• Oct 29 2024

யாழ் பல்கலையில் அரசறிவியலாளன் இதழ் 06 வெளியீட்டு விழா..!!

Tamil nila / Apr 3rd 2024, 8:03 pm
image

Advertisement

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் ஒன்றியத்தின் இதழான  'அரசறிவியலாளன்' 'இதழ்-06 வது இதழ் வெளியீட்டு விழா இன்று  புதன்கிழமை  பிற்பகல் (03.04.2024) 3.00 மணியளவில் கைலாசபதி கலையரங்கில்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் ஒன்றியத்தின் தலைவர்  சு.டிலக்சன் தலமையில் இடம் பெற்றது.



இதில் முதல் நிகழ்வாக மங்கல விளக்கு ஏற்றப்பட்டது. 

இதில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் சி.சிறி சற்குணராசா,  ஐபீசீ குழும தலைவர் கந்தையா பாஸ்கரன்,  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கலைப்பீட பீடாதிபதி சி.ரகுராம், கௌரவ  விருந்தினர்களாக கலந்து கொண்ட  அரசறியியல் துறை தலைவர் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம், அரசறிவியல் துறை விரிவுரையாளர்களான  ந.தர்மினி, கு.யஸ்மிகா உட்பட பலரும் ஏற்றுவைத்தனர்.


பின்னர் வரவேற்பு, உரை, தலமை உரையை தொடர்ந்து போசகர் உரையினை யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் தலைவர் பேராசிரியர் கே.ரீ கணேசலிங்கம், வாழ்த்துரைகளை  யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரும் நிகழ்வின் பிரதம விருந்தினருமான பேராசிரியர் சி.சிறிசற்குணராசா, கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், ஆகியோர் வழங்கியதை தொடர்ந்து  வெளியீட்டுரையினை அரசறிவியல் துறை விரிவுரையாளர் திருமதி கு.ஜஸ்மியா, நிகழ்தினார் தொடர்ந்து நூல் வெளியீடு இடம் பெற்றது.


ஆய்வுரையினை யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை வருகை விரிவுரையாளரும், சட்டத்தரணியும், அரசியல் ஆய்வாளரும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் நிகழ்த்தினார்.

தொடர்ந்து ஏற்புரையினை இதழாசிரியர் நிகழ்த்தினார்.



இதில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக பேராசிரியர், விரிவுரையாளர்கள்,  பீடாதிபதிகள், பல்கலைக் மாணவர்கள் தொழிலதிபர்கள், நலன்விரும்பிகள், ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

யாழ் பல்கலையில் அரசறிவியலாளன் இதழ் 06 வெளியீட்டு விழா. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் ஒன்றியத்தின் இதழான  'அரசறிவியலாளன்' 'இதழ்-06 வது இதழ் வெளியீட்டு விழா இன்று  புதன்கிழமை  பிற்பகல் (03.04.2024) 3.00 மணியளவில் கைலாசபதி கலையரங்கில்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் ஒன்றியத்தின் தலைவர்  சு.டிலக்சன் தலமையில் இடம் பெற்றது.இதில் முதல் நிகழ்வாக மங்கல விளக்கு ஏற்றப்பட்டது. இதில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் சி.சிறி சற்குணராசா,  ஐபீசீ குழும தலைவர் கந்தையா பாஸ்கரன்,  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கலைப்பீட பீடாதிபதி சி.ரகுராம், கௌரவ  விருந்தினர்களாக கலந்து கொண்ட  அரசறியியல் துறை தலைவர் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம், அரசறிவியல் துறை விரிவுரையாளர்களான  ந.தர்மினி, கு.யஸ்மிகா உட்பட பலரும் ஏற்றுவைத்தனர்.பின்னர் வரவேற்பு, உரை, தலமை உரையை தொடர்ந்து போசகர் உரையினை யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் தலைவர் பேராசிரியர் கே.ரீ கணேசலிங்கம், வாழ்த்துரைகளை  யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரும் நிகழ்வின் பிரதம விருந்தினருமான பேராசிரியர் சி.சிறிசற்குணராசா, கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், ஆகியோர் வழங்கியதை தொடர்ந்து  வெளியீட்டுரையினை அரசறிவியல் துறை விரிவுரையாளர் திருமதி கு.ஜஸ்மியா, நிகழ்தினார் தொடர்ந்து நூல் வெளியீடு இடம் பெற்றது.ஆய்வுரையினை யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை வருகை விரிவுரையாளரும், சட்டத்தரணியும், அரசியல் ஆய்வாளரும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் நிகழ்த்தினார்.தொடர்ந்து ஏற்புரையினை இதழாசிரியர் நிகழ்த்தினார்.இதில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக பேராசிரியர், விரிவுரையாளர்கள்,  பீடாதிபதிகள், பல்கலைக் மாணவர்கள் தொழிலதிபர்கள், நலன்விரும்பிகள், ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement