• Jan 21 2025

கிளீன் சிறீலங்கா என்பது குப்பைகளை அகற்றி சுற்றுச்சூழலை சுத்தம் செய்வது மட்டுமல்ல - கிழக்கு ஆளுனர்

Thansita / Jan 20th 2025, 10:45 pm
image

கிழக்கு மாகாண சபையின் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கிடையேயான கலந்துரையாடல் இன்று (20) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில்  கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர்  ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர்  ஜே.எஸ். அருள்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரச நிறுவன மட்டத்தில் (Clean Sri Lanka) குறித்த விழிப்புணர்வு செயலமர்வுகளை நடத்துவது குறித்து அமைச்சுகள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. குறித்த நிகழ்வின் போது கருத்துரைத்த ஆளுநர் கிளீன் சிறீலங்கா என்பது குப்பைகளை அகற்றி சுற்றுச்சூழலை சுத்தம் செய்வது மட்டுமல்ல, சுற்றுச்சூழல், சமூக மற்றும் மனப்பான்மை மேம்பாட்டோடு செயல்படும் நீண்டகால திட்டமாகும் என்றார்.

கூடுதலாக, மாகாண சபையால் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு நிறுவனத் தலைவர்களையும் கேட்டுக் கொண்டார். 

குறிப்பாக தொடர்ச்சியான செலவுகளைக் கட்டுப்படுத்த நிறுவன மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆளுநர் அலுவலகம் இந்தப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது என்றும்  கூறினார். ஒக்டோபர் 2024 க்கு முன்பு, அலுவலகத்தின் வாகனங்களுக்கான மாதாந்த எரிபொருள் செலவு ரூ. 1.62 மில்லியன் செலவுகளாக இருந்தது, ஒக்டோபர் முதல், மாதாந்த எரிபொருள் விநியோக செலவு எரிபொருள் வாகனங்களுக்கான கட்டணம் ரூ. 2-3 இலட்சங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. 

பயன்படுத்தப்படாமல் இருக்கும் பழுதடைந்த வாகனங்களை பழுதுபார்த்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், பயன்படுத்த முடியாத வாகனங்களை சட்டப்பூர்வமாக ஏலம் விடவும், மாகாண சபைக்குச் சொந்தமான உத்தியோகபூர்வ இல்லங்களின் பாழடைந்த நிலை குறித்து கவனம் செலுத்தி பராமரிப்பை மேற்கொள்ளவும் மாகாண சபையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

இந்தக் கூட்டத்தில், மாகாண அமைச்சுக்கள் மற்றும் துறைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நிறுவனத் தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

கிளீன் சிறீலங்கா என்பது குப்பைகளை அகற்றி சுற்றுச்சூழலை சுத்தம் செய்வது மட்டுமல்ல - கிழக்கு ஆளுனர் கிழக்கு மாகாண சபையின் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கிடையேயான கலந்துரையாடல் இன்று (20) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில்  கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர்  ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர்  ஜே.எஸ். அருள்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.அரச நிறுவன மட்டத்தில் (Clean Sri Lanka) குறித்த விழிப்புணர்வு செயலமர்வுகளை நடத்துவது குறித்து அமைச்சுகள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. குறித்த நிகழ்வின் போது கருத்துரைத்த ஆளுநர் கிளீன் சிறீலங்கா என்பது குப்பைகளை அகற்றி சுற்றுச்சூழலை சுத்தம் செய்வது மட்டுமல்ல, சுற்றுச்சூழல், சமூக மற்றும் மனப்பான்மை மேம்பாட்டோடு செயல்படும் நீண்டகால திட்டமாகும் என்றார்.கூடுதலாக, மாகாண சபையால் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு நிறுவனத் தலைவர்களையும் கேட்டுக் கொண்டார். குறிப்பாக தொடர்ச்சியான செலவுகளைக் கட்டுப்படுத்த நிறுவன மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆளுநர் அலுவலகம் இந்தப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது என்றும்  கூறினார். ஒக்டோபர் 2024 க்கு முன்பு, அலுவலகத்தின் வாகனங்களுக்கான மாதாந்த எரிபொருள் செலவு ரூ. 1.62 மில்லியன் செலவுகளாக இருந்தது, ஒக்டோபர் முதல், மாதாந்த எரிபொருள் விநியோக செலவு எரிபொருள் வாகனங்களுக்கான கட்டணம் ரூ. 2-3 இலட்சங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. பயன்படுத்தப்படாமல் இருக்கும் பழுதடைந்த வாகனங்களை பழுதுபார்த்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், பயன்படுத்த முடியாத வாகனங்களை சட்டப்பூர்வமாக ஏலம் விடவும், மாகாண சபைக்குச் சொந்தமான உத்தியோகபூர்வ இல்லங்களின் பாழடைந்த நிலை குறித்து கவனம் செலுத்தி பராமரிப்பை மேற்கொள்ளவும் மாகாண சபையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், மாகாண அமைச்சுக்கள் மற்றும் துறைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நிறுவனத் தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement