• May 17 2024

சீன அச்சுறுத்தலால் இராணுவத்தை வலுப்படுத்தும் ஜப்பான்!

Tamil nila / Dec 17th 2022, 3:13 pm
image

Advertisement

கிழக்கு ஆசிய நாடான ஜப்பான் திறமையான ராணுவத்தை கொண்டிருக்கும் உலக நாடுகள் பட்டியலில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலத்தில் தன் நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஜப்பான் காட்டிய அதே அக்கறையை தனது இராணுவத்தை பலப்படுத்துவதிலும் காட்டியுள்ளது.


ஆனால் இப்போது சீனாவின் அச்சுறுத்தலால் தனது இராணுவத்தை மேலும் வலுவாக்க வேண்டிய கட்டாயம் ஜப்பானுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் தனது இராணுவ கொள்கையில் ஜப்பான் அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.


இராணுவத்தை ஆயுத ரீதியாக பலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் அரசு ஒப்புதலையும் வழங்கியுள்ளது.


புதிய இராணுவ கொள்கையின் படி வரும் 2027 ஆம் நிதியாண்டின் திட்டமிட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் இரண்டு விழுக்காடு அளவிற்கு இராணுவத்திற்கு செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த நிதி மூலம் நீண்ட தூரம் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக அழிக்கும் நவீன ஏவுகணைகளை வாங்கவும் ஜப்பான் திட்டமிட்டுள்ளது. நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்றும் உறுதியோடு இராணுவத்தை மறு கட்டைமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறியுள்ளார்.


ஜப்பான் இருக்கும் பிராந்தியத்தில் உள்ள அண்டை நாடுகள் வைத்திருக்கும் அணு ஆயுதங்கள் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ள கிஷிடோ, அணு ஆயுதம் வைத்து ரஷ்யா உக்ரைனில் ஊடுருவியதை நினைவில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


சீனாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஜப்பானுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கான கவலை எனவும் கிஷிடா அறிவுறுத்தியுள்ளார். புதிய ராணுவ வரிவாக்க கொள்கைக்கு ஜப்பான் அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது என்றாலும், பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


ஆனாலும், நேட்டோ உறுப்பு நாடுகளுக்கான விதிமுறைகளின் படி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 விழுக்காடு ராணுவத்திற்கு செலவு செய்யும் திட்டத்தில் ஜப்பான் அரசு உறுதியாக உள்ளது. ஆவணங்களின் தரவுகளின்படி ஜப்பான் ராணுவத்தில் இருக்கும் ஏவுகனைகள் மிகவும் சக்தி குறைந்தவைகளாகவும், குறுகிய தூரம் மட்டுமே செல்லக் கூடியவைகளாகவும் இருக்கின்றன.


தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள அந்நாட்டு அரசு சட்ட அனுமதியும் வழங்கியுள்ளது. ஆனாலும் அணு ஆயுதத்திற்கு எதிரான தங்கள் கொள்கையை உறுதியாக கடைப்பிடிப்போம் என்றும் கிஷிடா கூறியுள்ளார்.


ஜப்பான் மேற்கொள்ள உள்ள புதிய ராணுவக் கொள்கை மூலம் கடல் வழி பாதுகாப்பையும் மேம்படுத்தும் முடிவில் அந்நாடு உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.


சீன அச்சுறுத்தலால் இராணுவத்தை வலுப்படுத்தும் ஜப்பான் கிழக்கு ஆசிய நாடான ஜப்பான் திறமையான ராணுவத்தை கொண்டிருக்கும் உலக நாடுகள் பட்டியலில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலத்தில் தன் நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஜப்பான் காட்டிய அதே அக்கறையை தனது இராணுவத்தை பலப்படுத்துவதிலும் காட்டியுள்ளது.ஆனால் இப்போது சீனாவின் அச்சுறுத்தலால் தனது இராணுவத்தை மேலும் வலுவாக்க வேண்டிய கட்டாயம் ஜப்பானுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் தனது இராணுவ கொள்கையில் ஜப்பான் அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.இராணுவத்தை ஆயுத ரீதியாக பலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் அரசு ஒப்புதலையும் வழங்கியுள்ளது.புதிய இராணுவ கொள்கையின் படி வரும் 2027 ஆம் நிதியாண்டின் திட்டமிட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் இரண்டு விழுக்காடு அளவிற்கு இராணுவத்திற்கு செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நிதி மூலம் நீண்ட தூரம் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக அழிக்கும் நவீன ஏவுகணைகளை வாங்கவும் ஜப்பான் திட்டமிட்டுள்ளது. நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்றும் உறுதியோடு இராணுவத்தை மறு கட்டைமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறியுள்ளார்.ஜப்பான் இருக்கும் பிராந்தியத்தில் உள்ள அண்டை நாடுகள் வைத்திருக்கும் அணு ஆயுதங்கள் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ள கிஷிடோ, அணு ஆயுதம் வைத்து ரஷ்யா உக்ரைனில் ஊடுருவியதை நினைவில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.சீனாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஜப்பானுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கான கவலை எனவும் கிஷிடா அறிவுறுத்தியுள்ளார். புதிய ராணுவ வரிவாக்க கொள்கைக்கு ஜப்பான் அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது என்றாலும், பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.ஆனாலும், நேட்டோ உறுப்பு நாடுகளுக்கான விதிமுறைகளின் படி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 விழுக்காடு ராணுவத்திற்கு செலவு செய்யும் திட்டத்தில் ஜப்பான் அரசு உறுதியாக உள்ளது. ஆவணங்களின் தரவுகளின்படி ஜப்பான் ராணுவத்தில் இருக்கும் ஏவுகனைகள் மிகவும் சக்தி குறைந்தவைகளாகவும், குறுகிய தூரம் மட்டுமே செல்லக் கூடியவைகளாகவும் இருக்கின்றன.தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள அந்நாட்டு அரசு சட்ட அனுமதியும் வழங்கியுள்ளது. ஆனாலும் அணு ஆயுதத்திற்கு எதிரான தங்கள் கொள்கையை உறுதியாக கடைப்பிடிப்போம் என்றும் கிஷிடா கூறியுள்ளார்.ஜப்பான் மேற்கொள்ள உள்ள புதிய ராணுவக் கொள்கை மூலம் கடல் வழி பாதுகாப்பையும் மேம்படுத்தும் முடிவில் அந்நாடு உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement