• May 20 2024

இலங்கையில் பொழியும் டொலர் மழை...! வெளியான விசேட அறிவிப்பு samugammedia

Chithra / Jun 4th 2023, 2:33 pm
image

Advertisement

இலங்கைக்கு சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பை அடுத்தே இந்த வருட இறுதிக்குள் இந்த நிதி உதவியை வழங்கத் தீர்மானித்துள்ளது.

இதன் அடிப்படையில், உலக வங்கியின் நிபந்தனைகளை இலகுவாக்கி 450 மில்லியன் டொலர் நிதி உதவி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நீண்ட நாட்களாக நிதிச் சந்தையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைகளைச் சாதகமான முறைமையின் கீழ் கையாளுதல் போன்ற விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டு வந்தது.

மேலும், புள்ளிவிவரங்களுடன் தயாரிக்கப்பட்ட இருதரப்பு திட்ட வரைபு உலக வங்கி பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது.

ஆனால், பல்வேறு நிபந்தனைகளுடன் உலக வங்கியின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தனர்.

இவ்வாறு நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர் நிபந்தனைகள் சிலவற்றை இலகுவாக்கி 450 மில்லியன் டொலர் நிதி உதவிக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிதி உதவி வருட இறுதிக்குள் கிடைக்கும் எனவும் ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொழியும் டொலர் மழை. வெளியான விசேட அறிவிப்பு samugammedia இலங்கைக்கு சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பை அடுத்தே இந்த வருட இறுதிக்குள் இந்த நிதி உதவியை வழங்கத் தீர்மானித்துள்ளது.இதன் அடிப்படையில், உலக வங்கியின் நிபந்தனைகளை இலகுவாக்கி 450 மில்லியன் டொலர் நிதி உதவி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நீண்ட நாட்களாக நிதிச் சந்தையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைகளைச் சாதகமான முறைமையின் கீழ் கையாளுதல் போன்ற விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டு வந்தது.மேலும், புள்ளிவிவரங்களுடன் தயாரிக்கப்பட்ட இருதரப்பு திட்ட வரைபு உலக வங்கி பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது.ஆனால், பல்வேறு நிபந்தனைகளுடன் உலக வங்கியின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தனர்.இவ்வாறு நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர் நிபந்தனைகள் சிலவற்றை இலகுவாக்கி 450 மில்லியன் டொலர் நிதி உதவிக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.இந்த நிதி உதவி வருட இறுதிக்குள் கிடைக்கும் எனவும் ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement