• Nov 28 2024

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் மதுபோதையில் அட்டகாசம் செய்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை...!

Sharmi / May 28th 2024, 10:24 pm
image

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் திரைப்பட பாணியில் மோட்டார் சைக்கிளுடன் அத்துமீறி உள்நுழைந்த இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்றிரவு 10 மணியளவில் காயமேற்பட்ட ஒருவரை ஏற்றிக்கொண்டு மோட்டார் சைக்கிளை செலுத்தியவாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்குள் ஒருவர் நுழைந்துள்ளார்.

இது தொடர்பில், வைத்தியசாலை ஊழியர் ஒருவர்  மோட்டார் சைக்கிளில் வருகை தந்தவரிடம் கேள்வி எழுப்பியபோது, குறித்த நபர் அவரை அச்சு இயந்திரத்தால் தாக்குவது கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்தது. 

இதன்போது, காயமடைந்த வைத்தியசாலை ஊழியர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வைத்தியசாலைக்குள் அத்துமீறி மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் மதுபோதையில் இருந்தததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

குறித்த நபர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று(28) ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரையும் ஜீன் 11 ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அதேவேளை, மோட்டார் சைக்கிளில் வந்த காயமடைந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் மதுபோதையில் அட்டகாசம் செய்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் திரைப்பட பாணியில் மோட்டார் சைக்கிளுடன் அத்துமீறி உள்நுழைந்த இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நேற்றிரவு 10 மணியளவில் காயமேற்பட்ட ஒருவரை ஏற்றிக்கொண்டு மோட்டார் சைக்கிளை செலுத்தியவாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்குள் ஒருவர் நுழைந்துள்ளார்.இது தொடர்பில், வைத்தியசாலை ஊழியர் ஒருவர்  மோட்டார் சைக்கிளில் வருகை தந்தவரிடம் கேள்வி எழுப்பியபோது, குறித்த நபர் அவரை அச்சு இயந்திரத்தால் தாக்குவது கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்தது. இதன்போது, காயமடைந்த வைத்தியசாலை ஊழியர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.வைத்தியசாலைக்குள் அத்துமீறி மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் மதுபோதையில் இருந்தததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த நபர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று(28) ஆஜர்படுத்தப்பட்டார்.இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரையும் ஜீன் 11 ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.அதேவேளை, மோட்டார் சைக்கிளில் வந்த காயமடைந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement