• Jul 21 2025

போலி கடவுச்சீட்டுடன் ஐரோப்பா செல்ல முயன்ற ஈரானிய பிரயை கைது!

Thansita / Jul 20th 2025, 9:59 pm
image

போலியான பிரித்தானிய கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜப்பான் மற்றும் துருக்கி வழியாக ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற ஈரானிய நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லை பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளின் கவனத்திற்கு வந்த சந்தேக நபர், சரிபார்ப்பில் கடவுச்சீட்டு போலியானது என்பதும், அவரது பயணத் திட்டம் சட்டவிரோதமானது என்பதும் உறுதியானது.

இதையடுத்து, அவர் விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதுவரை நடைபெற்ற விசாரணைகள் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சந்தேகத்திற்குரிய ஈரானிய நாட்டவர் நேற்று (19) இரவு 8 மணியளவில் ஜப்பானில் உள்ள நரிட்டா விமான நிலையம் நோக்கி புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவர் வழங்கிய பிரித்தானிய கடவுச்சீட்டில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து, முன்னெடுக்கப்பட்ட சோதனையில் அது போலியானது என்பது தெரியவந்தது. 

சந்தேக நபரின் பொருட்களை சோதனைக்கு உட்படுத்திய போது, அவரது உண்மையான ஈரானிய கடவுச்சீட்டு கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட ஈரானிய நாட்டவர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு தெரிவித்துள்ளது.

போலி கடவுச்சீட்டுடன் ஐரோப்பா செல்ல முயன்ற ஈரானிய பிரயை கைது போலியான பிரித்தானிய கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜப்பான் மற்றும் துருக்கி வழியாக ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற ஈரானிய நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லை பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளின் கவனத்திற்கு வந்த சந்தேக நபர், சரிபார்ப்பில் கடவுச்சீட்டு போலியானது என்பதும், அவரது பயணத் திட்டம் சட்டவிரோதமானது என்பதும் உறுதியானது.இதையடுத்து, அவர் விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதுவரை நடைபெற்ற விசாரணைகள் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.சந்தேகத்திற்குரிய ஈரானிய நாட்டவர் நேற்று (19) இரவு 8 மணியளவில் ஜப்பானில் உள்ள நரிட்டா விமான நிலையம் நோக்கி புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவர் வழங்கிய பிரித்தானிய கடவுச்சீட்டில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து, முன்னெடுக்கப்பட்ட சோதனையில் அது போலியானது என்பது தெரியவந்தது. சந்தேக நபரின் பொருட்களை சோதனைக்கு உட்படுத்திய போது, அவரது உண்மையான ஈரானிய கடவுச்சீட்டு கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஈரானிய நாட்டவர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement