• Nov 26 2024

யாழ் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா சற்றுமுன் ஆரம்பம்...!

Sharmi / Mar 14th 2024, 9:40 am
image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் சற்று முன்னர் ஆரம்பமாகியது.

பட்டமளிப்பு விழாவில் 441 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து எட்டு உள்வாரி மாணவர்களுக்கும், 330 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளதுடன் , 94 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும்  வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர் பட்டப்படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 441 பேர் உயர் பட்டத் தகைமைகளைப் பெறவுள்ளனர். அவர்களில் கலாநிதிப் பட்டத்தை ஒருவரும், முது மெய்யியல்மாணிப் பட்டத்தை 9 பேரும், சுற்றுச்சூழல் முகாமைத்துவத்தில் முதுவிஞ்ஞானமாணிப் பட்டத்தை ஒருவரும், பண்பாட்டுக் கற்கைகளில் முதுமாணிப்பட்டத்தை 33 பேரும், கிறிஸ்தவக் கற்கைகளில் முதுமாணிப்பட்டத்தை 36 பேரும், தூய சக்தித் தொழில்நுட்பங்களில் முதுமாணிப் பட்டத்தை ஒருவரும், வியாபார நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தை 73 பேரும், தமிழில் முதுமாணிப்பட்டத்தை 40 பேரும், கல்வியில் முதுமாணிப் பட்டத்தை 195 பேரும், சைவசித்தாந்தத்தில் முதுமாணிப்பட்டத்தை 28 பேரும், கல்வியியலில்; பட்டப்பின் தகைமைச் சான்றிதழை (பகுதி நேரம்) 24 பேரும்; பெறவிருக்கின்றனர்.

மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 29 பேர் மருத்துவமாணி சத்திர சிகிச்சைமாணிப் பட்டத்தையும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 94 பேர் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 20 பேர் பிரயோக விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 168 பேர் விஞ்ஞானமாணிப் (பொது) பட்டத்தையும், 24 பேர் கணினி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 25 பேர் கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், பெறவுள்ளனர்.

இவர்களுடன் விவசாய பீடத்தைச் சேர்ந்த 96 பேர் விவசாயத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், பொறியியற் பீடத்தைச் சேர்ந்த 119 பேர் பொறியியல் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், தொழில்நுட்பப் பீடத்தைச் சேர்ந்த 97 பேர் உயிர்முறைமைகளில் சிறப்பு தொழில்நுட்பமாணிப் பட்டத்தையும், 80 பேர் பொறியியலில் சிறப்பு தொழில்நுட்பமாணிப் பட்டத்தையும் பெறவுள்ளனர்.

அத்துடன், முகாமைத்துக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இருந்து சிறப்பு வியாபார நிர்வாகமாணிப் பட்டத்தை 276 பேரும், வியாபார நிர்வாகமாணிப் (பொது) பட்டத்தை 7 பேரும், சிறப்பு வணிகமாணிப் பட்டத்தை 81 பேரும், வணிகமாணிப் (பொது) பட்டத்தை இருவரும் பெறவிருக்கின்றனர்.

இவர்களுடன் கலைப்பீடத்தில் இருந்து சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 398 பேரும், பொதுக் கலைமாணிப் பட்டத்தை 12 பேரும், மொழிபெயர்ப்புக் கற்கைகளில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 21 பேரும் பெறவிருக்கின்றனர்.

மேலும், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்திலிருந்து தாதியியலில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தை 38 பேரும், மருந்தகவியல் சிறப்புமாணிப் பட்டத்தை 49 பேரும், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தை 60 பேரும் பெறவிருக்கின்றனர்.

மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 15 பேர் தகவல் தொழில்நுட்பத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தையும்;, 28 பேர் விஞ்ஞானமாணி (பிரயோககணிதமும் கணிப்பிடலும்) பட்டத்தையும், ஒருவர் விஞ்ஞானமாணி (சூழல் விஞ்ஞானம்) பட்டத்தையும் பெறவிருக்கின்றனர்.

வியாபாரக்கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த 42 பேர் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 4 பேர் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும்;, 16 பேர் வியாபார முகாமைத்துவமாணி (பொது) பட்டத்தையும், 5 பேர் சந்தைப்படுத்தலில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 46 பேர் கணக்கியல் மற்றும் நிதியியலில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 15 பேர் மனிதவள முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 13 பேர் வியாபாரப் பொருளியலில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும் பெறவிருக்கின்றனர்.

மேலும், தொழில்நுட்பக் கற்கைகள் பீடத்தில் இருந்து 66 பேர் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் இளமாணி சிறப்புப் பட்டத்தையும் பெற இருக்கின்றனர்.

இவர்களுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் தொலைதூரக் கற்கைகள் முறைமை மூலம் பட்டக் கற்கைகளைப் பூர்த்தி செய்த 288 பேர் கலைமாணி சிறப்புப் பட்டத்தையும், 42 பேர் சிறப்பு வணிகமாணிப் பட்டத்தையும் பெறவுள்ளனர்.

மேலும், 3 பேர் விஞ்ஞானத்தில் உயர் தகைமைச் சான்றிதழையும், ஒருவர் கணினி விஞ்ஞானத்தில் தகைமைச் சான்றிதழையும், 31 பேர் வங்கியியல் மற்றும் நிதியியலில் தகைமைச் சான்றிதழையும், 24 தொழில்சார் ஆங்கிலத்தில் தகைமைச் சான்றிதழையும், 34 பேர் நுண்நிதியியலில் தகைமைச் சான்றிதழையும், ஒருவர் வியாபார முகாமைத்துவத்தில் தகைமைச் சான்றிதழையும் பெறுவது உறுதிப்படுத்தப்படவுள்ளது.

மேலும், இப்பட்டமளிப்பு விழாவில் சகல பட்டக் கற்கைநெறிகளுக்குமாக 46 தங்கப்பதக்கங்களும், 09 புலமைப்பரிசில்களும், 48 பரிசில்களும் வழங்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும்   மதிப்புமிக்க பேராசிரியர் அழகையா துரைராசா தங்கப்பதக்கத்தை பீடமட்டத்தில் கலைப் பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், தூய மற்றும் பிரயோக விஞ்ஞானத்தில் சிறந்த செயலாற்றுகைக்கான (Best Performance) பேராசிரியர் கந்தையா குணரட்ணம் தங்கப்பதக்கத்தினை பல்கலைக்கழக மட்டத்தில் இருந்து விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவரும் பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





யாழ் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா சற்றுமுன் ஆரம்பம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் சற்று முன்னர் ஆரம்பமாகியது.பட்டமளிப்பு விழாவில் 441 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து எட்டு உள்வாரி மாணவர்களுக்கும், 330 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளதுடன் , 94 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும்  வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.உயர் பட்டப்படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 441 பேர் உயர் பட்டத் தகைமைகளைப் பெறவுள்ளனர். அவர்களில் கலாநிதிப் பட்டத்தை ஒருவரும், முது மெய்யியல்மாணிப் பட்டத்தை 9 பேரும், சுற்றுச்சூழல் முகாமைத்துவத்தில் முதுவிஞ்ஞானமாணிப் பட்டத்தை ஒருவரும், பண்பாட்டுக் கற்கைகளில் முதுமாணிப்பட்டத்தை 33 பேரும், கிறிஸ்தவக் கற்கைகளில் முதுமாணிப்பட்டத்தை 36 பேரும், தூய சக்தித் தொழில்நுட்பங்களில் முதுமாணிப் பட்டத்தை ஒருவரும், வியாபார நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தை 73 பேரும், தமிழில் முதுமாணிப்பட்டத்தை 40 பேரும், கல்வியில் முதுமாணிப் பட்டத்தை 195 பேரும், சைவசித்தாந்தத்தில் முதுமாணிப்பட்டத்தை 28 பேரும், கல்வியியலில்; பட்டப்பின் தகைமைச் சான்றிதழை (பகுதி நேரம்) 24 பேரும்; பெறவிருக்கின்றனர்.மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 29 பேர் மருத்துவமாணி சத்திர சிகிச்சைமாணிப் பட்டத்தையும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 94 பேர் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 20 பேர் பிரயோக விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 168 பேர் விஞ்ஞானமாணிப் (பொது) பட்டத்தையும், 24 பேர் கணினி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 25 பேர் கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், பெறவுள்ளனர்.இவர்களுடன் விவசாய பீடத்தைச் சேர்ந்த 96 பேர் விவசாயத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், பொறியியற் பீடத்தைச் சேர்ந்த 119 பேர் பொறியியல் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், தொழில்நுட்பப் பீடத்தைச் சேர்ந்த 97 பேர் உயிர்முறைமைகளில் சிறப்பு தொழில்நுட்பமாணிப் பட்டத்தையும், 80 பேர் பொறியியலில் சிறப்பு தொழில்நுட்பமாணிப் பட்டத்தையும் பெறவுள்ளனர்.அத்துடன், முகாமைத்துக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இருந்து சிறப்பு வியாபார நிர்வாகமாணிப் பட்டத்தை 276 பேரும், வியாபார நிர்வாகமாணிப் (பொது) பட்டத்தை 7 பேரும், சிறப்பு வணிகமாணிப் பட்டத்தை 81 பேரும், வணிகமாணிப் (பொது) பட்டத்தை இருவரும் பெறவிருக்கின்றனர்.இவர்களுடன் கலைப்பீடத்தில் இருந்து சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 398 பேரும், பொதுக் கலைமாணிப் பட்டத்தை 12 பேரும், மொழிபெயர்ப்புக் கற்கைகளில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 21 பேரும் பெறவிருக்கின்றனர்.மேலும், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்திலிருந்து தாதியியலில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தை 38 பேரும், மருந்தகவியல் சிறப்புமாணிப் பட்டத்தை 49 பேரும், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தை 60 பேரும் பெறவிருக்கின்றனர்.மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 15 பேர் தகவல் தொழில்நுட்பத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தையும்;, 28 பேர் விஞ்ஞானமாணி (பிரயோககணிதமும் கணிப்பிடலும்) பட்டத்தையும், ஒருவர் விஞ்ஞானமாணி (சூழல் விஞ்ஞானம்) பட்டத்தையும் பெறவிருக்கின்றனர்.வியாபாரக்கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த 42 பேர் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 4 பேர் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும்;, 16 பேர் வியாபார முகாமைத்துவமாணி (பொது) பட்டத்தையும், 5 பேர் சந்தைப்படுத்தலில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 46 பேர் கணக்கியல் மற்றும் நிதியியலில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 15 பேர் மனிதவள முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 13 பேர் வியாபாரப் பொருளியலில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும் பெறவிருக்கின்றனர்.மேலும், தொழில்நுட்பக் கற்கைகள் பீடத்தில் இருந்து 66 பேர் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் இளமாணி சிறப்புப் பட்டத்தையும் பெற இருக்கின்றனர்.இவர்களுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் தொலைதூரக் கற்கைகள் முறைமை மூலம் பட்டக் கற்கைகளைப் பூர்த்தி செய்த 288 பேர் கலைமாணி சிறப்புப் பட்டத்தையும், 42 பேர் சிறப்பு வணிகமாணிப் பட்டத்தையும் பெறவுள்ளனர்.மேலும், 3 பேர் விஞ்ஞானத்தில் உயர் தகைமைச் சான்றிதழையும், ஒருவர் கணினி விஞ்ஞானத்தில் தகைமைச் சான்றிதழையும், 31 பேர் வங்கியியல் மற்றும் நிதியியலில் தகைமைச் சான்றிதழையும், 24 தொழில்சார் ஆங்கிலத்தில் தகைமைச் சான்றிதழையும், 34 பேர் நுண்நிதியியலில் தகைமைச் சான்றிதழையும், ஒருவர் வியாபார முகாமைத்துவத்தில் தகைமைச் சான்றிதழையும் பெறுவது உறுதிப்படுத்தப்படவுள்ளது.மேலும், இப்பட்டமளிப்பு விழாவில் சகல பட்டக் கற்கைநெறிகளுக்குமாக 46 தங்கப்பதக்கங்களும், 09 புலமைப்பரிசில்களும், 48 பரிசில்களும் வழங்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும்   மதிப்புமிக்க பேராசிரியர் அழகையா துரைராசா தங்கப்பதக்கத்தை பீடமட்டத்தில் கலைப் பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், தூய மற்றும் பிரயோக விஞ்ஞானத்தில் சிறந்த செயலாற்றுகைக்கான (Best Performance) பேராசிரியர் கந்தையா குணரட்ணம் தங்கப்பதக்கத்தினை பல்கலைக்கழக மட்டத்தில் இருந்து விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவரும் பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement