• Apr 27 2024

வெந்நீரில் குளிப்பதன் பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா?

Sharmi / Dec 13th 2022, 7:15 pm
image

Advertisement

இன்றும் பலரும் குளிர்ந்த நீரை விட வெந்நீரில் குளியல் போடவே அதிகமாக விரும்புகின்றனர். அவ்வாறு வெந்நீரில் தொடர்ந்து குளிப்பது ஆபத்தை ஏற்படுத்துமா என்று பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டிருக்கும்.

அவ்வாறான சந்தேகங்களை தற்போது குறித்த  பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தற்போது வெந்நீரில் குளிப்பது ஆரோக்கியமா? ஆபத்தா? என்பதை அறிந்து கொள்வோம்.

வெந்நீர் குளியல் ஆபத்தா?

1. மழை மற்றும் பனி போன்ற குளிர் காலங்களில் வெந்நீரில் குளிப்பது தான் நல்லது. அதிலும் சூடான தண்ணீரை விட வெதுவெதுப்பான நீரிலே குளிக்கலாம்.

2. இவ்வாறான குளிர் காலங்களில் எண்ணெய் குளியலைத் தவிர்த்துவிட வேண்டும்.

3.சைனஸ், மூக்கடைப்பு, ஆஸ்துமா பிரச்சினை இருப்பவர்கள் சுக்கு தைலத்தினை தண்ணீரில் பயன்படுத்தி குளிக்கலாம்.

மேலும் தலையில் வெந்நீரை அப்படியே ஊற்றுவது தவறாகும். காரணம் தலையில் வெந்நீரை ஊற்றுவதால், உடலை விட்டு வெப்பம் வெளியேற முடியாமல் உள்ளேயே இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

வெந்நீரை முதலில் காலில் ஊற்றிவிட்டு, பின்பு முழங்கால், இடுப்பு, நெஞ்சுப்பகுதி என ஊற்றிய பின்பு இறுதியில் தலைக்கு ஊற்ற வேண்டும். இவ்வாறு ஊற்றினால் உடலில் வெப்பம் வெளியேறுமாம்.

மழை மற்றும் குளிர் நேரங்களில் காய்ச்சல், சளி, ஜலதோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தலைக்கு குளிப்பதை தவிர்த்துவிட வேண்டும்.பொதுவாக சாப்பிட்ட பின்பு குளிக்க கூடாது என்பதை தெரிந்திருப்பீர்கள். செரிமான பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதே காரணம்.

மேலும் குளிர்காலங்களில் செரிமானம் தாமதமாகவே நடக்கும் என்பதால் உணவிற்கு பின்பு குளித்தால் அது செரிமானத்தினை மட்டுப்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெந்நீரில் குளிப்பதன் பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா இன்றும் பலரும் குளிர்ந்த நீரை விட வெந்நீரில் குளியல் போடவே அதிகமாக விரும்புகின்றனர். அவ்வாறு வெந்நீரில் தொடர்ந்து குளிப்பது ஆபத்தை ஏற்படுத்துமா என்று பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டிருக்கும்.அவ்வாறான சந்தேகங்களை தற்போது குறித்த  பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தற்போது வெந்நீரில் குளிப்பது ஆரோக்கியமா ஆபத்தா என்பதை அறிந்து கொள்வோம்.வெந்நீர் குளியல் ஆபத்தா1. மழை மற்றும் பனி போன்ற குளிர் காலங்களில் வெந்நீரில் குளிப்பது தான் நல்லது. அதிலும் சூடான தண்ணீரை விட வெதுவெதுப்பான நீரிலே குளிக்கலாம்.2. இவ்வாறான குளிர் காலங்களில் எண்ணெய் குளியலைத் தவிர்த்துவிட வேண்டும்.3.சைனஸ், மூக்கடைப்பு, ஆஸ்துமா பிரச்சினை இருப்பவர்கள் சுக்கு தைலத்தினை தண்ணீரில் பயன்படுத்தி குளிக்கலாம்.மேலும் தலையில் வெந்நீரை அப்படியே ஊற்றுவது தவறாகும். காரணம் தலையில் வெந்நீரை ஊற்றுவதால், உடலை விட்டு வெப்பம் வெளியேற முடியாமல் உள்ளேயே இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.வெந்நீரை முதலில் காலில் ஊற்றிவிட்டு, பின்பு முழங்கால், இடுப்பு, நெஞ்சுப்பகுதி என ஊற்றிய பின்பு இறுதியில் தலைக்கு ஊற்ற வேண்டும். இவ்வாறு ஊற்றினால் உடலில் வெப்பம் வெளியேறுமாம்.மழை மற்றும் குளிர் நேரங்களில் காய்ச்சல், சளி, ஜலதோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தலைக்கு குளிப்பதை தவிர்த்துவிட வேண்டும்.பொதுவாக சாப்பிட்ட பின்பு குளிக்க கூடாது என்பதை தெரிந்திருப்பீர்கள். செரிமான பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதே காரணம்.மேலும் குளிர்காலங்களில் செரிமானம் தாமதமாகவே நடக்கும் என்பதால் உணவிற்கு பின்பு குளித்தால் அது செரிமானத்தினை மட்டுப்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement