• Sep 19 2024

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பா? சமூக ஆர்வலர்கள் விசனம்!

Sharmi / Dec 23rd 2022, 8:35 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாக சமூக வலைத்தளமொன்றில் பதிவொன்று இடப்பட்டுள்ளது.

குறித்த பதிவில்,

"நேற்று பேருந்தில் பயணித்த வேளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒரு மாணவனை கண்டேன். அம்மாணவன் பல்கலைக்கழக பெயர் பொறிக்கப்பட்ட ரீ சேட் அணிந்திருந்தார். இலட்சினையில் ஏதோ மாற்றம் செய்யப்பட்டதை உற்று நோக்கிய போதே விடயம் புரிந்தது. 

குறித்த இலட்சினையில் தமிழ் மொழி அகற்றப்பட்டிருந்தது. தனியாக ஆங்கிலம், சிங்கள மொழிகள் மட்டுமே அதில் பொறிக்கப்பட்டிருந்தது. அத்துடன் இலட்சினையின் மையமாக எழில் பெற்றிருந்த நந்தியும், குத்து விளக்கும் அகற்றப்பட்டு UJ என்ற எழுத்தை பிரதி செய்யும் அடையாளம் இடப்பட்டது.

ஒருவேளை பல்கலைக்கழகத்தினுள் உள்ள வேறு அமைப்பின் அல்லது ஒன்றியத்தின் இலட்சினை அது எனில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதன் தார்ப்பரியம் என்ன? மாணவனுடன் உரையாடிய போது அவர் மருத்துவ பீட மாணவன் என்பது தெரிந்தது. மேலதிகமாக பேசுவதற்கு அவரது மொழி எனக்கு அவ்வளவாக தெரியவில்லை.

எது எப்படியாயினும் இவ்வாறு ஒரு பல்கலைக்கழக சின்னத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி அதனை பாவிக்கும் போது பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர் ஒன்றியம் அதனை கருத்தில் கொள்ளாமையின் காரணம் தான் புரியவில்லை.

பல்கலைக்கழகங்களின் பீடங்களோஇ ஒன்றியங்களோ அல்லது வேறு குழுக்களோ தங்களுக்கான சின்னத்தை வடிவமைத்து அந்த சின்னத்தில் தங்கள் பீடங்களின் அல்லது அந்த அமைப்பின் பெயருடன் அதை பயன்படுத்துவார்கள் அது ஏற்றுக்கொள்ளக்கூடியது. 

ஆனால் இங்கே அப்படி பீடங்களினதோ, குழுக்களினதோ பெயர்கள் இல்லாது பொதுவான பல்கலையின் பெயருடன் மட்டும் சின்னத்தில் உள்ள தமிழையும், சைவத்தையும் அழித்து பொதுவான பல்கலைக்கழக சின்னம் போன்று சிலர் பயன்படுத்துகின்றனர் அதுவே பிரச்சினை 

இவ்வாறு பீடங்கள்,குழுக்களின் அடையாளம் இன்றி பொதுவான சின்னத்தை மாற்றி அமைத்து பல்கலை வளாகத்திற்குள்ளேயே அணிந்து நடமாடுவதை நிச்சயமாக நிர்வாகம் தடுக்க முடியும் 

பீடங்களின், குழுக்களின் அடையாளம் இன்றி பொதுவான இலட்சனையை மாற்றி அமைத்து பல்கலையின் பெயருடன் பயன்படுத்துவதை தடை செய்யும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.

பீடங்களின், குழுக்களின் மற்றும் ஒன்றியங்களின் தனிப்பட்ட பெயர்கள் இல்லாத பொதுவான இலட்சனைகளில் ஏன் மாற்றம்?

அவ்வாறான சின்னங்களில் ஏன் சைவமும் தமிழும் மட்டும் நீக்கப்பட வேண்டும்?

இதன் ஆழமும் இதன் உள்ளே உள்ள அரசியல் தந்திரங்களும் இதனால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்பதை அறியாது பல்கலை சார்ந்த தமிழ் இளைஞர்களும் இது பல்கலையின் சின்னம் இல்லை என்று கூறி சாதாரணமாக கடந்து செல்வதும் அவ்வாறு மாற்றுபவர்களுக்கு சார்பாக கதைப்பதும் ஆச்சரியமாகவும் வேதனையாகவும் உள்ளது என அதில் பதிவிடப்பட்டுள்ளது.

குறித்த பதிவு தொடர்பில் யாழ் பல்கலைக்கழகத்தினரால் இதுவரை எவ்வித அறிக்கைகளும் வெளிவராத நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஆராயுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பா சமூக ஆர்வலர்கள் விசனம் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாக சமூக வலைத்தளமொன்றில் பதிவொன்று இடப்பட்டுள்ளது.குறித்த பதிவில்,"நேற்று பேருந்தில் பயணித்த வேளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒரு மாணவனை கண்டேன். அம்மாணவன் பல்கலைக்கழக பெயர் பொறிக்கப்பட்ட ரீ சேட் அணிந்திருந்தார். இலட்சினையில் ஏதோ மாற்றம் செய்யப்பட்டதை உற்று நோக்கிய போதே விடயம் புரிந்தது. குறித்த இலட்சினையில் தமிழ் மொழி அகற்றப்பட்டிருந்தது. தனியாக ஆங்கிலம், சிங்கள மொழிகள் மட்டுமே அதில் பொறிக்கப்பட்டிருந்தது. அத்துடன் இலட்சினையின் மையமாக எழில் பெற்றிருந்த நந்தியும், குத்து விளக்கும் அகற்றப்பட்டு UJ என்ற எழுத்தை பிரதி செய்யும் அடையாளம் இடப்பட்டது.ஒருவேளை பல்கலைக்கழகத்தினுள் உள்ள வேறு அமைப்பின் அல்லது ஒன்றியத்தின் இலட்சினை அது எனில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதன் தார்ப்பரியம் என்ன மாணவனுடன் உரையாடிய போது அவர் மருத்துவ பீட மாணவன் என்பது தெரிந்தது. மேலதிகமாக பேசுவதற்கு அவரது மொழி எனக்கு அவ்வளவாக தெரியவில்லை.எது எப்படியாயினும் இவ்வாறு ஒரு பல்கலைக்கழக சின்னத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி அதனை பாவிக்கும் போது பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர் ஒன்றியம் அதனை கருத்தில் கொள்ளாமையின் காரணம் தான் புரியவில்லை.பல்கலைக்கழகங்களின் பீடங்களோஇ ஒன்றியங்களோ அல்லது வேறு குழுக்களோ தங்களுக்கான சின்னத்தை வடிவமைத்து அந்த சின்னத்தில் தங்கள் பீடங்களின் அல்லது அந்த அமைப்பின் பெயருடன் அதை பயன்படுத்துவார்கள் அது ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால் இங்கே அப்படி பீடங்களினதோ, குழுக்களினதோ பெயர்கள் இல்லாது பொதுவான பல்கலையின் பெயருடன் மட்டும் சின்னத்தில் உள்ள தமிழையும், சைவத்தையும் அழித்து பொதுவான பல்கலைக்கழக சின்னம் போன்று சிலர் பயன்படுத்துகின்றனர் அதுவே பிரச்சினை இவ்வாறு பீடங்கள்,குழுக்களின் அடையாளம் இன்றி பொதுவான சின்னத்தை மாற்றி அமைத்து பல்கலை வளாகத்திற்குள்ளேயே அணிந்து நடமாடுவதை நிச்சயமாக நிர்வாகம் தடுக்க முடியும் பீடங்களின், குழுக்களின் அடையாளம் இன்றி பொதுவான இலட்சனையை மாற்றி அமைத்து பல்கலையின் பெயருடன் பயன்படுத்துவதை தடை செய்யும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.பீடங்களின், குழுக்களின் மற்றும் ஒன்றியங்களின் தனிப்பட்ட பெயர்கள் இல்லாத பொதுவான இலட்சனைகளில் ஏன் மாற்றம்அவ்வாறான சின்னங்களில் ஏன் சைவமும் தமிழும் மட்டும் நீக்கப்பட வேண்டும்இதன் ஆழமும் இதன் உள்ளே உள்ள அரசியல் தந்திரங்களும் இதனால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்பதை அறியாது பல்கலை சார்ந்த தமிழ் இளைஞர்களும் இது பல்கலையின் சின்னம் இல்லை என்று கூறி சாதாரணமாக கடந்து செல்வதும் அவ்வாறு மாற்றுபவர்களுக்கு சார்பாக கதைப்பதும் ஆச்சரியமாகவும் வேதனையாகவும் உள்ளது என அதில் பதிவிடப்பட்டுள்ளது.குறித்த பதிவு தொடர்பில் யாழ் பல்கலைக்கழகத்தினரால் இதுவரை எவ்வித அறிக்கைகளும் வெளிவராத நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஆராயுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement