• May 02 2024

யாழ் பிரபல நாதஸ்வரக் கலைஞன் காலமானார்!

Sharmi / Dec 30th 2022, 8:41 am
image

Advertisement

யாழ்ப்பாணம் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வதிவிடமகவும் கொண்ட 'ஈழத்தமிழ்விழி அமரர் திரு. இராமநாதன் நந்தகோபன் கடந்த 24ம் திகதி காலமானார்.

இரண்டு சதாப்தத்திற்கு மேலாக ஐரோப்பிய மண்ணில் புலம் பெயர்ந்த ஈழ சமூகத்தின் கலை, கலாசார, பண்பாட்டு நிகழ்வுகளுக்கு மங்கள வாத்தியம் இசைத்து வந்த இசைக் கலைஞர், நாதஸ்வர வித்துவான் இராசு அவர்களை முதன்மை குருவாக ஏற்று நாதஸ்வரம் கற்க ஆரம்பித்தார்.

ஈழத்தின் புகழ் பூத்த நாதஸ்வர வித்துவான்களான இணுவில் கணேசன், கோண்டாவில் பாலகிருஸ்ணன், இணுவில் சுந்தரமூர்த்தி அவர்களிடமும் இந்தியாவில் நாதஸ்வர வித்துவான் பந்தநல்லுார் தட்சணாமூர்த்திபிள்ளையிடமும் நாதஸ்வர கலையை கற்றுள்ளார்.

தனது தந்தையாரான தவில் வித்துவான் லலித லய தவில் வித்துவமணி இராமநாதன் (இராமு) அவர்களுடன் வாசிக்க ஆரம்பித்து ஈழத்தின் புகழ்பூத்த நாதஸ்வர வித்துவான்களான மூளாய் பாலகிருஸ்ணன், அளவைவெட்டி என் கே பத்மநாதன், கானமூர்த்தி பஞ்சமூர்த்தி சகோதரர்கள். எம் பி பாலகிருஸ்ணன், சாவகச்சேரி பஞ்சாபிகேசன், சாவகச்சேரி நாகேந்திரன் மற்றும் தவில் கலைஞர்களான செல்வநாயகம், தட்சணாமூர்த்தி உதயசங்கர், நித்தியானந்தம் ஆகியோருடன் இணைந்து வாசித்த பெருமை இவருக்கு உண்டு.

இந்தியா மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் சென்று நாதஸ்வரம் வாசித்துள்ளார். 1988ல் பிரான்ஸ் நாட்டுக்கு புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் இராமநாதன் நந்தகோபன் ஐரோப்பிய தவில் நாதஸ்வர இசைக் கலைஞர்களுடன் இணைந்து நாதஸ்வரம் வாசித்து வந்தார்.

இந்தியாவில் நாதஸ்வர இசைமணி திருமாளம் பாண்டியன் அவர்களுடன் இணைந்து வாசித்த சிறப்பைப் பெற்ற இவர் “நாதஸ்வர கலாநிதி", "நாத கான இசை செம்மல்", "நாத கான வினோதன்" போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். பரீஸ் முத்துமாரி அம்மன், லாக்கூர்நெவ் சிவன் ஆலயம், அஸ்டலக்சுமி ஆலயம்களில் ஆஸ்தான வித்துவானாக தனது இசைப் பணியை ஆற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் பிரபல நாதஸ்வரக் கலைஞன் காலமானார் யாழ்ப்பாணம் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வதிவிடமகவும் கொண்ட 'ஈழத்தமிழ்விழி அமரர் திரு. இராமநாதன் நந்தகோபன் கடந்த 24ம் திகதி காலமானார்.இரண்டு சதாப்தத்திற்கு மேலாக ஐரோப்பிய மண்ணில் புலம் பெயர்ந்த ஈழ சமூகத்தின் கலை, கலாசார, பண்பாட்டு நிகழ்வுகளுக்கு மங்கள வாத்தியம் இசைத்து வந்த இசைக் கலைஞர், நாதஸ்வர வித்துவான் இராசு அவர்களை முதன்மை குருவாக ஏற்று நாதஸ்வரம் கற்க ஆரம்பித்தார்.ஈழத்தின் புகழ் பூத்த நாதஸ்வர வித்துவான்களான இணுவில் கணேசன், கோண்டாவில் பாலகிருஸ்ணன், இணுவில் சுந்தரமூர்த்தி அவர்களிடமும் இந்தியாவில் நாதஸ்வர வித்துவான் பந்தநல்லுார் தட்சணாமூர்த்திபிள்ளையிடமும் நாதஸ்வர கலையை கற்றுள்ளார்.தனது தந்தையாரான தவில் வித்துவான் லலித லய தவில் வித்துவமணி இராமநாதன் (இராமு) அவர்களுடன் வாசிக்க ஆரம்பித்து ஈழத்தின் புகழ்பூத்த நாதஸ்வர வித்துவான்களான மூளாய் பாலகிருஸ்ணன், அளவைவெட்டி என் கே பத்மநாதன், கானமூர்த்தி பஞ்சமூர்த்தி சகோதரர்கள். எம் பி பாலகிருஸ்ணன், சாவகச்சேரி பஞ்சாபிகேசன், சாவகச்சேரி நாகேந்திரன் மற்றும் தவில் கலைஞர்களான செல்வநாயகம், தட்சணாமூர்த்தி உதயசங்கர், நித்தியானந்தம் ஆகியோருடன் இணைந்து வாசித்த பெருமை இவருக்கு உண்டு.இந்தியா மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் சென்று நாதஸ்வரம் வாசித்துள்ளார். 1988ல் பிரான்ஸ் நாட்டுக்கு புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் இராமநாதன் நந்தகோபன் ஐரோப்பிய தவில் நாதஸ்வர இசைக் கலைஞர்களுடன் இணைந்து நாதஸ்வரம் வாசித்து வந்தார்.இந்தியாவில் நாதஸ்வர இசைமணி திருமாளம் பாண்டியன் அவர்களுடன் இணைந்து வாசித்த சிறப்பைப் பெற்ற இவர் “நாதஸ்வர கலாநிதி", "நாத கான இசை செம்மல்", "நாத கான வினோதன்" போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். பரீஸ் முத்துமாரி அம்மன், லாக்கூர்நெவ் சிவன் ஆலயம், அஸ்டலக்சுமி ஆலயம்களில் ஆஸ்தான வித்துவானாக தனது இசைப் பணியை ஆற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement