• Apr 27 2024

விசேட வைத்தியர்களுக்கு பற்றாக்குறையா..? – குற்றம்சாட்டும் வைத்தியர்.! samugammedia

Chithra / May 23rd 2023, 11:43 am
image

Advertisement

நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்களின் பற்றாக்குறையாக இருப்பதாக தெரிவிப்பது போலியான செய்தி என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளருமான வைத்தியர் ருக்ஷான் பெல்லான சுட்டிக்காட்டியுள்ளார். 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

நாட்டில் இருபத்தைந்தாயிரம் விசேட வைத்தியர்கள் கடமையாற்றுகின்ற போதிலும், தனியார் சேவைகளில் அதிக கவனம் செலுத்துவதால் வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அறுபது வயதுடைய மருத்துவர்களின் சேவைக்காலத்தை 63 ஆக நீடிக்குமாறு கோருவது மருத்துவர்களின் பற்றாக்குறையை காட்டுவதற்காகவே என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு அறுபத்து மூன்று ஆண்டுகள் வரை சேவையாற்ற பரிந்துரைப்பதாகவும் ஆனால் அவர்கள் தொலைதூர வைத்தியசாலைகளில் பணியாற்றவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலைமையை அரசாங்கம் உரிய முறையில் முகாமைத்துவம் செய்தால், விசேட வைத்தியர்களின் போலிப் பற்றாக்குறை தவிர்க்கப்படும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.


விசேட வைத்தியர்களுக்கு பற்றாக்குறையா. – குற்றம்சாட்டும் வைத்தியர். samugammedia நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்களின் பற்றாக்குறையாக இருப்பதாக தெரிவிப்பது போலியான செய்தி என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளருமான வைத்தியர் ருக்ஷான் பெல்லான சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.நாட்டில் இருபத்தைந்தாயிரம் விசேட வைத்தியர்கள் கடமையாற்றுகின்ற போதிலும், தனியார் சேவைகளில் அதிக கவனம் செலுத்துவதால் வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.அறுபது வயதுடைய மருத்துவர்களின் சேவைக்காலத்தை 63 ஆக நீடிக்குமாறு கோருவது மருத்துவர்களின் பற்றாக்குறையை காட்டுவதற்காகவே என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு அறுபத்து மூன்று ஆண்டுகள் வரை சேவையாற்ற பரிந்துரைப்பதாகவும் ஆனால் அவர்கள் தொலைதூர வைத்தியசாலைகளில் பணியாற்றவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.தற்போதைய நிலைமையை அரசாங்கம் உரிய முறையில் முகாமைத்துவம் செய்தால், விசேட வைத்தியர்களின் போலிப் பற்றாக்குறை தவிர்க்கப்படும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement