• Feb 14 2025

யாழில் 13 வயது மகளை அடித்து துன்புறுத்திய தாய் - நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Chithra / Feb 13th 2025, 1:05 pm
image

 

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனது 13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

தந்தையை பிரிந்த நிலையில் இரு பிள்ளைகளும் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். 

அந்நிலையில் தாயார் தனது மூத்த மகளை அடித்து துன்புறுத்துவதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் மூன்று தடவைகளுக்கு மேல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று,

பொலிஸ் விசாரணையின் பின்னர் மகளை அடித்து துன்புறுத்த கூடாது என தாய்க்கு பொலிஸார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, தாய் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், 

அதனால் தான் உயிரை மாய்க்க போவதாகவும் மகள் தனது தந்தையின் சகோதரிகளுக்கு தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளார். 

அதனை அடுத்து, தந்தையின் சகோதரிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கி பொலிஸாருடன் சென்று மகளை மீட்டுள்ளனர். 

பொலிஸ் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் புதன்கிழமை (12) தாயாரை கைது செய்த பொலிஸார் மகளையும், தாயையும் யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை, 

மகளை சட்டவைத்திய அதிகாரி முன்பாக முற்படுத்தி வைத்திய அறிக்கையை பெற பொலிஸாருக்கு உத்தரவிட்ட மன்று, தாயாரை பிணையில் செல்ல அனுமதித்தது. 

யாழில் 13 வயது மகளை அடித்து துன்புறுத்திய தாய் - நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு  யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனது 13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்தந்தையை பிரிந்த நிலையில் இரு பிள்ளைகளும் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். அந்நிலையில் தாயார் தனது மூத்த மகளை அடித்து துன்புறுத்துவதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் மூன்று தடவைகளுக்கு மேல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று,பொலிஸ் விசாரணையின் பின்னர் மகளை அடித்து துன்புறுத்த கூடாது என தாய்க்கு பொலிஸார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, தாய் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், அதனால் தான் உயிரை மாய்க்க போவதாகவும் மகள் தனது தந்தையின் சகோதரிகளுக்கு தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளார். அதனை அடுத்து, தந்தையின் சகோதரிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கி பொலிஸாருடன் சென்று மகளை மீட்டுள்ளனர். பொலிஸ் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் புதன்கிழமை (12) தாயாரை கைது செய்த பொலிஸார் மகளையும், தாயையும் யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை, மகளை சட்டவைத்திய அதிகாரி முன்பாக முற்படுத்தி வைத்திய அறிக்கையை பெற பொலிஸாருக்கு உத்தரவிட்ட மன்று, தாயாரை பிணையில் செல்ல அனுமதித்தது. 

Advertisement

Advertisement

Advertisement