• May 02 2024

அரசாங்கத்துக்கு விலைபோகும் இனவாத அரசியல்வாதிகளே பொதுவேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்கின்றனர் - ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு

Tharun / Apr 19th 2024, 6:46 pm
image

Advertisement

அரசியல் ஞானம் இல்லாதவர்களே பொதுவேட்பாளர் பற்றி பேசிவருகின்றனர் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப்பேச்சாளர்  ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றின் போதே அவர் குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் இது பற்றி மேலும் தெரிவிக்கையில், 

தற்போது ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் தமிழ் வேட்பாளர்கள் தொடர்பாக பல்வேறு அபிப்பிராயங்கள் கூறப்பட்டு வருகிறது. இப்பொழுது பல தமிழ் தேசியம் பேசிய கட்சிகள் அது தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வந்தாலும்  2010ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த கால கட்டத்திலே ஜனாதிபதி  தேர்தல் நடைபெற்ற பொழுது பிரபாகரனினுடைய ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட  22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் புலிகள் இயக்கத்தினுடைய மறைவினை தொடர்ந்து அன்று வன்னியிலே யுத்தத்தை நடத்தி முடித்த அன்றைய இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்திருந்தார்கள். 

குறிப்பாக அந்த யுத்தம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைவதற்கு முன்னரே சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க சொல்லி அவர்கள் கூறியிருந்தார்கள். அன்று அந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்த 22 பேரும்தான் பல்வேறு கருத்துக்களை சொல்லி வந்தாலும் அதிலே சிலர் பொது வேட்பாளர் பற்றி சொல்லி வருகின்றார்கள்.  கடந்த காலங்களிலே பல தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டிருக்கிறார்கள். 

அந்த சூழ்நிலையில் இவர்கள்  அரசியல் நிர்வாக தெளிவற்ற நிலையில் இருந்தார்களா? அல்லது அரசியல் நிர்வாக ஞானமில்லாது இருந்தார்களா? அந்த செயல்பாட்டை முன்னெடுக்கின்ற நோக்கம் தென்னிலங்கையில் இருக்கின்ற சில அரசியல் செயல்பாட்டாளர்களுக்கு தமிழ் மக்கள் பொது வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துக்கொண்டு அவர்களிடம் இருந்து பணப்பெட்டியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்  வெளிப்படையான விடயம். இது தொடர்பில் தென்னிலங்கையில் செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன. 

பொது வேட்பாளர் தொடர்பில் தமிழ் மக்கள் ஏமாறாமல் இந்த நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுகின்ற சந்தர்ப்பத்திலே அவர் பெருவாரியான வெற்றியை பெறக்கூடிய சூழல் அமைந்திருக்கிறது.  ஆகவே அதனுடைய சூழ்ச்சியாளர்களின் கையாளர்களாக இந்த தமிழ் பொது வேட்பாளர்களாக பேசுகின்றவர்கள் இன்று செயற்படுகின்றார்கள் என்பதுதான் வெட்ட வெளிச்சமான உண்மை. என அவர்  தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு விலைபோகும் இனவாத அரசியல்வாதிகளே பொதுவேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்கின்றனர் - ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு அரசியல் ஞானம் இல்லாதவர்களே பொதுவேட்பாளர் பற்றி பேசிவருகின்றனர் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப்பேச்சாளர்  ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.இன்று யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றின் போதே அவர் குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.அவர் இது பற்றி மேலும் தெரிவிக்கையில், தற்போது ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் தமிழ் வேட்பாளர்கள் தொடர்பாக பல்வேறு அபிப்பிராயங்கள் கூறப்பட்டு வருகிறது. இப்பொழுது பல தமிழ் தேசியம் பேசிய கட்சிகள் அது தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வந்தாலும்  2010ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த கால கட்டத்திலே ஜனாதிபதி  தேர்தல் நடைபெற்ற பொழுது பிரபாகரனினுடைய ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட  22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் புலிகள் இயக்கத்தினுடைய மறைவினை தொடர்ந்து அன்று வன்னியிலே யுத்தத்தை நடத்தி முடித்த அன்றைய இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்திருந்தார்கள். குறிப்பாக அந்த யுத்தம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைவதற்கு முன்னரே சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க சொல்லி அவர்கள் கூறியிருந்தார்கள். அன்று அந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்த 22 பேரும்தான் பல்வேறு கருத்துக்களை சொல்லி வந்தாலும் அதிலே சிலர் பொது வேட்பாளர் பற்றி சொல்லி வருகின்றார்கள்.  கடந்த காலங்களிலே பல தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டிருக்கிறார்கள். அந்த சூழ்நிலையில் இவர்கள்  அரசியல் நிர்வாக தெளிவற்ற நிலையில் இருந்தார்களா அல்லது அரசியல் நிர்வாக ஞானமில்லாது இருந்தார்களா அந்த செயல்பாட்டை முன்னெடுக்கின்ற நோக்கம் தென்னிலங்கையில் இருக்கின்ற சில அரசியல் செயல்பாட்டாளர்களுக்கு தமிழ் மக்கள் பொது வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துக்கொண்டு அவர்களிடம் இருந்து பணப்பெட்டியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்  வெளிப்படையான விடயம். இது தொடர்பில் தென்னிலங்கையில் செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன. பொது வேட்பாளர் தொடர்பில் தமிழ் மக்கள் ஏமாறாமல் இந்த நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுகின்ற சந்தர்ப்பத்திலே அவர் பெருவாரியான வெற்றியை பெறக்கூடிய சூழல் அமைந்திருக்கிறது.  ஆகவே அதனுடைய சூழ்ச்சியாளர்களின் கையாளர்களாக இந்த தமிழ் பொது வேட்பாளர்களாக பேசுகின்றவர்கள் இன்று செயற்படுகின்றார்கள் என்பதுதான் வெட்ட வெளிச்சமான உண்மை. என அவர்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement