• May 09 2024

செஞ்சோலைப் படுகொலைக்கு விமானம் வழங்கியது உக்ரைன் அரசாங்கமே! – தமிழர்களின் வலி இப்போது தெரிகின்றதா..?? samugammedia

Chithra / Jun 20th 2023, 5:19 pm
image

Advertisement

இலங்கையில் 30 ஆண்டுகளாக நிகழ்ந்த உள்நாட்டு யுத்ததில், பாரிய அவலங்களை எதிர்கொண்ட தமிழனம், 

அதன் வலிகளை சுமந்து, வடுக்கள் நிரம்பிய அனுபவங்களை கொண்டுள்ளதன் அடிப்படையில், 

உக்ரைன் நாட்டு மக்களின் வலிகளையும் உணரக்கூடியதாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கவலை வெளியிட்டிருந்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது உக்ரைன் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அவலநிலைகள் தொடர்பாக குறிப்பிடும் போது இவ்வாறு கவலை வெளியிட்டிருந்தார்.

உலக சமாதானத்துக்காக, உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புப் போரை ரஸ்ய அரசாங்கம் நிறுத்த வேண்டும்.

இழப்பின் வலிசுமந்து நிற்கும், உக்ரைன் மக்களுக்காக நாம் பரிதாபப்படுகிறோம். 

சொந்த நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்தாலும், நாடற்ற மனிதர்களாக ஏதிலிகளாக்கப்படுவதும் எத்தனை கொடியது என்பதை ஈழத்தமிழினம் நன்கு அறியும் 

தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் மனிதப் பேரவலமொன்றின் விளிம்பு நிலையில் நின்று, ஏதிலிகளாக அந்தரிக்கும் உக்ரைன் மக்களுக்கும் இதேநிலை தொடரக் கூடாது என்பதை உணரத்தலைப்பட்டிருக்கிறோம்.

இதுவரை 6.5 இலட்சம் உக்ரைன் மக்கள் நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர்.55 இலட்சம் உக்ரைனியக் குழந்தைகளின் கல்வி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைனிலுள்ள பாடசாலைகளில் ஒருநாளைக்கு சராசரியாக 22 பாடசாலைகள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.

ஒரு கொடிய யுத்தத்திற்குள் நின்று, அந்த யுத்தக் கொடுமைகளின் அத்தனை பக்கங்களையும் அணுவணுவாக அனுபவித்தவன் என்கின்ற வகையில், என்னால் இந்தப் போரையும் அதன் விளைவுகளையும் இலகுவானதாகக் கருதமுடியவில்லை.

ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்புப் போரின்போது, உக்ரைன் இலங்கை அரசுக்கு தனது பரிபூரண ஆதரவை வழங்கியிருந்தது. 

குறிப்பாக 61 மாணவிகளின் உயிரைக் குடித்த, செஞ்சோலைப் படுகொலை உள்ளிட்ட பல விமானத் தாக்குதல்களின் போது, அத்தகையை குண்டுவீசும் விமானங்களை உக்ரைனியர்களே செலுத்தியிருந்தனர். 

இறுதிப்போரின் இறுதி நாட்களில், பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களை நோக்கி, 

தமது உயிரைக் காக்கும் ஒரே எண்ணத்தோடு எமது மக்கள் திரண்டிருந்தபோது, அவ்விடங்களில் நடத்தப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதல்களிலும் உக்ரைனியர்களில் நேரடிப் பங்கிருந்தது.

நாங்கள் ஒரே நடாக ஒற்றுமையாக வாழவேண்டும் என்று, இந்த உயர்ந்த சபையில் அடிக்கடி கூறிவருகின்ற சகோதர இன நண்பர்கள், ஒரு யுத்தத்தின் கொடுமை எப்படி இருக்கும் என்ற எனது உணர்வை, ஒரு தமிழனின் உணர்வாக மாத்திரம் பார்க்காமல், ஒரு சக மனிதனின் உணர்வாகப் பார்க்கவேண்டும் என்று தயவாகக் கேட்டுக்கொள்கிறேன்.

செஞ்சோலைப் படுகொலைக்கு விமானம் வழங்கியது உக்ரைன் அரசாங்கமே – தமிழர்களின் வலி இப்போது தெரிகின்றதா. samugammedia இலங்கையில் 30 ஆண்டுகளாக நிகழ்ந்த உள்நாட்டு யுத்ததில், பாரிய அவலங்களை எதிர்கொண்ட தமிழனம், அதன் வலிகளை சுமந்து, வடுக்கள் நிரம்பிய அனுபவங்களை கொண்டுள்ளதன் அடிப்படையில், உக்ரைன் நாட்டு மக்களின் வலிகளையும் உணரக்கூடியதாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கவலை வெளியிட்டிருந்தார்.இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது உக்ரைன் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அவலநிலைகள் தொடர்பாக குறிப்பிடும் போது இவ்வாறு கவலை வெளியிட்டிருந்தார்.உலக சமாதானத்துக்காக, உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புப் போரை ரஸ்ய அரசாங்கம் நிறுத்த வேண்டும்.இழப்பின் வலிசுமந்து நிற்கும், உக்ரைன் மக்களுக்காக நாம் பரிதாபப்படுகிறோம். சொந்த நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்தாலும், நாடற்ற மனிதர்களாக ஏதிலிகளாக்கப்படுவதும் எத்தனை கொடியது என்பதை ஈழத்தமிழினம் நன்கு அறியும் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் மனிதப் பேரவலமொன்றின் விளிம்பு நிலையில் நின்று, ஏதிலிகளாக அந்தரிக்கும் உக்ரைன் மக்களுக்கும் இதேநிலை தொடரக் கூடாது என்பதை உணரத்தலைப்பட்டிருக்கிறோம்.இதுவரை 6.5 இலட்சம் உக்ரைன் மக்கள் நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர்.55 இலட்சம் உக்ரைனியக் குழந்தைகளின் கல்வி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளனர்.உக்ரைனிலுள்ள பாடசாலைகளில் ஒருநாளைக்கு சராசரியாக 22 பாடசாலைகள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.ஒரு கொடிய யுத்தத்திற்குள் நின்று, அந்த யுத்தக் கொடுமைகளின் அத்தனை பக்கங்களையும் அணுவணுவாக அனுபவித்தவன் என்கின்ற வகையில், என்னால் இந்தப் போரையும் அதன் விளைவுகளையும் இலகுவானதாகக் கருதமுடியவில்லை.ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்புப் போரின்போது, உக்ரைன் இலங்கை அரசுக்கு தனது பரிபூரண ஆதரவை வழங்கியிருந்தது. குறிப்பாக 61 மாணவிகளின் உயிரைக் குடித்த, செஞ்சோலைப் படுகொலை உள்ளிட்ட பல விமானத் தாக்குதல்களின் போது, அத்தகையை குண்டுவீசும் விமானங்களை உக்ரைனியர்களே செலுத்தியிருந்தனர். இறுதிப்போரின் இறுதி நாட்களில், பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களை நோக்கி, தமது உயிரைக் காக்கும் ஒரே எண்ணத்தோடு எமது மக்கள் திரண்டிருந்தபோது, அவ்விடங்களில் நடத்தப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதல்களிலும் உக்ரைனியர்களில் நேரடிப் பங்கிருந்தது.நாங்கள் ஒரே நடாக ஒற்றுமையாக வாழவேண்டும் என்று, இந்த உயர்ந்த சபையில் அடிக்கடி கூறிவருகின்ற சகோதர இன நண்பர்கள், ஒரு யுத்தத்தின் கொடுமை எப்படி இருக்கும் என்ற எனது உணர்வை, ஒரு தமிழனின் உணர்வாக மாத்திரம் பார்க்காமல், ஒரு சக மனிதனின் உணர்வாகப் பார்க்கவேண்டும் என்று தயவாகக் கேட்டுக்கொள்கிறேன்.

Advertisement

Advertisement

Advertisement