• Nov 22 2024

யாழ் உடுப்பிட்டி மதுபான சாலை விவகாரம்...! அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை...!samugammedia

Sharmi / Dec 20th 2023, 10:06 am
image

யாழ் வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில்  புதிதாக திறக்கப்பட்ட மதுபான சாலை தொடர்பில் நேரில் வந்து பார்வையிட்டு தீர்வு பெற்றுத் தருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.


குறித்த மதுபானசாலை தொடர்பில் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் யாழிலுள்ள கடற்றொழில் அமைச்சரின் அலுவலகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்றையதினம் சந்தித்து கலந்துரையாடினர்.


இச் சந்திப்பில், யாழ். மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன், கரவெட்டி பிரதேச செயலாளர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.


இந்நிலையில் விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த பிரதேசத்திற்கு நேரடியாக நாளை(21)  விஜயம் செய்து நிலமைகளை ஆராய்ந்த பின்னர் அது தொடர்பில் இரு தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடுவதாக தெரிவித்துள்ளார்.


அதேவேளை குறித்த மதுபானசாலைக்கு மக்கள் எதிர்ப்புகள் இருந்தால் அந்த இடத்தில் மதுபானசாலை இயங்க அனுமதியை வழங்க முடியாதென யாழ். மாவட்ட செயலாளர் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் உறுதிபட குறிப்பிட்டிருந்தார்.


தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், பொதுமக்கள் பயணிக்கும் ஒடுங்கிய உடுப்பிட்டி வதிரி வீதியில் மதுபானசாலை அமைந்துள்ளதால் குறித்த இடத்தில் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.


அதேவேளை குறித்த பகுதியில் பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள், சமூக மட்ட அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி பிரதேச செயலாளர் ஏன் இவ்வாறு

செயல்படுகின்றார் என உடுப்பிட்டி வாழ் சமூக மட்ட அமைப்புகளின் குற்றஞ்சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


யாழ் உடுப்பிட்டி மதுபான சாலை விவகாரம். அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை.samugammedia யாழ் வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில்  புதிதாக திறக்கப்பட்ட மதுபான சாலை தொடர்பில் நேரில் வந்து பார்வையிட்டு தீர்வு பெற்றுத் தருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.குறித்த மதுபானசாலை தொடர்பில் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் யாழிலுள்ள கடற்றொழில் அமைச்சரின் அலுவலகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்றையதினம் சந்தித்து கலந்துரையாடினர்.இச் சந்திப்பில், யாழ். மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன், கரவெட்டி பிரதேச செயலாளர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.இந்நிலையில் விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த பிரதேசத்திற்கு நேரடியாக நாளை(21)  விஜயம் செய்து நிலமைகளை ஆராய்ந்த பின்னர் அது தொடர்பில் இரு தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடுவதாக தெரிவித்துள்ளார்.அதேவேளை குறித்த மதுபானசாலைக்கு மக்கள் எதிர்ப்புகள் இருந்தால் அந்த இடத்தில் மதுபானசாலை இயங்க அனுமதியை வழங்க முடியாதென யாழ். மாவட்ட செயலாளர் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் உறுதிபட குறிப்பிட்டிருந்தார்.தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், பொதுமக்கள் பயணிக்கும் ஒடுங்கிய உடுப்பிட்டி வதிரி வீதியில் மதுபானசாலை அமைந்துள்ளதால் குறித்த இடத்தில் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.அதேவேளை குறித்த பகுதியில் பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள், சமூக மட்ட அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி பிரதேச செயலாளர் ஏன் இவ்வாறுசெயல்படுகின்றார் என உடுப்பிட்டி வாழ் சமூக மட்ட அமைப்புகளின் குற்றஞ்சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement