• Sep 20 2024

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் - ஜாட்சன் பிகிராடோ தெரிவிப்பு!

Tamil nila / Aug 1st 2024, 9:49 pm
image

Advertisement

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் வடமாகாண இணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்துள்ளனர். 

அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல் முனைவின் இரண்டாம் வருடத்தையொட்டி ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு  கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு குறித்து யாழ்ப்பாணத்தில் வைத்து இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு நிலையான, கௌரவமான, உரிமைகளுடன் கூடிய நிலையான அரசியல் தீர்வு கோரி 2022 ஆம் ஆண்டு ஆவணி முதலாம் திகதி, சுழற்சி முறையிலான 100 நாட்கள் செயல் முனைவினை ஆரம்பித்து, 2022 கார்த்திகை எட்டாம் திகதி சமஷ;டி தீர்வுக்கான மக்கள் பிரகடனத்தை வெளியிட்டோம்.

இன்று வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களான நாம் எதிர்கொண்டு வரும் அரச இனவாத அடக்குமுறையில் இருந்து மீண்டு கௌரவமான, உரிமைகளை அனுபவிக்கும் பிரஜைகளாக வாழ வேண்டுமாயின் நிலையான அரசியல் தீர்வு அவசியம்.

ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான தீர்வு ஒன்றை யே நாம் திடமாக வலியுறுத்தி நிற்கிறோம்.

இலங்கையில் நாம் சிறுபான்மையினர் அல்ல. இலங்கையின் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் எமக்கான சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய இறைமையுள்ள மக்கள் சமூகத் தினராவோம்.எமது சுயநிர்ணய உரிமை, இறைமை என்பதை   சமஸ்டி   முறைமையின் மூலம் உறுதி செய்து கொள்ள திடசங்கற்பம் கொண்டுள்ளோம்.

இதுவரை காலமும் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசியல் தலைமைகள் அரசியல் தீர்வுகள் பற்றி வாயளவில் கதைத்து தமிழ் மக்களை ஏமாற்றி வந்துவிட்டனர். எவ்வளவு காலத்துக்கு எமது வருங்கால சந்ததியினரும் இந்த அடக்கு முறைகளையும் ஏமாற்றங்களையும் அனுபவிக்கப் போகின்றனர்.

எமது தலைமுறையுடன் துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவர ஒரு மக்கள் சமூகமாக ஒருங்கிணைந்து செயல்படுவோம். அதற்காக, அனைவரும் ஜனநாயக வழி நின்று செயல்படும் ஒரு சமூக இயக்கமாக பரிணமிக்க வேண்டும்.

சிங்கள அரசியல் தலைமைகளுக்கு நாம் பகிரங்கமான கோரிக்கையை முன் வைக்கிறோம். ஜனாதிபதி தேர்தல் போட்டி இடப்போகும் வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக  சமஸ்டி   முறையிலான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும். 

சமஸ்டி கொள்கையை முன்னெடுக்கும் நபரே இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும்.

தமிழ் பேசும் மக்களான எமது மொழி, மத, அரசியல், பொருளாதார உரிமைகளை பாதுகாத்து முன்னெடுக்கும், இனவாதத்தை எதிர்க்கும் வேட்பாளருக்கே தமிழ்  முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் வாக்களிப்போம். சமஷ்டி யே தீர்வு என அவர் மேலும் தெரிவித்தார். 






இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் - ஜாட்சன் பிகிராடோ தெரிவிப்பு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் வடமாகாண இணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்துள்ளனர். அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல் முனைவின் இரண்டாம் வருடத்தையொட்டி ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு  கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு குறித்து யாழ்ப்பாணத்தில் வைத்து இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,,,இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு நிலையான, கௌரவமான, உரிமைகளுடன் கூடிய நிலையான அரசியல் தீர்வு கோரி 2022 ஆம் ஆண்டு ஆவணி முதலாம் திகதி, சுழற்சி முறையிலான 100 நாட்கள் செயல் முனைவினை ஆரம்பித்து, 2022 கார்த்திகை எட்டாம் திகதி சமஷ;டி தீர்வுக்கான மக்கள் பிரகடனத்தை வெளியிட்டோம்.இன்று வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களான நாம் எதிர்கொண்டு வரும் அரச இனவாத அடக்குமுறையில் இருந்து மீண்டு கௌரவமான, உரிமைகளை அனுபவிக்கும் பிரஜைகளாக வாழ வேண்டுமாயின் நிலையான அரசியல் தீர்வு அவசியம்.ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான தீர்வு ஒன்றை யே நாம் திடமாக வலியுறுத்தி நிற்கிறோம்.இலங்கையில் நாம் சிறுபான்மையினர் அல்ல. இலங்கையின் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் எமக்கான சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய இறைமையுள்ள மக்கள் சமூகத் தினராவோம்.எமது சுயநிர்ணய உரிமை, இறைமை என்பதை   சமஸ்டி   முறைமையின் மூலம் உறுதி செய்து கொள்ள திடசங்கற்பம் கொண்டுள்ளோம்.இதுவரை காலமும் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசியல் தலைமைகள் அரசியல் தீர்வுகள் பற்றி வாயளவில் கதைத்து தமிழ் மக்களை ஏமாற்றி வந்துவிட்டனர். எவ்வளவு காலத்துக்கு எமது வருங்கால சந்ததியினரும் இந்த அடக்கு முறைகளையும் ஏமாற்றங்களையும் அனுபவிக்கப் போகின்றனர்.எமது தலைமுறையுடன் துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவர ஒரு மக்கள் சமூகமாக ஒருங்கிணைந்து செயல்படுவோம். அதற்காக, அனைவரும் ஜனநாயக வழி நின்று செயல்படும் ஒரு சமூக இயக்கமாக பரிணமிக்க வேண்டும்.சிங்கள அரசியல் தலைமைகளுக்கு நாம் பகிரங்கமான கோரிக்கையை முன் வைக்கிறோம். ஜனாதிபதி தேர்தல் போட்டி இடப்போகும் வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக  சமஸ்டி   முறையிலான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும். சமஸ்டி கொள்கையை முன்னெடுக்கும் நபரே இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும்.தமிழ் பேசும் மக்களான எமது மொழி, மத, அரசியல், பொருளாதார உரிமைகளை பாதுகாத்து முன்னெடுக்கும், இனவாதத்தை எதிர்க்கும் வேட்பாளருக்கே தமிழ்  முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் வாக்களிப்போம். சமஷ்டி யே தீர்வு என அவர் மேலும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement