• May 19 2024

வடக்கு கிழக்கில் அச்சுறுத்தப்படும் ஊடகவியலாளர்கள்...! சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பிடம் முறைப்பாடு...!samugammedia

Sharmi / Sep 13th 2023, 4:40 pm
image

Advertisement

இலங்கையில் உள்ள தொழில்சார் ஊடகவியலாளார்களுக்கும் சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பின் ஆசிய பணிப்பாளருக்கும் இடையில் இன்று காலை கொழும்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தொழில்சார் ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் நாயகம் தர்மசிறி லங்கா பேலி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்த சர்வதேச ஊடகவியலாளர்கூட்டமைப்பின்  ஆசிய பணிப்பாளர் ஜெயின் வோர்திங்ஷனிடம் ஊடகவியலாளார் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பாக பல விடயங்கள் முன்வைக்கப்பட்டது.

இதன்போது அண்மைகாலமாக வட கிழக்கு மாகாணங்களில் உள்ள ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை மற்றும், அச்சுறுத்தல் தொடர்பாகவும் அவரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவாட்டத்தில் இடம் பெற்று வரும் ஊடக அடக்குமுறை மற்றும் உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தி அறிக்கை ஒன்றையும் வழங்கியதுடன் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியுள்ளதுடன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ஒரு சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


வடக்கு கிழக்கில் அச்சுறுத்தப்படும் ஊடகவியலாளர்கள். சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பிடம் முறைப்பாடு.samugammedia இலங்கையில் உள்ள தொழில்சார் ஊடகவியலாளார்களுக்கும் சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பின் ஆசிய பணிப்பாளருக்கும் இடையில் இன்று காலை கொழும்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.தொழில்சார் ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் நாயகம் தர்மசிறி லங்கா பேலி தலைமையில் இடம்பெற்றது.இதன்போது அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்த சர்வதேச ஊடகவியலாளர்கூட்டமைப்பின்  ஆசிய பணிப்பாளர் ஜெயின் வோர்திங்ஷனிடம் ஊடகவியலாளார் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பாக பல விடயங்கள் முன்வைக்கப்பட்டது.இதன்போது அண்மைகாலமாக வட கிழக்கு மாகாணங்களில் உள்ள ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை மற்றும், அச்சுறுத்தல் தொடர்பாகவும் அவரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவாட்டத்தில் இடம் பெற்று வரும் ஊடக அடக்குமுறை மற்றும் உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தி அறிக்கை ஒன்றையும் வழங்கியதுடன் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியுள்ளதுடன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ஒரு சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement