• Mar 01 2025

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடா? - மீண்டும் வரிசை, மக்கள் பதட்டம்

Thansita / Feb 28th 2025, 11:03 pm
image

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருளை கொள்வனவு செய்ய மாட்டோம், எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்க உப தலைவர்.குசும் சந்தநாயக்க தெரிவித்திருந்தார்

இதனைத் தொடர்ந்து பெற்றோல் நிலையங்களில் மக்கள் கூட்டமாக குவிந்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது. 

இதனால் எரிபொருள் தட்டுப்பாடா என்ற விதத்தில் மக்கள் பதற்றமடையக்கூடியவாறு பல செய்திகள் பரவிவருகின்றன.

அதாவது பெற்றோலை கொள்வனவு செய்கின்ற சங்கம் தங்களுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் காணமாமல் இருப்பதாக அரசாங்கத்திடம் கோரிக்கை  விட்டிருந்தது  

அதற்கான சாதகமான தீர்வு வராத காரணத்தினால் பெற்றோலை கெதள்வனவு செய்ய மாட்டோம் என அறிவித்திருந்தது 

இந்நிலையில் நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் D.J.A.S. de S. ராஜகருணா  தெரிவித்துள்ளார். 

எனவே, பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். 

எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருள் ஓர்டர்களை நிறுத்துவதாக எந்த உறுதிப்படுத்தலையும் இதுவரை தெரிவிக்கவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடா - மீண்டும் வரிசை, மக்கள் பதட்டம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருளை கொள்வனவு செய்ய மாட்டோம், எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்க உப தலைவர்.குசும் சந்தநாயக்க தெரிவித்திருந்தார்இதனைத் தொடர்ந்து பெற்றோல் நிலையங்களில் மக்கள் கூட்டமாக குவிந்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது. இதனால் எரிபொருள் தட்டுப்பாடா என்ற விதத்தில் மக்கள் பதற்றமடையக்கூடியவாறு பல செய்திகள் பரவிவருகின்றன.அதாவது பெற்றோலை கொள்வனவு செய்கின்ற சங்கம் தங்களுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் காணமாமல் இருப்பதாக அரசாங்கத்திடம் கோரிக்கை  விட்டிருந்தது  அதற்கான சாதகமான தீர்வு வராத காரணத்தினால் பெற்றோலை கெதள்வனவு செய்ய மாட்டோம் என அறிவித்திருந்தது இந்நிலையில் நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் D.J.A.S. de S. ராஜகருணா  தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருள் ஓர்டர்களை நிறுத்துவதாக எந்த உறுதிப்படுத்தலையும் இதுவரை தெரிவிக்கவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement