இந்தியா சந்திரனுக்கு ரொக்கெற் அனுப்பியது ஆனால் மகிந்த ராஜபக்ச குடும்பம் நாட்டினை வங்குரோத்து அடைய ராக்கெட் அனுப்பியுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று தொடங்கியுள்ளது. இதன் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார அவர்கள் இந்தியா நிலவுக்கு ரொக்கெற் அனுப்பியது. எங்களுடைய ஏழை மக்களை விட 800 மில்லியன் ஏழை மக்கள் இருக்கின்றார்கள். இந்தியா தற்போது உலகிலே மிகப்பெரிய சிலையை நிர்வகிப்பதற்கு தயாராகியுள்ளது. இந்தியா அப்படிச்சென்று அங்கிருக்கும் மலசல கூடங்களை கட்டிக்கொடுங்கள் என்று யாரும் கூறுவதில்லை. நாங்கள் இதற்கு தலையிடுவது கடல் சார் நாடு என்ற ரீதியிலே போக்குவரத்து அதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் என பிரமித்த பண்டார, மேலும் இந்து சமுத்திரப் பகுதியில் பல்வேறு குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலடியாகவே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கௌரவ அமைச்சர் அவர்கள் வங்குரோத்து அடைந்த இலங்கையை ஒப்பீடு செய்கின்றார். துரித பொருளாதார வளர்ச்சியை கொண்ட இந்தியாவுடன் ஒப்பீடு செய்கின்றார். அந்த ஒப்பீட்டு ரீதியில் பார்க்கின்ற போது இலங்கையின் நிலைமை மற்றும் இந்தியாவின் நிலைமை எவ்வாறு இருக்கின்றது. இந்தியா ரொக்கெற் அனுப்பியிருக்கிறதாம் சந்திரனுக்கு. ராஜபக்சர்கள் நாட்டை வங்குரோத்து அடைய ரொக்கெற் அனுப்பியிருந்தார்கள். அந்த ராக்கெட்டில் வங்குரோத்து அடைந்த நாடு இது. இது தான் உண்மை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டை வங்குரோத்து அடைய செய்ய ரொக்கெற் அனுப்பியது ராஜபக்ஷர்களே - பெரமுன தரப்பு அமைச்சருக்கு பதிலடி வழங்கிய சஜித்.samugammedia இந்தியா சந்திரனுக்கு ரொக்கெற் அனுப்பியது ஆனால் மகிந்த ராஜபக்ச குடும்பம் நாட்டினை வங்குரோத்து அடைய ராக்கெட் அனுப்பியுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.இந்த வருடம் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று தொடங்கியுள்ளது. இதன் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார அவர்கள் இந்தியா நிலவுக்கு ரொக்கெற் அனுப்பியது. எங்களுடைய ஏழை மக்களை விட 800 மில்லியன் ஏழை மக்கள் இருக்கின்றார்கள். இந்தியா தற்போது உலகிலே மிகப்பெரிய சிலையை நிர்வகிப்பதற்கு தயாராகியுள்ளது. இந்தியா அப்படிச்சென்று அங்கிருக்கும் மலசல கூடங்களை கட்டிக்கொடுங்கள் என்று யாரும் கூறுவதில்லை. நாங்கள் இதற்கு தலையிடுவது கடல் சார் நாடு என்ற ரீதியிலே போக்குவரத்து அதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் என பிரமித்த பண்டார, மேலும் இந்து சமுத்திரப் பகுதியில் பல்வேறு குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடியாகவே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.கௌரவ அமைச்சர் அவர்கள் வங்குரோத்து அடைந்த இலங்கையை ஒப்பீடு செய்கின்றார். துரித பொருளாதார வளர்ச்சியை கொண்ட இந்தியாவுடன் ஒப்பீடு செய்கின்றார். அந்த ஒப்பீட்டு ரீதியில் பார்க்கின்ற போது இலங்கையின் நிலைமை மற்றும் இந்தியாவின் நிலைமை எவ்வாறு இருக்கின்றது. இந்தியா ரொக்கெற் அனுப்பியிருக்கிறதாம் சந்திரனுக்கு. ராஜபக்சர்கள் நாட்டை வங்குரோத்து அடைய ரொக்கெற் அனுப்பியிருந்தார்கள். அந்த ராக்கெட்டில் வங்குரோத்து அடைந்த நாடு இது. இது தான் உண்மை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.