• May 04 2025

ஈரானின் அதிரடி தாக்குதல் - இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Chithra / Oct 2nd 2024, 8:19 am
image

 

இஸ்ரேலில் உள்ள இலங்கை பிரஜைகள் அனைவரும் மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட அறிவிப்பை, இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமால் பண்டார தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதாகவும் இஸ்ரேல் மீது சுமார் 400 ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இந்த தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது

இந்நிலையில் இஸ்ரேலில் உள்ள இலங்கை பிரஜைகள், தேவையற்ற பயணங்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசிய உணவு, மருந்து, தண்ணீர் ஆகியவற்றை அருகில் வைத்துக் கொள்ளுமாறும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரஜைகளை போன்று இஸ்ரேலியர்களை எச்சரிக்கையாக இருகுமாறும், பாதுகாப்பு படை வீரர்களின் அறிவுறுத்தல்களின் படி நடக்குமாறும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரானின் அதிரடி தாக்குதல் - இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை  இஸ்ரேலில் உள்ள இலங்கை பிரஜைகள் அனைவரும் மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விசேட அறிவிப்பை, இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமால் பண்டார தெரிவித்துள்ளார்.இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதாகவும் இஸ்ரேல் மீது சுமார் 400 ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இந்த தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறதுஇந்நிலையில் இஸ்ரேலில் உள்ள இலங்கை பிரஜைகள், தேவையற்ற பயணங்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அத்தியாவசிய உணவு, மருந்து, தண்ணீர் ஆகியவற்றை அருகில் வைத்துக் கொள்ளுமாறும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.இலங்கை பிரஜைகளை போன்று இஸ்ரேலியர்களை எச்சரிக்கையாக இருகுமாறும், பாதுகாப்பு படை வீரர்களின் அறிவுறுத்தல்களின் படி நடக்குமாறும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now