• Jan 18 2025

யாழ். கலாசார மத்திய நிலையத்தின் பெயர் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் என மாற்றம்

Tharmini / Jan 18th 2025, 12:01 pm
image

யாழ். கலாசார மத்திய நிலையத்தின் பெயர் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது 

குறித்த பெயர் மாற்ற வைபவம் சம்பிரதாயபூர்வமாக இன்று (18) யாழ்.  கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. 

இதன் பொழுது புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கிணிடும சுனில் செனவி ,கடற்றொழில் நீரியல் வள துறை அமைச்சர் சந்திரசேகரம்  ,இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா இணைந்து  பெயரை டிஜிட்டல் திரை மூலம் மாற்றம் செய்தனர்.

இதன் பொழுது யாழ். மாநகர சபை ஆணையாளர் கிருஷ்ணேந்திரன் யாழ் இந்திய துணை தூதுவர் சாய் முரளி,புத்த சாசன ,சமய மற்றும்  கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர்கள், சமய தலைவர்கள் , பத்திரிகை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

இந்தியாவின் 1.6 பில்லியன் ரூபாய் நிதிப் பங்களிப்புடன் கடந்த 2023 ஆம் ஆண்டு குறித்த கலாசார மத்திய நிலையம்  அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .






யாழ். கலாசார மத்திய நிலையத்தின் பெயர் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் என மாற்றம் யாழ். கலாசார மத்திய நிலையத்தின் பெயர் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறித்த பெயர் மாற்ற வைபவம் சம்பிரதாயபூர்வமாக இன்று (18) யாழ்.  கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. இதன் பொழுது புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கிணிடும சுனில் செனவி ,கடற்றொழில் நீரியல் வள துறை அமைச்சர் சந்திரசேகரம்  ,இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா இணைந்து  பெயரை டிஜிட்டல் திரை மூலம் மாற்றம் செய்தனர்.இதன் பொழுது யாழ். மாநகர சபை ஆணையாளர் கிருஷ்ணேந்திரன் யாழ் இந்திய துணை தூதுவர் சாய் முரளி,புத்த சாசன ,சமய மற்றும்  கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர்கள், சமய தலைவர்கள் , பத்திரிகை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்இந்தியாவின் 1.6 பில்லியன் ரூபாய் நிதிப் பங்களிப்புடன் கடந்த 2023 ஆம் ஆண்டு குறித்த கலாசார மத்திய நிலையம்  அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

Advertisement

Advertisement

Advertisement