• May 19 2024

கிறிஸ் பூதம் என்ற அச்சநிலையை போன்றே – சிறுவர்கள் கடத்தப்படும் செய்தி – சுரேஸ் சுட்டிக்காட்டு.! samugammedia

Tamil nila / May 17th 2023, 4:40 pm
image

Advertisement

கடந்த காலத்தில் கிறிஸ்பூதம் என்ற அச்சநிலை தோற்றுவிக்கப்பட்டதை போன்றே தற்போது சிறுவர்கள் கடத்தப்படுவதான செய்திகள் அதிகம் பரப்பப்படுவதாக ஈழ மக்கள் புரட்சிக முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இதனால் பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவதற்கு அச்சமடைந்துள்ளதாகவும் தீரென இவ்வாறான செய்திகள் அதிக்க என்ன காரணம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் படையினர்களின் எண்ணிக்கையை குறைக்குமாறு அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ள பின்னணியில் இவ்வாறான செய்திகள் பரப்பபட்டு ஒரு அச்சநிலையை தோற்றுவிக்க முயற்சிக்கப்படுவதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்தவுள்ளதாகவும் எனவே அதுவரையில் இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்கமாட்டார் என்றும் அவ்வாறு குறைத்தால் அவர் தேர்தலில் தோல்வியடையும் வாய்ப்பு உள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.


கிறிஸ் பூதம் என்ற அச்சநிலையை போன்றே – சிறுவர்கள் கடத்தப்படும் செய்தி – சுரேஸ் சுட்டிக்காட்டு. samugammedia கடந்த காலத்தில் கிறிஸ்பூதம் என்ற அச்சநிலை தோற்றுவிக்கப்பட்டதை போன்றே தற்போது சிறுவர்கள் கடத்தப்படுவதான செய்திகள் அதிகம் பரப்பப்படுவதாக ஈழ மக்கள் புரட்சிக முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.இதனால் பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவதற்கு அச்சமடைந்துள்ளதாகவும் தீரென இவ்வாறான செய்திகள் அதிக்க என்ன காரணம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.சர்வதேச நாணய நிதியம் படையினர்களின் எண்ணிக்கையை குறைக்குமாறு அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ள பின்னணியில் இவ்வாறான செய்திகள் பரப்பபட்டு ஒரு அச்சநிலையை தோற்றுவிக்க முயற்சிக்கப்படுவதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.ரணில் விக்கிரமசிங்க அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்தவுள்ளதாகவும் எனவே அதுவரையில் இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்கமாட்டார் என்றும் அவ்வாறு குறைத்தால் அவர் தேர்தலில் தோல்வியடையும் வாய்ப்பு உள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement