• Sep 21 2024

இலங்கையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடா..? விலையும் உயர்வு..? வெளியான தகவல்

Chithra / Jan 12th 2024, 9:37 am
image

Advertisement


காஸா மோதல் காரணமாக செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால்  இந்த நாட்டில் கோதுமை மாவின் விலை எதிர்காலத்தில் பாதிக்கப்படலாம் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நாட்டுக்கு துருக்கியில் இருந்து கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதாக சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவு செங்கடல் வழியாக செல்லும் கப்பல்களில் இருந்து வருகிறது.

அதன்படி, அந்த கப்பல்கள் செங்கடல் வழியாக பயணிக்க தடைகள் இருப்பதால், கூடுதல் கப்பல் கட்டணம் வசூலித்தால், கோதுமை மாவின் விலை உயரலாம்.

எவ்வாறாயினும், நாட்டில் இன்னும் 03 மாதங்களுக்கு போதுமான கோதுமை மா மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சோள கையிருப்பு இருப்பதாக அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

அக்காலப்பகுதியில் செங்கடல் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடா. விலையும் உயர்வு. வெளியான தகவல் காஸா மோதல் காரணமாக செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால்  இந்த நாட்டில் கோதுமை மாவின் விலை எதிர்காலத்தில் பாதிக்கப்படலாம் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.இந்த நாட்டுக்கு துருக்கியில் இருந்து கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதாக சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவு செங்கடல் வழியாக செல்லும் கப்பல்களில் இருந்து வருகிறது.அதன்படி, அந்த கப்பல்கள் செங்கடல் வழியாக பயணிக்க தடைகள் இருப்பதால், கூடுதல் கப்பல் கட்டணம் வசூலித்தால், கோதுமை மாவின் விலை உயரலாம்.எவ்வாறாயினும், நாட்டில் இன்னும் 03 மாதங்களுக்கு போதுமான கோதுமை மா மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சோள கையிருப்பு இருப்பதாக அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.அக்காலப்பகுதியில் செங்கடல் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement