• May 19 2024

கஞ்சா ஏற்றுமையில் பொருளாதார நன்மை உள்ளதா..? அதிகரிக்கப்போகும் ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை samugammedia

Chithra / Jun 26th 2023, 9:09 am
image

Advertisement


கஞ்சாவை ஏற்றுமதி செய்து பெரும் பொருளாதார நன்மைகளைப் பெறலாம் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்று மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கஞ்சா பாவனையை சட்டப்பூர்வமாக்குவதற்கு தற்போது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கஞ்சாவை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், முதலீட்டுச் சபையின் செயற்திட்டமாக இதற்கு அனுமதி வழங்கப்படுமென விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அண்மையில் அறிவித்திருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், கஞ்சா ஏற்றுமதி மூலம் பொருளாதார பிழைப்பு இருப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்றும் மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு அந்த நிறுவனம் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளது.

கஞ்சாவை ஊக்குவிக்கும் நம்பிக்கையில் உள்ள தரப்பினர் தற்போது இந்நாட்டு மக்கள் எதிர்நோக்கி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அதன் மூலம் தமது இலக்குகளை அடைய முயற்சிப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கஞ்சாவின் தற்போதைய நேர்மறையான சித்தாந்தங்கள் தொடர்ந்து பிரபலமடையும் என்று மையம் குறிப்பிட்டது.

மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் மேலும் தெரிவிக்கையில், கஞ்சா போன்ற தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்கள் பிரபலமடையும் போது, ​​ஏனைய போதைப்பொருட்களின் பாவனையும் அதிகரிக்கின்றது.

புகைத்தல் மற்றும் மது பாவனையால் நாளொன்றுக்கு சுமார் 100 பேர் உயிரிழப்பதாகவும் புகையிலை மற்றும் மதுபான நிறுவனங்கள் இலங்கையர்களிடமிருந்து சுமார் 100 கோடி ரூபா வருமானம் ஈட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


கஞ்சா ஏற்றுமையில் பொருளாதார நன்மை உள்ளதா. அதிகரிக்கப்போகும் ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை samugammedia கஞ்சாவை ஏற்றுமதி செய்து பெரும் பொருளாதார நன்மைகளைப் பெறலாம் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்று மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.இலங்கையில் கஞ்சா பாவனையை சட்டப்பூர்வமாக்குவதற்கு தற்போது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கஞ்சாவை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், முதலீட்டுச் சபையின் செயற்திட்டமாக இதற்கு அனுமதி வழங்கப்படுமென விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அண்மையில் அறிவித்திருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.எவ்வாறாயினும், கஞ்சா ஏற்றுமதி மூலம் பொருளாதார பிழைப்பு இருப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்றும் மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.இன்றைய உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு அந்த நிறுவனம் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளது.கஞ்சாவை ஊக்குவிக்கும் நம்பிக்கையில் உள்ள தரப்பினர் தற்போது இந்நாட்டு மக்கள் எதிர்நோக்கி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அதன் மூலம் தமது இலக்குகளை அடைய முயற்சிப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.கஞ்சாவின் தற்போதைய நேர்மறையான சித்தாந்தங்கள் தொடர்ந்து பிரபலமடையும் என்று மையம் குறிப்பிட்டது.மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் மேலும் தெரிவிக்கையில், கஞ்சா போன்ற தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்கள் பிரபலமடையும் போது, ​​ஏனைய போதைப்பொருட்களின் பாவனையும் அதிகரிக்கின்றது.புகைத்தல் மற்றும் மது பாவனையால் நாளொன்றுக்கு சுமார் 100 பேர் உயிரிழப்பதாகவும் புகையிலை மற்றும் மதுபான நிறுவனங்கள் இலங்கையர்களிடமிருந்து சுமார் 100 கோடி ரூபா வருமானம் ஈட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement