• May 18 2024

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தக்கசிவு ஏற்படும் வரை மாணவனை உதைத்த 5 மாணவர்கள் கைது! samugammedia

Chithra / Jun 4th 2023, 2:39 pm
image

Advertisement

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவனை அடிவயிற்றுப் பகுதியில் உதைத்து இரத்தக்கசிவு ஏற்படுத்திய  சம்பவம் தொடர்பில் ஐந்து பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவனுடன் பரீட்சைக்கு தோற்றிய சக மாணவர்கள் ஐவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுமுன்தினம் (02) பாணந்துறையிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவன் ஒருவரை மேலும் ஐந்து மாணவர்கள் தாக்கியதாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு சிறுநீர் பாதையில் இருந்து இரத்தம் வெளியேறியதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முறைப்பாடு தொடர்பில் மேலும் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என முறைப்பாட்டாளரின் கோரிக்கையின் காரணமாக கைது செய்யப்பட்ட ஐந்து மாணவர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தக்கசிவு ஏற்படும் வரை மாணவனை உதைத்த 5 மாணவர்கள் கைது samugammedia சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவனை அடிவயிற்றுப் பகுதியில் உதைத்து இரத்தக்கசிவு ஏற்படுத்திய  சம்பவம் தொடர்பில் ஐந்து பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.தாக்குதலுக்கு உள்ளான மாணவனுடன் பரீட்சைக்கு தோற்றிய சக மாணவர்கள் ஐவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நேற்றுமுன்தினம் (02) பாணந்துறையிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவன் ஒருவரை மேலும் ஐந்து மாணவர்கள் தாக்கியதாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.தாக்குதலுக்கு உள்ளான மாணவன் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு சிறுநீர் பாதையில் இருந்து இரத்தம் வெளியேறியதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.முறைப்பாடு தொடர்பில் மேலும் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என முறைப்பாட்டாளரின் கோரிக்கையின் காரணமாக கைது செய்யப்பட்ட ஐந்து மாணவர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement