• May 19 2024

தமிழர்களை அடக்கி ஒடுக்கி முழுவதுமாக சிங்கள பௌத்த நாடாக உருவாக்க முயற்சி-யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் குற்றச்சாட்டு!samugammedia

Sharmi / Mar 27th 2023, 4:22 pm
image

Advertisement

சிங்கள பேரினவாத அரசு தமிழர்களை அடக்கி, ஒடுக்கி முழுவதுமாக சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கு முயற்சிப்பதாக யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

இனம் தனது சுயநிர்ணயத்தினை தக்க வைக்க வேண்டுமாயின் மொழி,மதம் மற்றும் பண்பாடுகள் என அனைத்தையும் பாதுகாக்க வேண்டும். ஆனால் தமிழர்களின் பண்பாடுகளை சிதைக்கும் முயற்சியினை இலங்கை அரசு மேற்கொண்டு வருகின்றது.

வட கிழக்கில் தொடர்ச்சியாக நிலாவரை, குறுந்தூர் மலை, வெடுக்குநாறி மலை, நெடுந்தீவு மற்றும் கச்சதீவு என பல்வேறு நில ஆக்கிரமிப்புகளை செய்து பண்பாட்டினை அழித்து வருவதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.

பண்பாட்டு அம்சங்களை பேண வேண்டிய தொல்பொருள் திணைக்களங்களும் அரசுடன் இணைந்து செயற்படுவதானது தமிழினத்தினை அழிப்பதன் அடிப்படையாகவுள்ளதாக தெரிவித்தார்.

பண்பாடு மற்றும் கலாசாரங்களை தக்கவைத்து ஒரு இனம் தமது சுய உரிமைகளை கேட்டு கொள்ளலாம் என சர்வதேசம் கூறுகின்றது. அவ் வகையில் தேசியம், மரவு வழித்தாயகம், சுயநிர்ணயம் போன்றவற்றை இல்லாதொழித்து விட்டால் எவ்வாறு எமது இனத்தினை மீட்பது? அத்தோடு உரிமைகளை எவ்வாறு  வென்றெடுப்பது? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

சிங்கள பேரினவாத அரசு தமிழர்களை அடக்கி ஒடுக்கி முழுவதுமாக சிங்கள, பௌத்த நாடாக உருவாக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆகவே, இவற்றிற்கு எதிராக மக்கள்,அரசியல்வாதிகள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் குரலெழுப்பி உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழர்களை அடக்கி ஒடுக்கி முழுவதுமாக சிங்கள பௌத்த நாடாக உருவாக்க முயற்சி-யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் குற்றச்சாட்டுsamugammedia சிங்கள பேரினவாத அரசு தமிழர்களை அடக்கி, ஒடுக்கி முழுவதுமாக சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கு முயற்சிப்பதாக யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், இனம் தனது சுயநிர்ணயத்தினை தக்க வைக்க வேண்டுமாயின் மொழி,மதம் மற்றும் பண்பாடுகள் என அனைத்தையும் பாதுகாக்க வேண்டும். ஆனால் தமிழர்களின் பண்பாடுகளை சிதைக்கும் முயற்சியினை இலங்கை அரசு மேற்கொண்டு வருகின்றது. வட கிழக்கில் தொடர்ச்சியாக நிலாவரை, குறுந்தூர் மலை, வெடுக்குநாறி மலை, நெடுந்தீவு மற்றும் கச்சதீவு என பல்வேறு நில ஆக்கிரமிப்புகளை செய்து பண்பாட்டினை அழித்து வருவதாகவும் கவலை வெளியிட்டுள்ளார். பண்பாட்டு அம்சங்களை பேண வேண்டிய தொல்பொருள் திணைக்களங்களும் அரசுடன் இணைந்து செயற்படுவதானது தமிழினத்தினை அழிப்பதன் அடிப்படையாகவுள்ளதாக தெரிவித்தார். பண்பாடு மற்றும் கலாசாரங்களை தக்கவைத்து ஒரு இனம் தமது சுய உரிமைகளை கேட்டு கொள்ளலாம் என சர்வதேசம் கூறுகின்றது. அவ் வகையில் தேசியம், மரவு வழித்தாயகம், சுயநிர்ணயம் போன்றவற்றை இல்லாதொழித்து விட்டால் எவ்வாறு எமது இனத்தினை மீட்பது அத்தோடு உரிமைகளை எவ்வாறு  வென்றெடுப்பது எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.சிங்கள பேரினவாத அரசு தமிழர்களை அடக்கி ஒடுக்கி முழுவதுமாக சிங்கள, பௌத்த நாடாக உருவாக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். ஆகவே, இவற்றிற்கு எதிராக மக்கள்,அரசியல்வாதிகள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் குரலெழுப்பி உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement