• Nov 28 2024

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு $15 மில்லியன் டொலர்கள் அபராதம்!

Tharmini / Oct 16th 2024, 10:31 am
image

பல தசாப்தங்களாக ஜான்சன் அண்ட்ஜான்சன் டால்க் பவுடரைப் பயன்படுத்தியதன் விளைவாக, புற்றுநோயின் ஒரு அரியவகை பாதிப்பை எதிர்கொண்டதாக குற்றம் சாட்டிய கனெடிகட் மாநில நபருக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்கவின், கனெடிகட் ஃபேர்ஃபீல்ட் கவுண்டியில் உள்ள நடுவர் நீதிமன்றம் இந்த உத்தரவினை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு எதிராக செவ்வாயன்று (15) பிறப்பித்தது.குறித்த டால்க் பவுடர் பயன்பாட்டினால் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக கண்டறிந்த கனெடிகட் மாநிலத்தைச் சேர்ந்த இவான் ப்ளாட்கின் என்ற நபர் கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் செவ்வாயன்று வழங்கப்பட்ட தீர்ப்பு, ஜான்சன் அண்ட் ஜான்சன் டால்க் பவுடர் தயாரிப்புகளின் பாதுகாப்பு தொடர்பாக நடந்து வரும் வழக்கின் மற்றொரு அத்தியாயத்தை எடுத்துக் காட்டுகிறது.பவுடர்பயன்பாட்டினால் பாதிக்கப்பட்ட நபர் இடைத் தோலியப்புற்று நோய்க்கு உள்ளாகியுள்ளார்.இடைத் தோலியப்புற்று (Mesothelioma) என்பது பல உடல் உள்ளுறுப்புகளை மூடியுள்ள மீசோதெலியம் எனப்படும் திசுக்களின் மெல்லிய அடுக்கிலிருந்து உருவாகும் ஒரு வகையான புற்றுநோயாகும்.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு $15 மில்லியன் டொலர்கள் அபராதம் பல தசாப்தங்களாக ஜான்சன் அண்ட்ஜான்சன் டால்க் பவுடரைப் பயன்படுத்தியதன் விளைவாக, புற்றுநோயின் ஒரு அரியவகை பாதிப்பை எதிர்கொண்டதாக குற்றம் சாட்டிய கனெடிகட் மாநில நபருக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.அமெரிக்கவின், கனெடிகட் ஃபேர்ஃபீல்ட் கவுண்டியில் உள்ள நடுவர் நீதிமன்றம் இந்த உத்தரவினை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு எதிராக செவ்வாயன்று (15) பிறப்பித்தது.குறித்த டால்க் பவுடர் பயன்பாட்டினால் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக கண்டறிந்த கனெடிகட் மாநிலத்தைச் சேர்ந்த இவான் ப்ளாட்கின் என்ற நபர் கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.இந்த நிலையில் செவ்வாயன்று வழங்கப்பட்ட தீர்ப்பு, ஜான்சன் அண்ட் ஜான்சன் டால்க் பவுடர் தயாரிப்புகளின் பாதுகாப்பு தொடர்பாக நடந்து வரும் வழக்கின் மற்றொரு அத்தியாயத்தை எடுத்துக் காட்டுகிறது.பவுடர்பயன்பாட்டினால் பாதிக்கப்பட்ட நபர் இடைத் தோலியப்புற்று நோய்க்கு உள்ளாகியுள்ளார்.இடைத் தோலியப்புற்று (Mesothelioma) என்பது பல உடல் உள்ளுறுப்புகளை மூடியுள்ள மீசோதெலியம் எனப்படும் திசுக்களின் மெல்லிய அடுக்கிலிருந்து உருவாகும் ஒரு வகையான புற்றுநோயாகும்.

Advertisement

Advertisement

Advertisement