலும் அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுப்பது ஒவ்வொருவரினதும் தார்மீக பொறுப்பாகும்.தற்போதும் அதனை காண முடியாமல் இருப்பது இனவாத அவல நிலையையே மீண்டும் உணர்த்துகின்றது.
பட்டர் அந்த முகாமோடு தொடர்புபட்டவர்கள் அதற்கு துணை நின்ற பாதுகாப்பு தரப்பினரும் நீதி முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவர்களே அதில் மாற்று கருத்து இல்லை காலம் கடந்தேனும் நீதி நிலைநாட்டப்படல் வேண்டும். உண்மை முழு நாட்டுக்கும் தெரிய வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச 1988/ 89 காலப்பகுதியில் மாத்தலை பிரதேசத்தில் இராணுவத்திற்கு தலைமை தாங்கிய போது அங்கு கொண்டு புதைக்கப்பட்டவர்களின் சமூக புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. தெற்கில் மேலும் பல சமூக புதைகுழிகள் தொடர்பான அறிக்கைகள் 2023 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்கா நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இது தொடர்பான அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட்ட போதும் அது தொடர்பில் தற்போதைய தேசிய மக்கள் சக்தியான மக்கள் முன்னணி வாய் திறக்காமல் அமைதி காத்து தற்போது ரணில் மீது விசாரணை எனக் கூறுவது அரசியல் நாடகமாக அமையக்கூடாது.
ஊடகவியலாளர் திஸ்சநாயகத்தின் உதவியோடு 1988/ 89 காலப்பகுதியில் நிகழ்ந்த மனித உரிமை மீறல் தொடர்பான அறிக்கைகளை தூக்கிக்கொண்டு மஹிந்த ராஜபக்சே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை நோக்கி ஓடியதை மறக்க முடியாது.
அதே மகிந்த திஸ்ச நாயகத்திற்கு 20 வருட தண்டனையை பெற்றுக் கொடுத்ததும் சர்வதேச தலையீட்டின் காரணமாக அவர் விடுதலை பெற்றுதும் மறக்க முடியாது. படலந்த கொலைகளை காரணம் காட்டி ஆட்சியை கைப்பற்றிய பின்னர் இது தொடர்பில் சந்திரிக்கா பண்டார நாயக்கரும் மகிந்த ராஜபக்சவும் அமைதி காத்தமை கொலை குற்றவாளிகளை பாதுகாத்ததாகவே கருதப்பட வேண்டும்.அவர்களும் ரணிலுக்கு கொலை குற்றவாளிகளே,தண்டிக்கப்பட வேண்டியவர்களே.
சந்திரிக்கா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்திய யுத்தம் அவர்களால் புரியப்பட்ட கொலைகள் படலந்த விடயத்தை விசாரணைக்கு உட்படுத்தாததை மறைத்து விட்டது.
தெற்கு இனவாத யுத்தத்தில் மூழ்கி இருந்தது.இனவாதம் தெற்கின் கண்களை மறைத்து நீதியை புதைத்து விட்டது என்றும் கூறலாம் .இவ்வாறு மறைத்தவர்களும் பட்டலந்தை கொலையாளிகளே. அல் ஜாசீரா ஊடகவியலாளர் கேள்விகளை கேட்கவில்லையேல் தற்போதும் நீதிக்கான குரல் எழுத்திருக்காது.
தமிழர்களை பொறுத்தவரையில் ரணிலுக்கு எதிரான விசாரணை எனக் கூறும் தேசிய மக்கள் சக்தியாகிய மக்கள் விடுதலை முன்னணி நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள். தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
சந்திரிகாவையும் மகிந்தவையும் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்திற்கு பலவந்தமாக தள்ளி தமது முன்னணி உறுப்பினர்களையும் சாதாரண கிராமிய இளைஞர்களையும் இனவாதத்திற்குள் தள்ளி தமிழர்களை இனப் படுகொலை புரிந்த இவர்களும் தண்டனைக்குரியவர்களே.
தற்போதைய ஆட்சியாளர் ரணிலுக்கு எதிராக விசாரணை நடத்துவதாக கூறுவது போல் தங்கள் மனசாட்சியை தொட்டு தங்களுக்கு எதிராக விசாரணை நடத்தினால் மட்டுமே இவர்களின் கிளீன் சிறீலங்காவிற்கு நீதி கிட்டும் இல்லையேல் அதுவும் போலியே.
தற்போதைய ஆட்சியாளர் வடக்கு கிழக்கில் நிகழ்ந்த யுத்தம் தொடர்பாக உள்ளக விசாரணை என்பதும் சர்வதேசத்தின் எந்த தலையீட்டையும் ஏற்க மாட்டோம் என்று கூறுவதற்கும் காரணம் இவர்கள் மீதும் கொலை குற்றச்சாட்டுகள் விழும் என்பதன் காரணமாகவே. கடந்த ஆட்சியாளர்களை போல பாதுகாப்பு படையினரை பாதுகாக்கும் நோக்கமேயாகும். சர்வதேச விசாரணைக்கு மறுப்பு தெரிவிப்பவர்களும் கொலை குற்றவாளிகளே.
இலங்கை வரலாற்றில் எல்லா காலப்பகுதிகளிலும் நிகழ்த்தப்பட்ட இன சுத்திகரிப்பு, இனப்படுகொலை, யுத்த குற்றங்கள் எல்லாவற்றுக்கும் இதய சுத்தியோடு விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கான தகுதி இலங்கைக்கு இல்லை என்பதே தமிழர்களின் கடந்த கால நிகழ்கால அனுபவமாகும். அதனாலையே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் யுத்த குற்றம் விசாரிக்கப்பட வேண்டும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அரசியல் நீதி கிடைக்க வேண்டும் என்று தமிழ் தொடர்ந்து கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.இது இன்று வரை செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது.
இதுவரை காலமும் பட்டலந்த வதைமுகாம் தொடர்பாக அமைதி காத்தவர்கள் எல்லாம் இன்று வாய் திறக்கிறார்கள் எனில் அதற்கு அல் ஜஸீரா சர்வதேச ஊடகமே காரணமாகும்.
அதைப் போன்று தமிழர்களுக்கு எதிரான இன படுகொலை, யுத்தக் குற்றங்கள் அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும். அதனை மறுப்பவர்கள் குற்றவாளிகள், கொலையாளிகள், இனவாதிகள் என்பதை உண்மை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைக்கான நீதி விடயத்தில் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும்: அருட்தந்தை மா.சத்திவேல் வலியுறுத்து. தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலை, யுத்தக் குற்றங்கள் அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும் எனவும் அதனை மறுப்பவர்கள் குற்றவாளிகள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவரால் இன்றையதினம் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,முன்னாள் பிரதம மந்திரியும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவோடு ஆல்ஜசீரா ஊடகவியலாளர் நடாத்திய நேர்காணலைத் தொடர்ந்து தெற்கில் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மக்களின் கொந்தளிப்பு விழுந்துள்ளது. படலந்த வதை முகாமை மையமாக வைத்து அதற்கு காரணமான பிரதான சூத்திரதாரியான ரணிலின் "சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை பறிக்க வேண்டும்" எனும் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கையில் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்களும் இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனக் கூறுவதில் எவ்வாறு நம்பிக்கை வைப்பது ஒரு குற்றவாளி இன்னும் ஒரு குற்றவாளியை விசாரிக்க முடியுமா அவ்வாறு விசாரித்தாலும் அது அரசியல் நோக்கம் கொண்டதாகவே இருக்கும்.தெற்கில் ரணிலிற்கு எதிரான மனநிலை பட்டலந்தை வதைமுகாமை பற்றியதாகவே மட்டும் இருப்பதும் உருவாகி இனவாத தன்மையை வெளிப்படுத்துகின்றது.யுத்த காலப்பகுதி தொடர்பிலும் யுத்த இறுதி கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தவை தொடர்பு கொள்ளும் அப்பேட்டியில் கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றிற்கும் பதில் அளிக்க ரணில் தடுமாறியதே நாம் அறிவோம். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கரிசனையோ அக்கறையோ இல்லாத மனநிலையையும் படலந்த குற்றங்களை முன்னிலைப்படுத்தி தண்டிக்கப்பட வேண்டும் எனக்கொருவது பக்க சார்பானதும் இனி வாத மனநிலையை கொண்டதுமாகும்.அல்ஜசீரா ஊடகவியலாளர் தெற்கிலும் வடக்கிலும் நிகழ்த்தப்பட்ட வதைகள், கொடூர கொடூரங்கள் யுத்தக் காலப்பகுதி தொடர்பிலும் குற்றங்கள் கேள்விக்கணைகள் தொடுகின்ற போது தெற்கு சார்ந்து மட்டும் சிந்திப்பதும் தமிழர் தேசத்தில் நிகழ்த்தப்பட்ட யுத்த குற்றங்கள் தொடரில் கருத்துக்கள் வெளியிடாது இருப்பது இரண்டு நாடுகள் என்பதையே காட்டி நிற்கின்றது. இரண்டு நாடுகள் என்றாலும் அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுப்பது ஒவ்வொருவரினதும் தார்மீக பொறுப்பாகும்.தற்போதும் அதனை காண முடியாமல் இருப்பது இனவாத அவல நிலையையே மீண்டும் உணர்த்துகின்றது.பட்டர் அந்த முகாமோடு தொடர்புபட்டவர்கள் அதற்கு துணை நின்ற பாதுகாப்பு தரப்பினரும் நீதி முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவர்களே அதில் மாற்று கருத்து இல்லை காலம் கடந்தேனும் நீதி நிலைநாட்டப்படல் வேண்டும். உண்மை முழு நாட்டுக்கும் தெரிய வேண்டும். முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச 1988/ 89 காலப்பகுதியில் மாத்தலை பிரதேசத்தில் இராணுவத்திற்கு தலைமை தாங்கிய போது அங்கு கொண்டு புதைக்கப்பட்டவர்களின் சமூக புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. தெற்கில் மேலும் பல சமூக புதைகுழிகள் தொடர்பான அறிக்கைகள் 2023 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்கா நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இது தொடர்பான அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட்ட போதும் அது தொடர்பில் தற்போதைய தேசிய மக்கள் சக்தியான மக்கள் முன்னணி வாய் திறக்காமல் அமைதி காத்து தற்போது ரணில் மீது விசாரணை எனக் கூறுவது அரசியல் நாடகமாக அமையக்கூடாது.ஊடகவியலாளர் திஸ்சநாயகத்தின் உதவியோடு 1988/ 89 காலப்பகுதியில் நிகழ்ந்த மனித உரிமை மீறல் தொடர்பான அறிக்கைகளை தூக்கிக்கொண்டு மஹிந்த ராஜபக்சே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை நோக்கி ஓடியதை மறக்க முடியாது. அதே மகிந்த திஸ்ச நாயகத்திற்கு 20 வருட தண்டனையை பெற்றுக் கொடுத்ததும் சர்வதேச தலையீட்டின் காரணமாக அவர் விடுதலை பெற்றுதும் மறக்க முடியாது. படலந்த கொலைகளை காரணம் காட்டி ஆட்சியை கைப்பற்றிய பின்னர் இது தொடர்பில் சந்திரிக்கா பண்டார நாயக்கரும் மகிந்த ராஜபக்சவும் அமைதி காத்தமை கொலை குற்றவாளிகளை பாதுகாத்ததாகவே கருதப்பட வேண்டும்.அவர்களும் ரணிலுக்கு கொலை குற்றவாளிகளே,தண்டிக்கப்பட வேண்டியவர்களே.சந்திரிக்கா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்திய யுத்தம் அவர்களால் புரியப்பட்ட கொலைகள் படலந்த விடயத்தை விசாரணைக்கு உட்படுத்தாததை மறைத்து விட்டது.தெற்கு இனவாத யுத்தத்தில் மூழ்கி இருந்தது.இனவாதம் தெற்கின் கண்களை மறைத்து நீதியை புதைத்து விட்டது என்றும் கூறலாம் .இவ்வாறு மறைத்தவர்களும் பட்டலந்தை கொலையாளிகளே. அல் ஜாசீரா ஊடகவியலாளர் கேள்விகளை கேட்கவில்லையேல் தற்போதும் நீதிக்கான குரல் எழுத்திருக்காது.தமிழர்களை பொறுத்தவரையில் ரணிலுக்கு எதிரான விசாரணை எனக் கூறும் தேசிய மக்கள் சக்தியாகிய மக்கள் விடுதலை முன்னணி நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள். தண்டிக்கப்பட வேண்டியவர்கள். சந்திரிகாவையும் மகிந்தவையும் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்திற்கு பலவந்தமாக தள்ளி தமது முன்னணி உறுப்பினர்களையும் சாதாரண கிராமிய இளைஞர்களையும் இனவாதத்திற்குள் தள்ளி தமிழர்களை இனப் படுகொலை புரிந்த இவர்களும் தண்டனைக்குரியவர்களே.தற்போதைய ஆட்சியாளர் ரணிலுக்கு எதிராக விசாரணை நடத்துவதாக கூறுவது போல் தங்கள் மனசாட்சியை தொட்டு தங்களுக்கு எதிராக விசாரணை நடத்தினால் மட்டுமே இவர்களின் கிளீன் சிறீலங்காவிற்கு நீதி கிட்டும் இல்லையேல் அதுவும் போலியே.தற்போதைய ஆட்சியாளர் வடக்கு கிழக்கில் நிகழ்ந்த யுத்தம் தொடர்பாக உள்ளக விசாரணை என்பதும் சர்வதேசத்தின் எந்த தலையீட்டையும் ஏற்க மாட்டோம் என்று கூறுவதற்கும் காரணம் இவர்கள் மீதும் கொலை குற்றச்சாட்டுகள் விழும் என்பதன் காரணமாகவே. கடந்த ஆட்சியாளர்களை போல பாதுகாப்பு படையினரை பாதுகாக்கும் நோக்கமேயாகும். சர்வதேச விசாரணைக்கு மறுப்பு தெரிவிப்பவர்களும் கொலை குற்றவாளிகளே.இலங்கை வரலாற்றில் எல்லா காலப்பகுதிகளிலும் நிகழ்த்தப்பட்ட இன சுத்திகரிப்பு, இனப்படுகொலை, யுத்த குற்றங்கள் எல்லாவற்றுக்கும் இதய சுத்தியோடு விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கான தகுதி இலங்கைக்கு இல்லை என்பதே தமிழர்களின் கடந்த கால நிகழ்கால அனுபவமாகும். அதனாலையே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் யுத்த குற்றம் விசாரிக்கப்பட வேண்டும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அரசியல் நீதி கிடைக்க வேண்டும் என்று தமிழ் தொடர்ந்து கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.இது இன்று வரை செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது.இதுவரை காலமும் பட்டலந்த வதைமுகாம் தொடர்பாக அமைதி காத்தவர்கள் எல்லாம் இன்று வாய் திறக்கிறார்கள் எனில் அதற்கு அல் ஜஸீரா சர்வதேச ஊடகமே காரணமாகும். அதைப் போன்று தமிழர்களுக்கு எதிரான இன படுகொலை, யுத்தக் குற்றங்கள் அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும். அதனை மறுப்பவர்கள் குற்றவாளிகள், கொலையாளிகள், இனவாதிகள் என்பதை உண்மை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.