• May 22 2024

வடக்கு,கிழக்கில் இருக்கின்ற நீதிமன்றங்களில் தீர்ப்புகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை-சபையில் சிறீதரன் எம்.பி. கவலை! samugammedia

Sharmi / Apr 4th 2023, 2:40 pm
image

Advertisement

வடக்கு, கிழக்கில் இருக்கின்ற நீதிமன்றங்களில் தீர்ப்புகள் மதிக்கப்படுவதில்லை எனவும் நீதிபதிகளின் கட்டளைகள்  செல்லாக் காசாக மாற்றப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் உரையாற்றிய சிறீதரன், இலங்கையில் நீதித்துறை முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தென்பகுதியில் இருக்கின்ற நீதிமன்றங்களின் தீர்ப்புகளே மதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் இருக்கின்ற நீதிமன்றங்கள் அனைத்துக்கும் ஒரே நீதியும் ஒரே சட்டமும் இருந்திருந்தால், முல்லைத்தீவு நீதிபதி பிறப்பித்திருந்த உத்தரவுக்கு அமைய குருந்தூர் மலையில் இடம்பெற்றிருந்த சம்பவத்தை தடுத்திருக்க முடியும் என்றும் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை எனவும் இதுபோன்ற  பல சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.


வடக்கு,கிழக்கில் இருக்கின்ற நீதிமன்றங்களில் தீர்ப்புகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை-சபையில் சிறீதரன் எம்.பி. கவலை samugammedia வடக்கு, கிழக்கில் இருக்கின்ற நீதிமன்றங்களில் தீர்ப்புகள் மதிக்கப்படுவதில்லை எனவும் நீதிபதிகளின் கட்டளைகள்  செல்லாக் காசாக மாற்றப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் உரையாற்றிய சிறீதரன், இலங்கையில் நீதித்துறை முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.தென்பகுதியில் இருக்கின்ற நீதிமன்றங்களின் தீர்ப்புகளே மதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.நாட்டில் இருக்கின்ற நீதிமன்றங்கள் அனைத்துக்கும் ஒரே நீதியும் ஒரே சட்டமும் இருந்திருந்தால், முல்லைத்தீவு நீதிபதி பிறப்பித்திருந்த உத்தரவுக்கு அமைய குருந்தூர் மலையில் இடம்பெற்றிருந்த சம்பவத்தை தடுத்திருக்க முடியும் என்றும் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை எனவும் இதுபோன்ற  பல சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement