• Jul 27 2024

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் தனி பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படும் - டக்ளஸ் தேவானந்தா உறுதி! samugammedia

Tamil nila / May 6th 2023, 9:11 pm
image

Advertisement

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம்  தனி பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இந்தியன் வீட்டுத்திட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பிலான வடயங்கள் பற்றி பேசும்போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.


குறித்த வளாகம் புலிகளின் பயன்பாட்டில் இருந்த நிலையில் இராணுவம் கிளிநொச்சியை விடுவித்த பின்னர் தமது முகாமாக மாற்றிக்கொண்டனர். அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கதைத்து அதனை பல்கலைக்கழகத்திற்கு பெற்றுக்கொடுத்துள்ளோம்.


அங்கு நான்கைந்து வளாகங்கள் வந்துள்ளது. கிளிநொச்சி வளாகத்தை கிளிநொச்சி பல்கலைக்கழகமாக மாற்றித் தருவோம் என அவர் இதன்போது தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த பாதிப்புக்கள் ஒப்பந்தங்கள் செய்யப்படும்போது ஏற்படுகின்றது. அதில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும் அவை நடந்து முடிந்துவிட்டது. இந்திய தூதரகம்தான் ஒப்பந்தகாரர்களிற்கு அதனை கொடுத்திருக்கும். உடைந்த வீடுகள் தொடர்பான படங்கள் தந்தால் அதனை இந்திய தூதரகத்திற்கு அனுப்புவேன்.


அண்மையில் ஜனாதிபதி இந்தியாவிற்கு செல்லவுள்ளார். பிரதமர் மோடிக்கும் அதனை நாங்கள் கொடுக்கலாம். உடனடியாக திருத்தத்திற்கு காசும் தரலாம். உங்களுடைய கோரிக்கைகளில் ஒன்று காணியுமாகும். அந்தந்த பிரதேசத்தில் இருக்கின்றவர்களிற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடு. 

அதற்கு மேலாக  வேறு பிரதேசத்திற்கு கொடுக்க முடியும். புலிக்குளத்திற்கு அருகில் காணி இருப்பதாக சொல்லப்படுகின்றது. அந்த காணி பல்கலைக்கழகத்திற்குரியது என்றெல்லாம் சொல்லப்படுகின்ற போதிலும் பயன்பாட்டில் இல்லை.


நாட்டின் சூழ்நிலை காரணமாக குறித்த காணியினை விவசாயம் செய்வதற்காக பெற்றுத்தரலாம் என அவர் தெரிவித்தார். 


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் தனி பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படும் - டக்ளஸ் தேவானந்தா உறுதி samugammedia யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம்  தனி பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இந்தியன் வீட்டுத்திட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பிலான வடயங்கள் பற்றி பேசும்போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.குறித்த வளாகம் புலிகளின் பயன்பாட்டில் இருந்த நிலையில் இராணுவம் கிளிநொச்சியை விடுவித்த பின்னர் தமது முகாமாக மாற்றிக்கொண்டனர். அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கதைத்து அதனை பல்கலைக்கழகத்திற்கு பெற்றுக்கொடுத்துள்ளோம்.அங்கு நான்கைந்து வளாகங்கள் வந்துள்ளது. கிளிநொச்சி வளாகத்தை கிளிநொச்சி பல்கலைக்கழகமாக மாற்றித் தருவோம் என அவர் இதன்போது தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,குறித்த பாதிப்புக்கள் ஒப்பந்தங்கள் செய்யப்படும்போது ஏற்படுகின்றது. அதில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும் அவை நடந்து முடிந்துவிட்டது. இந்திய தூதரகம்தான் ஒப்பந்தகாரர்களிற்கு அதனை கொடுத்திருக்கும். உடைந்த வீடுகள் தொடர்பான படங்கள் தந்தால் அதனை இந்திய தூதரகத்திற்கு அனுப்புவேன்.அண்மையில் ஜனாதிபதி இந்தியாவிற்கு செல்லவுள்ளார். பிரதமர் மோடிக்கும் அதனை நாங்கள் கொடுக்கலாம். உடனடியாக திருத்தத்திற்கு காசும் தரலாம். உங்களுடைய கோரிக்கைகளில் ஒன்று காணியுமாகும். அந்தந்த பிரதேசத்தில் இருக்கின்றவர்களிற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடு. அதற்கு மேலாக  வேறு பிரதேசத்திற்கு கொடுக்க முடியும். புலிக்குளத்திற்கு அருகில் காணி இருப்பதாக சொல்லப்படுகின்றது. அந்த காணி பல்கலைக்கழகத்திற்குரியது என்றெல்லாம் சொல்லப்படுகின்ற போதிலும் பயன்பாட்டில் இல்லை.நாட்டின் சூழ்நிலை காரணமாக குறித்த காணியினை விவசாயம் செய்வதற்காக பெற்றுத்தரலாம் என அவர் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement