• May 03 2024

நீதிமன்ற தடையை மீறி மலேசியா பறக்க முயன்ற யாழ். வாசிக்கு ஏற்பட்ட கதி..!

Chithra / Apr 10th 2024, 3:42 pm
image

Advertisement

 

போலி  கடவுச்சீட்டை பயன்படுத்தி மலேசியா செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவரே இன்று அதிகாலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவின் கோலாலம்பூர் நோக்கிச் செல்லவிருந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இவர்,  

நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந் நிலையில் இவர் போலி வெளிநாட்டு கடவுச்சீட்டை தயாரித்து  வெளிநாடு செல்ல முயன்றவேளை கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள மனித கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நீதிமன்ற தடையை மீறி மலேசியா பறக்க முயன்ற யாழ். வாசிக்கு ஏற்பட்ட கதி.  போலி  கடவுச்சீட்டை பயன்படுத்தி மலேசியா செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ். சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவரே இன்று அதிகாலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.மலேசியாவின் கோலாலம்பூர் நோக்கிச் செல்லவிருந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2012ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இவர்,  நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.இந் நிலையில் இவர் போலி வெளிநாட்டு கடவுச்சீட்டை தயாரித்து  வெளிநாடு செல்ல முயன்றவேளை கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள மனித கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement