• Jun 22 2024

மரத்தில் பரண் கட்டி போதைப்பொருள் விற்பனை செய்த கேடிப் பெண்! samugammedia

Chithra / Jul 27th 2023, 10:53 am
image

Advertisement

ஹெரோயின் போதைப்பொருள், தேசிய அடையாள அட்டைகள், வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன் நேற்றைய தினம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வயங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெயாங்கொட மாரபொல பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

1 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின், 6 தேசிய அடையாள அட்டைகள், 5 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் 8 கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

விசாரணையில் சந்தேகநபர் தனது வீட்டை ஒட்டியுள்ள வனப்பகுதியில் உள்ள பெரிய மரத்தின் உச்சியில் மரத்தடிகள் மற்றும் பலகைகளால் ஆன பரணை அமைத்து யா போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

பணத்தை பையில் போட்டு கயிறு மூலம் மேலே அனுப்பினால், மேலிருந்து போதைப்பொருளை கயிறு வழியாக இறக்கி விற்பனையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

பரணிலிருந்து சுற்றுவட்டாரப் பகுதிகளை பரவலாக அவதானிக்க முடிவதாகவும், வெளியாட்கள் நடமாட்டம் பொலிஸ் நடமாட்டம் என்பவற்றை அங்கிருந்தே அவதானித்து குறித்த பெண் செயற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

மரத்தில் பரண் கட்டி போதைப்பொருள் விற்பனை செய்த கேடிப் பெண் samugammedia ஹெரோயின் போதைப்பொருள், தேசிய அடையாள அட்டைகள், வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன் நேற்றைய தினம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வயங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.வெயாங்கொட மாரபொல பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.1 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின், 6 தேசிய அடையாள அட்டைகள், 5 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் 8 கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .விசாரணையில் சந்தேகநபர் தனது வீட்டை ஒட்டியுள்ள வனப்பகுதியில் உள்ள பெரிய மரத்தின் உச்சியில் மரத்தடிகள் மற்றும் பலகைகளால் ஆன பரணை அமைத்து யா போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.பணத்தை பையில் போட்டு கயிறு மூலம் மேலே அனுப்பினால், மேலிருந்து போதைப்பொருளை கயிறு வழியாக இறக்கி விற்பனையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்பரணிலிருந்து சுற்றுவட்டாரப் பகுதிகளை பரவலாக அவதானிக்க முடிவதாகவும், வெளியாட்கள் நடமாட்டம் பொலிஸ் நடமாட்டம் என்பவற்றை அங்கிருந்தே அவதானித்து குறித்த பெண் செயற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement