• Apr 27 2024

நாட்டை நாசப்படுத்தியது ஜே.வி.பி.! – ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

Chithra / Feb 1st 2023, 11:27 am
image

Advertisement


தேசிய மக்கள் சக்தியை கண்டு தாம் அஞ்சவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கடந்த 53 வருடங்களாக ஜே.வி.பி. நாட்டை நாசப்படுத்தியது என்றும் 1983க்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு அவர்கள் செய்த நாச வேலைகள் தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவ சந்திப்பிலேயே எஸ்.எம். மரிக்கார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தல்களில் பெரிய வெற்றியைப் பெறுவார்கள் என ஜே.வி.பி.யினர் கூறினாலும் தம்மை பிடிக்க, வாக்காளர் எண்ணிக்கையை 8 மடங்கு அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

1971 ஆம் ஆண்டு கிளர்ச்சி மூலம் நாட்டை அழித்த ஜே.வி.பி., அன்றிலிருந்து தொடர்ந்து நாட்டில் நாசவேலைகளை மேற்கொண்டு வருகிறது என்றும் எஸ்.எம். மரிக்கார் குற்றம் சாட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் அவர்கள் பொருளாதாரம், விவசாயம், கல்வி மற்றும் ஏனைய துறைகளை அபிவிருத்தி செய்வதற்கான தமது திட்டங்களை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

நாட்டை நாசப்படுத்தியது ஜே.வி.பி. – ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு தேசிய மக்கள் சக்தியை கண்டு தாம் அஞ்சவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.கடந்த 53 வருடங்களாக ஜே.வி.பி. நாட்டை நாசப்படுத்தியது என்றும் 1983க்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு அவர்கள் செய்த நாச வேலைகள் தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவ சந்திப்பிலேயே எஸ்.எம். மரிக்கார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.எதிர்வரும் தேர்தல்களில் பெரிய வெற்றியைப் பெறுவார்கள் என ஜே.வி.பி.யினர் கூறினாலும் தம்மை பிடிக்க, வாக்காளர் எண்ணிக்கையை 8 மடங்கு அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.1971 ஆம் ஆண்டு கிளர்ச்சி மூலம் நாட்டை அழித்த ஜே.வி.பி., அன்றிலிருந்து தொடர்ந்து நாட்டில் நாசவேலைகளை மேற்கொண்டு வருகிறது என்றும் எஸ்.எம். மரிக்கார் குற்றம் சாட்டியுள்ளார்.எவ்வாறாயினும் அவர்கள் பொருளாதாரம், விவசாயம், கல்வி மற்றும் ஏனைய துறைகளை அபிவிருத்தி செய்வதற்கான தமது திட்டங்களை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement