• Feb 21 2025

ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் முல்லைத்தீவிற்கு களவிஜயம்..!

Sharmi / Feb 20th 2025, 4:32 pm
image

இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் முல்லைத்தீவில் உள்ள பாடசாலைகள் சிலவற்றுக்கு நேற்று (19)  களவிஜயம் மேற்கொண்டனர்.

பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயும் முகமாக இந்த கள விஜயம் இடம்பெற்றது. 

 முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்பட்ட முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி, வற்றாப்பளை மகாவித்தியாலயம், தண்ணீரூற்று முஸ்லிம் மகாவித்தியாலயம், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி உள்ளிட்ட பாடசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்

இந்நிலையில் முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்பட்ட , தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கு விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்

தற்போது வரவு செலவுத் திட்டத்தில் விசேடமாக முப்பதாயிரம் அரச ஊழியர்களை பணியில் இனைத்துக் கொள்வதாகவும் அதற்காக பத்தாயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்குவதாகவும் வரவு செலவு திட்ட உரையில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆனாலும் எங்களுக்கு தெரியும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறை எவ்வளவு இருக்கிறது என்றால் முல்லைத்தீவில் உள்ள தேசிய பாடசாலையான வித்தியானந்தா கல்லூரியை எடுத்துக்கொண்டால் அங்கு 91 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 63 ஆசிரியர்கள் தான் இருக்கிறார்கள்.

இவ்வாறு இருக்கையில் ஆசிரியர் சேவையில் மாத்திரம் முப்பதாயிரம் வெற்றிடங்கள் காணப்படுகிறது  ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பாது மாணவர்களுக்கு எவ்வாறு கற்ப்பித்தல் செயற்பாடுகளை செய்வது இதனால் நாங்கள் கேட்கிறோம். ஆசிரியர்கள் சம்பந்தமான நிலைப்பாட்டை அரசாங்கம் சொல்ல வேண்டும் 

உரிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாமையால் இந்த கஸ்ரப் பிரதேசங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் இடமாற்றம் கூட செல்ல முடியாது உள்ளது அவர்களுக்கு பதிலீடு இல்லாததால் இதற்கு ஒரு முடிவை அரசாங்கம் எடுக்க வேண்டும். 

மாணவர்களின் கல்வி சம்பந்தமாக எடுத்துக்கொண்டால் பாடசாலைகளில் பல பிரச்சனைகள் உருவாகியுள்ளது பெற்றோர்களிடம் தான் நிதி அறவிடுகின்றார்கள். அதிகமாக பெற்றோர்களுக்கு கல்வி சுமை வந்துள்ளது. அதனால் தான் விசேடமாக கல்விக்கு ஜிடிபி யில் நூற்றுக்கு  6  ஒதுக்குமாறு கோரியிருந்தோம்.

கடந்த அரசாங்கம் கூட 1.2 வீதம் ஒதுங்கியிருந்தது  ஆனால் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் ஒன்றுகூட ஒதுக்கவில்லை அதனால் தான் நாங்கள் சொல்கிறோம் கல்விக்கு ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும். 

அத்தோடு கல்வி சம்மந்தமாக எடுக்கப்பட்ட தீர்மானம் தான் பாடசாலைகளை மீளாய்வு செய்வது விசேடமாக 10126 பாடசாலைகளில்  எங்களுக்கு தெரியும் ஆரம்ப பாடசாலை கள் நூறு பிள்ளைகளுக்கு குறைவான பிள்ளைகள் உள்ள பாடசாலைகள் மூவாயிரம் உள்ளது ஐம்பது மாணவர்களை விட குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலை ஆயிரத்து ஜந்நூற்று சொச்சம் உள்ளது இவைகளை மீளாய்வு செய்ய ஐநூறு மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்ன மீளாய்வு? பாடசாலைகளை மூடுவதா ? இதுதொடர்பாக அரசாங்கம் சரியான நிலைம்பாட்டை கூறவேண்டும் அப்படி இல்லாத பட்சத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் அதனால் நாங்கள் கூறுகிறோம் மீளாய்வு என்று பாடசாலை மூட முடியாது மாணவர்களுக்கு கல்வி தான் அவசியம் .

இதனைவிட விசேடமாக போரில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு போன்ற இடங்களில் கல்வியை முன்னேற்ற வேண்டும் தேசிய பாடசாலையான வித்தியானந்தா பாடசாலையை எடுத்துக்கொண்டால் ஒரு சிற்றூழியர் கூட இல்லை காவலாளி இல்லை  ஏனைய பாடசாலையில் எப்படி உள்ளது . ஆனால் சம்பத் நுவர பாடசாலையை எடுத்துக்கொண்டால் அதுவும் முல்லைத்தீவில் தான் உள்ளது.

அதில் சிற்றூழியர்கள் பதின்மூன்றுபேர் இருக்கின்றனர். வித்தியானந்தா பாடசாலையில் ஒருவர் கூட இல்லை ஏன் இந்த வேறுபாடு நாங்கள் சொல்கிறோம் அரசாங்கத்தை உடனடியாக இந்த பிரச்சினைகளை தீர்க்குமாறு பாடசாலைகளுக்கு அவசியமான அனைத்து வழங்களையும் வழங்குமாறு அப்படியில்லாமல் முல்லைத்தீவை எப்படி முன்னேற்றுவது கல்வியை எப்படி முன்னேற்றுவது .எனவே இவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என அரசாங்கத்தை கோருகிறோம்.

விசேடமாக எங்களுக்கு தெரியும் 2009 ம் ஆண்டு போர் முடிந்து விட்டது அதற்கு பின்னர் போர் சூழல் ஒன்றும் இல்லை ஏன் 461 பில்லியன் ஒதுக்கியுள்ளார்கள் பாதுகாப்புக்கு கல்விக்கு ஒதுக்கியிருக்கா அப்படி சுகாதாரத்துக்கு கல்வித்துறைக்கு நாங்கள் சொல்கிறோம் நூற்றுக்கு 6 ஒதுக்குமாறு  அதை ஒதுக்காது பாதுகாப்புக்கு கடந்த அரசாங்கம் போன்று இந்த அரசாங்கமும் அதிகமாக நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். இது பாரிய பிரச்சனை அதனால் நாங்கள் சொல்கிறோம் கல்விக்காக மக்களுக்காக இந்த அரசாங்கம் செயற்ப்பட வேண்டும்  எனவும் தெரிவித்தார்.




ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் முல்லைத்தீவிற்கு களவிஜயம். இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் முல்லைத்தீவில் உள்ள பாடசாலைகள் சிலவற்றுக்கு நேற்று (19)  களவிஜயம் மேற்கொண்டனர்.பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயும் முகமாக இந்த கள விஜயம் இடம்பெற்றது.  முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்பட்ட முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி, வற்றாப்பளை மகாவித்தியாலயம், தண்ணீரூற்று முஸ்லிம் மகாவித்தியாலயம், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி உள்ளிட்ட பாடசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்இந்நிலையில் முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்பட்ட , தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கு விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்தற்போது வரவு செலவுத் திட்டத்தில் விசேடமாக முப்பதாயிரம் அரச ஊழியர்களை பணியில் இனைத்துக் கொள்வதாகவும் அதற்காக பத்தாயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்குவதாகவும் வரவு செலவு திட்ட உரையில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.ஆனாலும் எங்களுக்கு தெரியும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறை எவ்வளவு இருக்கிறது என்றால் முல்லைத்தீவில் உள்ள தேசிய பாடசாலையான வித்தியானந்தா கல்லூரியை எடுத்துக்கொண்டால் அங்கு 91 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 63 ஆசிரியர்கள் தான் இருக்கிறார்கள். இவ்வாறு இருக்கையில் ஆசிரியர் சேவையில் மாத்திரம் முப்பதாயிரம் வெற்றிடங்கள் காணப்படுகிறது  ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பாது மாணவர்களுக்கு எவ்வாறு கற்ப்பித்தல் செயற்பாடுகளை செய்வது இதனால் நாங்கள் கேட்கிறோம். ஆசிரியர்கள் சம்பந்தமான நிலைப்பாட்டை அரசாங்கம் சொல்ல வேண்டும் உரிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாமையால் இந்த கஸ்ரப் பிரதேசங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் இடமாற்றம் கூட செல்ல முடியாது உள்ளது அவர்களுக்கு பதிலீடு இல்லாததால் இதற்கு ஒரு முடிவை அரசாங்கம் எடுக்க வேண்டும். மாணவர்களின் கல்வி சம்பந்தமாக எடுத்துக்கொண்டால் பாடசாலைகளில் பல பிரச்சனைகள் உருவாகியுள்ளது பெற்றோர்களிடம் தான் நிதி அறவிடுகின்றார்கள். அதிகமாக பெற்றோர்களுக்கு கல்வி சுமை வந்துள்ளது. அதனால் தான் விசேடமாக கல்விக்கு ஜிடிபி யில் நூற்றுக்கு  6  ஒதுக்குமாறு கோரியிருந்தோம். கடந்த அரசாங்கம் கூட 1.2 வீதம் ஒதுங்கியிருந்தது  ஆனால் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் ஒன்றுகூட ஒதுக்கவில்லை அதனால் தான் நாங்கள் சொல்கிறோம் கல்விக்கு ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும். அத்தோடு கல்வி சம்மந்தமாக எடுக்கப்பட்ட தீர்மானம் தான் பாடசாலைகளை மீளாய்வு செய்வது விசேடமாக 10126 பாடசாலைகளில்  எங்களுக்கு தெரியும் ஆரம்ப பாடசாலை கள் நூறு பிள்ளைகளுக்கு குறைவான பிள்ளைகள் உள்ள பாடசாலைகள் மூவாயிரம் உள்ளது ஐம்பது மாணவர்களை விட குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலை ஆயிரத்து ஜந்நூற்று சொச்சம் உள்ளது இவைகளை மீளாய்வு செய்ய ஐநூறு மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்ன மீளாய்வு பாடசாலைகளை மூடுவதா இதுதொடர்பாக அரசாங்கம் சரியான நிலைம்பாட்டை கூறவேண்டும் அப்படி இல்லாத பட்சத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் அதனால் நாங்கள் கூறுகிறோம் மீளாய்வு என்று பாடசாலை மூட முடியாது மாணவர்களுக்கு கல்வி தான் அவசியம் .இதனைவிட விசேடமாக போரில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு போன்ற இடங்களில் கல்வியை முன்னேற்ற வேண்டும் தேசிய பாடசாலையான வித்தியானந்தா பாடசாலையை எடுத்துக்கொண்டால் ஒரு சிற்றூழியர் கூட இல்லை காவலாளி இல்லை  ஏனைய பாடசாலையில் எப்படி உள்ளது . ஆனால் சம்பத் நுவர பாடசாலையை எடுத்துக்கொண்டால் அதுவும் முல்லைத்தீவில் தான் உள்ளது. அதில் சிற்றூழியர்கள் பதின்மூன்றுபேர் இருக்கின்றனர். வித்தியானந்தா பாடசாலையில் ஒருவர் கூட இல்லை ஏன் இந்த வேறுபாடு நாங்கள் சொல்கிறோம் அரசாங்கத்தை உடனடியாக இந்த பிரச்சினைகளை தீர்க்குமாறு பாடசாலைகளுக்கு அவசியமான அனைத்து வழங்களையும் வழங்குமாறு அப்படியில்லாமல் முல்லைத்தீவை எப்படி முன்னேற்றுவது கல்வியை எப்படி முன்னேற்றுவது .எனவே இவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என அரசாங்கத்தை கோருகிறோம்.விசேடமாக எங்களுக்கு தெரியும் 2009 ம் ஆண்டு போர் முடிந்து விட்டது அதற்கு பின்னர் போர் சூழல் ஒன்றும் இல்லை ஏன் 461 பில்லியன் ஒதுக்கியுள்ளார்கள் பாதுகாப்புக்கு கல்விக்கு ஒதுக்கியிருக்கா அப்படி சுகாதாரத்துக்கு கல்வித்துறைக்கு நாங்கள் சொல்கிறோம் நூற்றுக்கு 6 ஒதுக்குமாறு  அதை ஒதுக்காது பாதுகாப்புக்கு கடந்த அரசாங்கம் போன்று இந்த அரசாங்கமும் அதிகமாக நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். இது பாரிய பிரச்சனை அதனால் நாங்கள் சொல்கிறோம் கல்விக்காக மக்களுக்காக இந்த அரசாங்கம் செயற்ப்பட வேண்டும்  எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement