புத்தாண்டு விடுமுறைக்கு வீடுகளுக்குச் செல்லும் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் புத்தாண்டு விடுமுறையின் முடிவில் வேலை தொடர்பில் நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்வர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
புத்தளம்இ நாத்தாண்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் நமது நாட்டின் ஏற்றுமதிகள் மீது 44 வீத பரஸ்பர வரி விதித்துள்ளது. நமது நாடு அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 88 வீத வரி விதித்தமையே இதற்கு காரணமாகும்.
இதன் காரணமாக, நமது நாடு ஏற்றுமதி விலைக்கான போட்டித்தன்மையை இழந்துள்ளது. நாட்டின் ஆடை ஏற்றுமதியில் 40% அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகிறது.
இது ஆபத்தான நிலைமைகளை தோற்றுவிக்கும் என்பதால், சில மாதங்களுக்கு முன்பே இது குறித்து அரசாங்கத்திற்கு எடுத்துரைத்தோம். அதனை அரசாங்கம் பொருட்படுத்தவில்லை.
தற்போது என்னதான் கூறினாலும் இந்த வரி விதிப்பு ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் வேலைகளுக்கு ஆபத்து - சஜித் எச்சரிக்கை புத்தாண்டு விடுமுறைக்கு வீடுகளுக்குச் செல்லும் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் புத்தாண்டு விடுமுறையின் முடிவில் வேலை தொடர்பில் நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்வர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். புத்தளம்இ நாத்தாண்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் நமது நாட்டின் ஏற்றுமதிகள் மீது 44 வீத பரஸ்பர வரி விதித்துள்ளது. நமது நாடு அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 88 வீத வரி விதித்தமையே இதற்கு காரணமாகும்.இதன் காரணமாக, நமது நாடு ஏற்றுமதி விலைக்கான போட்டித்தன்மையை இழந்துள்ளது. நாட்டின் ஆடை ஏற்றுமதியில் 40% அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகிறது. இது ஆபத்தான நிலைமைகளை தோற்றுவிக்கும் என்பதால், சில மாதங்களுக்கு முன்பே இது குறித்து அரசாங்கத்திற்கு எடுத்துரைத்தோம். அதனை அரசாங்கம் பொருட்படுத்தவில்லை.தற்போது என்னதான் கூறினாலும் இந்த வரி விதிப்பு ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.