• Jan 21 2025

பட்டதாரிகளின் அவலத்திற்கு கிடைக்குமா தீர்வு?

Thansita / Jan 20th 2025, 9:53 pm
image


முன்னொரு காலத்திலே பட்டதாரி என்றால் மரியாதையுடனும் பணிவுடனும் பார்த்த காலம் மாறி இன்று பட்டதாரிகள் விளக்குமாற்றுடனும் பாடையுடனும் குப்பை வண்டில்களுடனும் வீதிக்கு போராட்டத்தில் இறங்கும் காலமாக மாறியுள்ளது. வேலையில்லா பட்டதாரிகள் தானே என கேவலமாக பார்க்கின்ற நிலை உருவாகியுள்ளது. இதற்கு அரசாங்கமும் விழ்ப்பதாகத் தெரியவில்லை. பல போராட்டங்கள் தொடர்கின்றன.  கைக்குழந்தைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் தவிக்கிறார்கள்  பட்டதாரிப் பெண்கள். இவ்வாறான நிலை தொடருமாயின் பல்கலைக்கழக பட்டம் எதற்கு?

 நிரந்தர வேலை என்பது அத்தியவசியமான ஒன்று. வேலையில்லாது எப்படி வாழ முடியும்? வாழ்ககையே கேள்விக்குறியாக மாறுகிறத வேலையில்லாததால் திருமண வாழ்வு தாமதமாகின்றது. இதனால் குழந்தைகள் இல்லாத சூழ்நிலைகூட உருவாகின்றது. இந்நிலை தொடர்வதால்  பலர் மரணிக்கிறார்கள் பலர் மனநலம் குன்றியவர்களாக சமுதாயத்திலே மூளை முடக்குகளில் ஒதுங்குகிறார்கள். பட்டம் படித்தது தவறா அதற்கு இவ்வளவு தண்டணையா?

தனியார் துறைகளும் பட்தாரிகளை வேலைக்கு அமர்த்துவதில்லை அவ்வாறு அமர்த்திதனாலும் போதுமான அளவு சம்பளம் கொடுப்பதில்லை . அனுபவத்தின் அடிப்படையிலேயே சம்பளம் வழங்கப்படுகின்றன. பட்டம் இருக்கினறதே தவிர அவர்களிடம் வேலை அனுபவம் இல்லை.  இதனால் புறக்கணிக்கிறார்கள் தனியார் துறையினர்.  சாதாரணம் தரம் , உயர்தரம் படித்தவர்கள் வேலை அனுபவம் என்ற பேரில் அதிளகளவான சம்பளத்தை பெறுவதோடு தலைமைகளாக இருக்கும் போது தவிக்கிறது பட்டதாரிகளின்  மனம். பட்டம் எதற்கு பல்கலைக்கழக கலைப்பீடம் எதற்கு என்ற மனநிலை தோன்றுகிறது.  வெறும் பட்டத்தை வைத்துக் கொண்டு எடுக்கின்றனரே அடிப்படைச் சம்பளம் .இது போதுமா அவர்களது  வாழ்வுக்கு?

பட்டத்தை பாடை கட்டி பாடையில் ஏற்றி போராட்ம் செய்கின்றார்களேயானால் பட்டத்தை பெறுவதற்கு எத்தனை காலத் தியாகம் எத்தனை கால கஸ்டத்தை அனுபவித்து கனவுகளோடு சுமந்திருப்பார்கள் . அதனை பாடையில் ஏற்ற வருமா மனம்? ஆனாலும் ஏற்றுகிறார்கள்  தீர்வு கிடைக்கும் என்ற ஏக்கத்தோடு  

இன்று விளக்குமாற்றுடன் வீதியிலே நிற்கின்றார்கள் இதுதானா பட்டதாரிகளின் நிலை?

அரசாங்கமே சற்று கணவிழித்துப் பார் பட்தாரிகளின் வாழ்விற்கு ஒளி கிடைக்கும் காலம் வருமா? ஏக்கத்துடனும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையுடனும் காத்திருக்கின்றார்கள் விடிவுக்காக......

பட்டதாரிகளின் அவலத்திற்கு கிடைக்குமா தீர்வு முன்னொரு காலத்திலே பட்டதாரி என்றால் மரியாதையுடனும் பணிவுடனும் பார்த்த காலம் மாறி இன்று பட்டதாரிகள் விளக்குமாற்றுடனும் பாடையுடனும் குப்பை வண்டில்களுடனும் வீதிக்கு போராட்டத்தில் இறங்கும் காலமாக மாறியுள்ளது. வேலையில்லா பட்டதாரிகள் தானே என கேவலமாக பார்க்கின்ற நிலை உருவாகியுள்ளது. இதற்கு அரசாங்கமும் விழ்ப்பதாகத் தெரியவில்லை. பல போராட்டங்கள் தொடர்கின்றன.  கைக்குழந்தைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் தவிக்கிறார்கள்  பட்டதாரிப் பெண்கள். இவ்வாறான நிலை தொடருமாயின் பல்கலைக்கழக பட்டம் எதற்கு நிரந்தர வேலை என்பது அத்தியவசியமான ஒன்று. வேலையில்லாது எப்படி வாழ முடியும் வாழ்ககையே கேள்விக்குறியாக மாறுகிறத வேலையில்லாததால் திருமண வாழ்வு தாமதமாகின்றது. இதனால் குழந்தைகள் இல்லாத சூழ்நிலைகூட உருவாகின்றது. இந்நிலை தொடர்வதால்  பலர் மரணிக்கிறார்கள் பலர் மனநலம் குன்றியவர்களாக சமுதாயத்திலே மூளை முடக்குகளில் ஒதுங்குகிறார்கள். பட்டம் படித்தது தவறா அதற்கு இவ்வளவு தண்டணையாதனியார் துறைகளும் பட்தாரிகளை வேலைக்கு அமர்த்துவதில்லை அவ்வாறு அமர்த்திதனாலும் போதுமான அளவு சம்பளம் கொடுப்பதில்லை . அனுபவத்தின் அடிப்படையிலேயே சம்பளம் வழங்கப்படுகின்றன. பட்டம் இருக்கினறதே தவிர அவர்களிடம் வேலை அனுபவம் இல்லை.  இதனால் புறக்கணிக்கிறார்கள் தனியார் துறையினர்.  சாதாரணம் தரம் , உயர்தரம் படித்தவர்கள் வேலை அனுபவம் என்ற பேரில் அதிளகளவான சம்பளத்தை பெறுவதோடு தலைமைகளாக இருக்கும் போது தவிக்கிறது பட்டதாரிகளின்  மனம். பட்டம் எதற்கு பல்கலைக்கழக கலைப்பீடம் எதற்கு என்ற மனநிலை தோன்றுகிறது.  வெறும் பட்டத்தை வைத்துக் கொண்டு எடுக்கின்றனரே அடிப்படைச் சம்பளம் .இது போதுமா அவர்களது  வாழ்வுக்குபட்டத்தை பாடை கட்டி பாடையில் ஏற்றி போராட்ம் செய்கின்றார்களேயானால் பட்டத்தை பெறுவதற்கு எத்தனை காலத் தியாகம் எத்தனை கால கஸ்டத்தை அனுபவித்து கனவுகளோடு சுமந்திருப்பார்கள் . அதனை பாடையில் ஏற்ற வருமா மனம் ஆனாலும் ஏற்றுகிறார்கள்  தீர்வு கிடைக்கும் என்ற ஏக்கத்தோடு  இன்று விளக்குமாற்றுடன் வீதியிலே நிற்கின்றார்கள் இதுதானா பட்டதாரிகளின் நிலைஅரசாங்கமே சற்று கணவிழித்துப் பார் பட்தாரிகளின் வாழ்விற்கு ஒளி கிடைக்கும் காலம் வருமா ஏக்கத்துடனும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையுடனும் காத்திருக்கின்றார்கள் விடிவுக்காக.

Advertisement

Advertisement

Advertisement